உள்ளடக்கத்துக்குச் செல்

அரிசில் கிழார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரிசில் கிழார் சங்க காலத்துப் புலவர்களில் ஒருவர். புறநானூற்றில் 146,[1] 230,[2] 281,[3] 285,[4] 300,[5] 304,[6] 342 எண்ணுள்ள ஏழு பாடல்களும் குறுந்தொகையில் 193[7] எண்ணுள்ள ஒரு பாடலும் அரிசில் கிழார் பாடியவை ஆகும். பதிற்றுப்பத்து 8ஆம் பத்திலுள்ள 10 பாடல்களுங்கூட இவரால் பாடப்பட்டவையே.
அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினி, மனைவி கண்ணகியைத் துறந்து வாழ்ந்த வையாவிக் கோப்பெரும் பேகன், தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை ஆகிய அரசர்கள் இப் புலவரால் பாடப்பட்டுள்ளனர்.

அரிசில் என்பது ஓர் ஆறு. அது கும்பகோணம் எனப்படும் குடந்தை அருகே ஓடுகிறது. இங்குதான் அரசில் கிழார் வாழ்ந்தார் எனப்படுகிறது. திருஞான சம்பந்தரின் மூன்றாம் திருமுறை 19 திரு அம்பர்த் திருப்பெருங்கோயில் பதிகத்தின் முதல் பாடலில் வரும் 'அரிசில் அம் பெருந்துறை அம்பர் மாநகர்' என வரும் பாடலால் உணரலாம். இந்த அரிசிலாற்றங்கரையில் உள்ள அம்பர் நகரில் ஒருந்துகொண்டு ஆண்ட சங்க கால மன்னன் 'அம்பர் கிழான் அருவந்தை'

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

வெளி இணைப்பு

[தொகு]


  1. அரிசில் கிழார் பாடல் புறநானூறு 146
  2. அரிசில் கிழார் பாடல் புறநானூறு 230
  3. அரிசில் கிழார் பாடல் புறநானூறு 281
  4. அரிசில் கிழார் பாடல் புறநானூறு 285
  5. அரிசில் கிழார் பாடல் புறநானூறு 300
  6. அரிசில் கிழார் பாடல் புறநானூறு 304
  7. அரிசில் கிழார் குறுந்தொகைப் பாடல் 193
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிசில்_கிழார்&oldid=3554657" இலிருந்து மீள்விக்கப்பட்டது