அழகன்குளம்
அழகன்குளம் | |
— சிற்றூர் — | |
ஆள்கூறு | 9°21′19″N 78°58′06″E / 9.355323°N 78.96831°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | இராமநாதபுரம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | சிம்ரன்சித் சிங் கக்லோன், இ. ஆ. ப [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 0 மீட்டர்கள் (0 அடி) |
அழகன் குளம் (ஆங்கிலம் : Alagankulam) தமிழ்நாட்டில், இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் வட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அழகன்குளம் ஊராட்சியில் அமைந்த கிராமம் ஆகும்.[4][5][6]
வரலாறு
[தொகு]அழகன்குளம், பாண்டியர்களின் ஒரு துறைமுக நகராகவும் விளங்கியது; மன்னராட்சி நடைபெற்ற இப்பகுதியின் பெயர் அழகாபுரி ஆகும். பின்னர் மருவி அழகன்குளம் என்றும் அழைக்கப்பட்டு வருகின்றது. மன்னர் வாழ்ந்ததற்கு சான்றாக மன்னரின் கோட்டை சிதிலமடைந்து, மண்ணில் புதைந்துள்ளது, புதையுண்ட பகுதி மேடாக காட்சியளிக்கப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் தொல்லியல் துறையினரால் மன்னரின் வாள், கேடயம், பொற்காசுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[7][8]
அமைவு
[தொகு]இராமநாதபுரத்தின் கிழக்கே அமைந்த்துள்ள இப்பகுதியின் புவியியல் அமைவு 9°21'17"N 78°58'9"E ஆகும்.வடக்கே பாக் நீரிணையும் தெற்கே வைகை ஆறும் எல்லையாக உள்ளது. கிழக்கே வைகை முகத்துவாரமும், மேற்கே பனைக்குளம் கிராமமும் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை 49 உடன் நதிப்பாலம் மூலமாக இக்கிராமம் இணைக்கப்பட்டுள்ளது.
மக்கள்
[தொகு]சுமார் 6000 அதிகமாக மக்கள் வாழ்கிறார்கள், இங்குள்ள மக்களின் தொழில் விவசாயம் மற்றும் அரபு நாடுகளில் பணி புரிபவர்கள்.
இ-சேவை
[தொகு]அரசின் மானியம்,ஊக்கதொகை, சான்றிதழ்கள் பெற கூட்டுறவு வங்கி அருகில் இசேவை மையம் செயல்படுகின்றது
சிறப்பு
[தொகு]இங்கு ஊராட்சி மன்ற தலைவர்கான தேர்தல் இதுவரை நடைபெற்றதில்லை, 5 வருடம் இந்துக்கள் சார்பாக அடுத்த 5 வருடம் இஸ்லாமியர்கள் சார்பாகவும் தேர்ந்தெடுக்க படுகிறார்கள். மதநல்லிணக்கத்திற்கு இந்த ஊர் இந்தியாவிற்கே ஒரு முன்னுதாரனமாக இருக்கின்றது.
அழகை பீச் என்றழைக்கபடும் அழகன்குளம் கடற்கரை இவ்வூரின் தனிச்சிறப்பு.
விருந்தினர்களை உபசறிப்பதில் அழகை மக்கள் ஒருபடி மேல் என்றே கூறலாம். அதற்கு சான்று முஸ்லிம் பொதுஜன சங்கத்தில் பசும்பொன் தேவர் ஐயா, இராஜாஜி ஐயா அவர்கள் வருகை தந்தபோது கைபட எழுதிய வாழ்த்து மடல்கள் இன்றளவும் சங்கத்தினர்களால் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
தொழில்
[தொகு]பண்டைய காலம் தொட்டே வெற்றிலை கொடிக்கால், மீன்பிடி மற்றும்,கடல் வாணிபமே நிகழ்ந்துள்ளது.மலேசியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு வாணிப தொடர்பு இருந்துள்ளது.தற்போது வளைகுடா நாடுகள் மற்றும் கிழக்காசிய நாடுகளில் பலர் பணி புரிகின்றனர். இப்பகுதியில் விளையும் வெற்றிலை மாவட்ட அளவில் புகழ் பெற்றதாகும்.விவசாயமும் நடைபெறுகின்றது.
போக்குவரத்து
[தொகு]பெரும்பாலும் பேருந்து போக்குவரத்தே பயன்படுகிறது. இது தவிர மகிழுந்து போக்குவரத்தும் உள்ளது.
கல்வி
[தொகு]இங்குள்ள பலரும் மருத்துவம், பொறியியல், வழக்குரைஞர்களாகவும் மலேசியாவிலும் பணிபுரிகின்றனர். கல்விக்கு இங்கு இஸ்லாமிய பாடசாலைகளான அல்மதரசத்துல் ரஷீதிய்யா,அஸ்ரஃபுல் உலூம் என்னும் ஹிப்லு மதரஸாவும் உள்ளது. புதையுண்ட கோட்டையின் மேட்டுப்பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. தனியாரின் நஜியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும், நபீசா அம்மாள் நர்சரிப்பள்ளியும் அமைந்துள்ளன. ஒரு அரசு தொடக்கப்பள்ளியும் அமைந்துள்ளது.
விழாக்கள்
[தொகு]இந்துக்களின் வைகாசி விசாகம், இஸ்லாமியப் பெருநாள்களும், மதரஸா மாணவர்களின் குர்ஆன் ஓதும் போட்டி, மீலாது விழா ஆகியவை பிரபலம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-02. பார்க்கப்பட்ட நாள் 2013-03-18.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2013-03-18.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-03-18.
- ↑ http://www.tnarch.gov.in/excavation/ala.htm பரணிடப்பட்டது 2012-09-23 at the வந்தவழி இயந்திரம் DEPT. OF ARCHAEOLOGY
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-22. பார்க்கப்பட்ட நாள் 2013-03-18.