ஆசிய நெடுஞ்சாலை 6
Appearance
ஆசிய நெடுஞ்சாலை 6 அல்லது ஏஎச்6 (AH6), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். தென் கொரியாவிலுள்ள புசான் என்னும் இடத்திலிருந்து ரசியாவுக்கும் பெலாரசுக்கும் இடையிலான எல்லை வரை செல்லும் இது, ஆசியாக் கண்டத்தைச் சேர்ந்த 5 நாடுகளூடாகச் செல்கிறது. இதன் மொத்த நீளம் 10,475 கிலோமீட்டர்.
நாடுகள்
[தொகு]இந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.
- சீனா - 1,523 கிமீ
- தென் கொரியா - 855 கிமீ
- கசாக்சுத்தான் - 179 கிமீ
- வட கொரியா - 407 கிமீ
- ரசியக் கூட்டமைப்பு - 7,443 கிமீ
உசாத்துணை
[தொகு]- "எஸ்காப்" நிறுவனத்தின் போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பிரிவு, ஆசிய நெடுஞ்சாலைகள் கையேடு பரணிடப்பட்டது 2008-05-26 at the வந்தவழி இயந்திரம், 2003. (ஆங்கில மொழியில்)