உள்ளடக்கத்துக்குச் செல்

அவார்டு அயிக்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அவார்டு ஆத்தவே அயிக்கன்
அவார்டு அயிக்கன்
பிறப்பு(1900-03-08)மார்ச்சு 8, 1900
ஒபோக்கன், நியூ செர்சி
இறப்புமார்ச்சு 14, 1973(1973-03-14) (அகவை 73)
செயின்ட் லூயிஸ், மிசூரி
வாழிடம்ஐக்கிய அமெரிக்கா
குடியுரிமைஅமெரிக்கர்
துறைஇயற்பியல், கணினியியல்
பணியிடங்கள்ஆர்வர்டு பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்விஸ்கொன்சின் பல்கலைக்கழகம்
ஆர்வர்டு பல்கலைக்கழகம் (கலாநிதிப் பட்டம்)
அறியப்படுவதுதன்னியக்கத் தொடர்க் கட்டுப்பாட்டுக் கணினி
விருதுகள்ஆரி எச். கூடு நினைவு விருது (1964)
எடிசன் பதக்கம் (1970)

அவார்டு ஆத்தவே அயிக்கன் (Howard Hathaway Aiken, மார்ச் 8 1900 - மார்ச் 14, 1973) என்பவர் ஓர் இயற்பியலாளரும் கணினியியல் அறிவியலாளரும் ஆவார்.[1] தன்னியக்கத் தொடர்க் கட்டுப்பாட்டுக் கணினியைக் கண்டுபிடித்தவர் இவரே.[2]

அயிக்கன் விஸ்கொன்சின் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றார்.[3] பின்னர், கலாநிதிப் பட்டத்தை 1939ஆம் ஆண்டு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பெற்றார்.[4]

தனிப்பட்ட வாழ்வு

[தொகு]

ஹவார்ட் அயிக்கன் 1900ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் திகதி பிறந்தார்.[5]

இவர் மூன்று தடவைகள் திருமணம் செய்தார். முதலாவதாக உலூசி மஞ்சிலையும் இரண்டாவதாக ஆக்னசு மோண்ட்கோமரியையும் மூன்றாவதாக மேரி மெக்ஃபார்லாந்தையும் திருமணம் செய்தார். இவருக்கு இரேச்சல் ஆன், எலிசபெத் என இரு பிள்ளைகள்.

அயிக்கன் ஐக்கிய அமெரிக்காவின் கடற்படை நிறுவனமொன்றிலும் வேலை செய்தார்.[6]

பின்னர், செயின்ட் லூயிசிற்கு ஒரு சுற்றுலாவுக்காகச் செல்லும்போது காலமானார்ர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ["ஹவார்ட் ஹாத்தவே அயிக்கன் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2015-03-30. பார்க்கப்பட்ட நாள் 2012-04-16. ஹவார்ட் ஹாத்தவே அயிக்கன் (ஆங்கில மொழியில்)]
  2. ["ஹவார்ட் எச். அயிக்கன். வாழ்க்கை வரலாறு (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-03-22. பார்க்கப்பட்ட நாள் 2012-04-16. ஹவார்ட் எச். அயிக்கன். வாழ்க்கை வரலாறு (ஆங்கில மொழியில்)]
  3. ஹொவார்ட் ஹாத்தவே அயிக்கன் (ஆங்கில மொழியில்)
  4. ஹவார்ட் அயிக்கன் (ஆங்கில மொழியில்)
  5. ["ஹவார்டு அயிக்கன் புத்தியற்காலக் கணினியின் ஒரு தந்தையருள் ஒருவர் ஆவார். (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-06-13. பார்க்கப்பட்ட நாள் 2012-04-16. ஹவார்டு அயிக்கன் புத்தியற்காலக் கணினியின் ஒரு தந்தையருள் ஒருவர் ஆவார். (ஆங்கில மொழியில்)]
  6. ஹொவார்ட் அயிக்கன் (ஆங்கில மொழியில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவார்டு_அயிக்கன்&oldid=3844582" இலிருந்து மீள்விக்கப்பட்டது