ஆசிலியின் தடை முடிச்சு
Appearance
ஆசிலியின் தடை முடிச்சு | |
---|---|
பெயர்கள் | ஆசிலியின் தடை முடிச்சு, ஆசிலியின் தடை முடிச்சு, முத்துக் குளிப்போர் தடை முடிச்சு |
வகை | தடை |
மூலம் | கிளிபர்ட் ஆசிலி, c. 1910 |
ABoK |
|
ஆசிலியின் தடை முடிச்சு (Ashley's stopper knot) என்பது கிளிபர்ட் டபிள்யூ ஆசிலி (Clifford W. Ashley) என்பாரால் 1910 ஆம் ஆண்டளவில் உருவாக்கப்பட்ட ஒரு தடை முடிச்சு ஆகும். மூவிலைத் தோற்ற முகப்புக் கொண்ட இம் முடிச்சு கயிற்று நுனியில் போடப்படுகிறது. வேறு பல முடிச்சுகளிலும் பார்க்கத் துளைகளினூடு கயிறு இழுபடுவதைத் தடுக்கும் தன்மை இதற்கு அதிகம் உண்டு. முத்துக் குளிக்கும் குழுவொன்றின் படகில் காணப்பட்ட தடை முடிச்சொன்றைப் பார்த்து அதைப்போல் முடிச்சுப்போட முயன்றபோது ஆசிலி இதனை உருவாக்கினார். உண்மையில் படகில் கண்ட முடிச்சு நீரினால் வீங்கிய எட்டுவடிவத் தடை முடிச்சே எனப் பின்னர் தெரியவந்தது.
போடும் முறை
[தொகு]- படத்தில் காணப்படுவது போன்ற தடம் ஒன்றைப் போட்டுக்கொள்ள வேண்டும்.
- முடிச்சை நிலைப்பகுதியைச் சுற்றி இறுக்கியபின், செயல்முனையை தடத்தினூடாகச் செலுத்வேண்டும்.
- நிலைப்பகுதியை இழுத்து தடத்தை இறுக்கிய பின் செயல் முனையை இழுத்துத் தளர்வுகள் ஏதுமிருப்பின் இறுக்கிக்கொள்ள வேண்டும். நிலைப்பகுதி முடிச்சுக்குள் செல்லும் இடத்தில் முடிச்சு ஒழுங்கான மூவிலைத் தோற்றம் கொண்டதாகக் காணப்படும்.
உசாத்துணை
[தொகு]- பட்வர்த், ஜெஃப்ரி (2001). The Ultimate Encyclopedia of Knots & Ropework. அன்னெசு பப்ளிசிங் லிட். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-84309-146-1.
- ஆசிலி, கிளிபர்ட் டபிள்யூ. (1944). ஆசிலி முடிச்சுக்கள் பற்றிய நூல். டபிள்டே அண்ட் கம்பனி. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-385-04025-3.
குறிப்புகள்
[தொகு]