ஆன்னி ஜம்ப் கெனான்
ஆன்னி ஜம்ப் கெனான் Annie Jump Cannon | |
---|---|
1922 இல் ஆன்னி ஜம்ப் கெனான் | |
பிறப்பு | டோவர்[1] | திசம்பர் 11, 1863
இறப்பு | ஏப்ரல் 13, 1941 கேம்பிரிஜ், மாசசூசெட்ஸ் | (அகவை 77)
தேசியம் | அமெரிக்கர் |
அறியப்படுவது | விண்மீன் வகைப்பாடு |
தாக்கம் செலுத்தியோர் | சேரா பிரான்செசு வைட்டிங்கு, அமெரிக்க வானியலாளர் |
விருதுகள் | என்றி டிரேப்பர் விருது (1931) |
ஆன்னி ஜம்ப் கெனான் (Annie Jump Cannon), (திசம்பர் 11, 1863 – ஏப்பிரல் 13, 1941) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவரது விண்மீன் அட்டவணைப்பணி இக்கால விண்மீன் வகைப்பாட்டிற்கு வித்திட்டது. இவரும் எட்வார்டு சி. பிக்கெரிங்கும் இணைந்து ஆர்வார்டு வகைப்பாட்டுத் திட்டம் எனும் வெப்பநிலைசார்ந்த முதல் சீரிய விண்மீன்களின் வகைப்பாட்டு முறையை உருவாக்கினர். இவர் தன் வாழ்நாள் முழுவதும் காதுகேளாதவராகவே இருந்தார்.
சொந்த வாழ்க்கை
[தொகு]ஆன்னி ஜம்ப் கெனான் தெலாவேரில் உள்ள டோவரில் 1863 திசம்பர் 11இல் பிறந்தார். இவர் கப்பல்கட்டுநரும் அரசு மன்ற உறுப்பினருமான வில்சன் கெனான் என்பவருக்கும் அவரது இரண்டாம் மனைவியான மேரி ஜம்ப்புக்கும் மூத்தமகவாகப் பிறந்தார்.[2] முதலில் அவரது தாய்தான் இவருக்கு விண்மீன்குழுக்களைப் பயிற்றுவித்துள்ளார். அவரே இவரைத் தன் சொந்த ஆர்வங்களின்படி தன்வாழ்வை அமைத்துக்கொள்ள ஊக்கம் ஊட்டியுள்ளார். அவரது கல்வி கணிதம், வேதியியல், உயிரியல் புலங்களில் வெல்லெசுலி கல்லூரியில் அமையப் பரிந்துரைத்துள்ளார்.[3] கெனான் தாயின் அறிவுரையை ஏற்று தனக்கு விருப்பமான வானியல் கல்வியைப் பயின்றார். இவர் குழந்தையிலேயோ அல்லது வளரிளம்பருவத் தொடக்கத்திலேயோ காதுகேளாமையால் இன்னலுறலானாராம். இது நடந்த சரியான காலமும் காரணமும் தெளிவாக அறியமுடியவில்லை.[4] சிலநேரங்களில் இது செங்காய்ச்சலால் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.[5] காதுகேளாமையால் அவரால் பிறரோடு இயல்பாகப் பழக முடியவில்லை. எனவே அவர் தன் தொழிலிலேயே மூழ்கியிருந்தார். இவர் திருமணமே செய்துகொள்ளவில்லை. எனவே இவருக்குக் குழந்தைகளும் கிடையாது.[6]
கல்வி
[தொகு]இப்போது உவெசுலிக் கல்லூரி என்று அழைக்கப்படும் வில்மிங்டன் கருத்தரங்கக் கல்விக்கழகத்தில், கெனான் ஒரு சிறந்த மாணவராகப் பயின்றார். குறிப்பாக்க் கணிதத்தில் நல்ல வல்லமை பெற்றிருந்தார். அவர் 1880இல் மசாச்சூசட்டில் உள்ள வெல்லெசுலிக் கல்லூரியின் பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இது அமெரிக்காவிலேயே பெண்கள் பயிலும் மிகச் சிறந்த பள்ளியாகும். இங்கு இவர் இயற்பியலும் வானியலும் கற்றார்.[7]
இவர் அப்போது அமெரிக்கவில் உள்ள மிகச் சில இயற்பியலாளருள் ஒருவரான சாரா பிரான்சிசு வைட்டிங் என்பவரிடம் கல்வி கற்றார். வெல்லெசுலிக் கல்லூரியில் முதல் மாணவியரானார். இவர் 1884இல் இயற்பியலில் பட்டம் பெற்றார். பிறகு பத்தாண்டுகளுக்கு வீட்டில் வந்து தங்கியிருந்தார்.[7] ஓரளவுக்கு, கெனானுக்குப் பிடித்த வேலை பெண்களுக்குத் தரப்படாததால் இது நேர்ந்தது.
இக்கால இடைவெளியில் அவர் ஒளிப்படக்கலையில் நல்ல பயிற்சி பெற்றுள்ளர். 1892இல் ஐரோப்பா முழுவதும் சென்று தன் பிலேர்பேழைக் கருவியால் ஒளிப்படங்கள் எடுத்துள்ளார். அவர் விட்டுக்குத் திரும்பியதும் அவரது படங்களும் உரையும் ’’கொலம்பசின் காலடிச் சுவட்டில்’’ என்ற தலைப்பில் பிலேர் குழுமத்தால் வெளியிடப்பட்டுள்ளன. இது மலராகச் சிகாகோவில் 1893இல் உலகக் கொலம்பிய காட்சியரங்கில் சுற்றுக்கும் விடப்பட்டுள்ளது.[8]
விரைவில் அவர் செங்காய்ச்சல் கண்டு முழு காதுகேளாமையுற்றார்.[5] இதனால் அவர் பிறரோடு பழக முடியாமல் போயிற்று. ஆகவே அவர் தன் முழுநேரத்தையும் தன்பணியில் செலுத்தலானார். இவர் திருமணமே செய்து கொள்ளவில்லை.[6]
கெனானின் தாயார் 1894இல் இறந்துவிடவே அவரது வீட்டு வாழ்க்கை அரியதாகியது. எனவே வெல்லெசுலிக் கல்லூரியின் தனது முன்னாள் பயிற்றுநரான பேராசிரியர் சாரா பிரான்சிசு வைட்டிங்குக்கு அங்கே வேலை கிடைக்குமாவெனக் கேட்டுக் கடிதம் எழுதினார். வைட்டிங் இவரைத் தன் இளமியற்பியல் ஆசிரியராக அமர்த்திக் கொண்டார். இது அக்கல்லூரியில் இயற்பியலும் வானியலும் பயில வாய்ப்பளித்தது. வைட்டிங்கும் இவரைக் நிறமாலையியலைப் படிக்குமாறு தூண்டினார்.[7]
வானியற் கல்வியைத் தொடர்ந்தவாறே, நல்லதொரு தொலைநோக்கியை அணுக, ’’சிறப்பு மாணவராக’’ இராட்லிளிஃப் கல்லூரியில் சேர்ந்தார்.[9] இராட்கிளிஃப் ஆர்வார்டுக் கல்லூரிக்கருகே அமைக்கப்பட்டிருந்தது. ஆர்வார்டுக் கல்லூரிப் பேராசிரியர்கள் அங்கே இராட்கிளிஃப் பெண்களுக்கு அவர்களது விரிவுரைகளை மீண்டும் ஆற்றினர். இதனால் அவர் ஆர்வார்டு கல்லூரி வான்காணகத்தை அணுகுதல் எளிதாகியது. மேலும் 1896இல் எட்வார்டு சி. பிக்கெரிங் அந்த வான்காணகத்தில் கெனானைத் தன் உதவியாளராக அமர்த்திக்கொண்டார். கெனான் 1907 அளவில் தன் படிப்பை முடித்து வெல்லெசுலியில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[5]
தொழில்முறைப்பணி
[தொகு]கெனான் 1896இல் "பிக்கெரிங்கின் பெண்" உறுப்பினர் ஆனார்.[11] இது வானில் உள்ள ஒளிப்படப் பருமை எண் 9 கொண்ட ஒவ்வொரு விண்மீனையும் படம்பிடித்து வரைந்து என்றி டிரேப்பர் அட்டவணையை நிரப்பி முடிக்க, ஆர்வார்டு வான்காணக இயக்குநரான எட்வார்டு சி. பிக்கெரிங் அமர்த்தும் பெண்பாலாருக்கான பணியாகும்.
மருத்துவரும் பயில்நிலை வானியலாளருமான என்றி டிரேப்பர் எனும் செல்வந்தரின் விதவை மனைவி இந்த வேலைக்கான நிதியை ஒதுக்கி இப்பணியை ஏற்பாடு செய்துள்ளார். இங்கு ஆய்வகத்தில் ஆண்கள் தொலைநோக்கியை இயக்கிப் படமெடுக்க, பெண்கள் அத்தகவல்களை ஆய்வு செய்து வானியல் கணக்கீடுகளைச் செய்வர். மேலும் பகலில் அவற்றை அட்டவணைப்படுத்துவர்.[9] பிக்கெரிங் இந்த நீண்ட கால அட்டவணைத் திட்டத்தினை உருவாக்கினார். இத்திட்டத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு எண்ணிக்கையில் விண்மீன்களின் வகைப்பாட்டுக்கான ஒளியியல் கதிர்நிரல்களைப் பெற்று அவற்றைக் கொண்டு கதிர்நிரலால் விண்மீன்களை வகைப்படுத்தி சுட்டி (Index) உருவாக்குவர். இதில் அளவீடுகள் எடுப்பதே அரிது. அதைவிட அரியது அறிவார்ந்த வகைப்பாட்டை உருவாக்குவதாகும்.
டிரேப்பர் அட்டவணைப்பணி தொடங்கிய சில காலத்துக்குள்ளேயே விண்மீன்களை வகைப்படுதுவதில் கருத்து வேறுபாடு உருவாகி விட்டது. முதலில் நெட்டி பரார் பகுப்பாய்வைத் தொடங்கினார். ஆனால் சில மாதங்களுக்குள் திருமணம் செய்து கொள்ள இப்பணியைவிட்டு விலகினார். எனவே இப்பணி என்றி டிரேப்பரின் உறவினரான அந்தோணியோ மௌரியிடம் விடப்பட்டது. இவர் சிக்கலான வகைபாட்டு முறையைக் கடைபிடிக்க விரும்பினார். இந்த திட்டத்தை மேற்பார்வையிட்டுவந்த வில்லியமினா பிளெமிங்[11] மிகவும் எளிய நேரடியான முறையை விரும்பினார்.[7] கெனான் இருவருக்கும் இடையில் சந்துசெய்வித்து பொலிவுமிக்க தென் அரைக்கோள விண்மீன்களை ஆயத் தொடங்கினார். இவற்றுடன் இவர் ஒரு மூன்றாம் அமைப்பைப் பயன்படுத்தினார். இம்மூன்றாம் முறை விண்மீன்களை O, B, A, F, G, K, M எனும் கதிர்நிரல் சார்ந்த வகுப்புகளாகப் பிரிப்பதாகும். இவரது முறை பால்மர் உட்கவர் வரிகளின் வலிமையைப் பொறுத்தது. உடுக்கண வெப்பநிலைகளில் உட்கவர் வரிகளைப் புரிந்துகொண்டதும் இவரது வகைபாட்டு அமைப்பு, அண்மைய விண்மீன் பட்டியல்களைத் தவிர்க்க, மீள்வரிசை படுத்தப்பட்டது. கெனான் இதற்காக விண்மீன் வகைப்பாட்டை எளிதாக நினைவுகொள்ள, "Oh Be a Fine Girl, Kiss Me" என்ற நினைவியை உருவாக்கினார்.[7] கெனான் தனது முதல் உடுக்கணக் கதிர்நிரல்களை 1901இல் வெளியிட்டார்.
வெறும் இல்லக்கிழத்திகளாக வாழாமல் ’’வரம்பு மீறி’’ வேலை செய்வதற்காக முதலில் கண்டிக்கப் பட்டனர். இத்துறையில் பெண்கள் உதவியாளராக மட்டுமே உயர முடியும். மேலும் அவர்களுக்கு வாரத்தில் ஆறுநாட்களும் நாளுக்கு ஏழுமணிநேர வேலையும் மணிக்கு 25 செண்டு பணமும் மட்டுமே தரப்படும்.[5] ஆனால் கெனான் இத்துறையில் தனது ஈடிணையற்ற பொறுமையாலும் உழைப்பாலும் தன்னிகரற்று வளர்ந்தார். ஏன், அவர் வான்காணக ஆடவருக்கே பல உதவிகள் புரிந்து நல்ல பெயருடன் திகழ்ந்தார். இவர் தரகு பங்களிப்புக்கும் உலகளவில் தூதரைப் போல ஆடவர்களிடையே சாதனப் பரிமாற்றங்களுக்கும் துனை நல்கினார். இவர் பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதினார். மேலும் 1933இல் சிகாகோவில் நடந்த உலக விழாவில் தொழில்முறைப் பெண்களுக்கான பேராளராகக் கலந்துக் கொண்டார்.[12]
கெனானின் உறுதிப்பாடும் கடுமையான உழைப்பும் பெரும்பயனைத் தந்தன. அவர் வேறு எவருமே தம் வாழ்நளில் செய்திராத அளவுக்கு அதாவது 500,000 விண்மீன்களை வகைப்படுத்தினார். மேலும் அவர் 300 மாறுபடும் விண்மீன்களையும் ஐந்து வளிம ஒண்முகில்களையும், ஒரு கதிர்நிரல் இரும விண்மீனையும் கண்டுபிடித்தார். மேலும் 200,000 மேற்கோள்கள் அடங்கிய நூல்தொகை ஒன்றையும் உருவாக்கினார்.[13] அவற்றின் கதிர்நிரல் அமைவைப் பார்த்தே மூன்று விண்மீன்களை ஒரு மணித்துளிக்குள் வகைப்படுத்திவிடுவாராம். உருப்பெருக்காடியைப் பயன்படுத்தினால் கண்ணால் பார்க்கும் பொலிவை விட 16 மடங்கு மங்கிய, அதாவது பொலிவெண் 9 அளவுக்கு மங்கிய, விண்மீன்களைக் கூட வல்லமையைப் பெற்றிருந்துள்ளார்.[5]
பன்னாட்டு வானியல் ஒன்றியம் 1922 மே 9 இல் கெனானின் விண்மீன் வகைப்பாட்டு முறையை ஒரு சில மாற்றங்களுடன் ஏற்றுக்கொள்ள தீர்மானம் நிறைவேற்றியது. அது இன்றும் கூட விண்மீன் வகைபாட்டுக்குப் பயன்படுத்தப்படுகிறது.[9]
இவரோடு கூட ஆய்வு செய்த வானியலாளர் செசில்லா பேய்ன் கெனானின் தரவுகளைப் பயன்படுத்தி பெரும்பாலான விண்மீன்கள் நீரகத்தாலும் எல்லியத்தாலும் அகியவை என நிறுவினார்.[14]
பிந்தைய வாழ்வும் இறப்பும்
[தொகு]ஆன்னி 1940இல் அவர் ஓய்வு பெறும்வரை வானியலில் 40 ஆண்டுகள் பணியாற்றினார். இக்காலத்தில் அறிவியல் சமுதாயத்தில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக ஏற்கப்படவும் முன்னேறவும் பெருமை பெறவும் பெரிதும் பாடுபட்டார். இவரது அமைதியான கடுமையான உழைப்பும் பண்பும் பாங்கும் அவரது வாழ்நாள் முழுவதும் உதவியதோடு வானியலில் பெண்கள் முன்னேறும் வழித்தடத்தையும் சமைத்தது.
கெனான் 1941 ஏப்பிரல் 13இல் 77ஆம் அகவையில் மசாசூசட், கேம்பிரிட்ஜில் இயற்கை எய்தினார்..[13] வானியலில் சிறந்த பணிபுரியும் பெண்வானியலாளருக்கு அமெரிக்க வானியல் கழகம் ஒவ்வோராண்டும் ஆன்னி ஜம்ப் கெனான் வானியல் விருதை வழங்கி வருகிறது.
விருதுகளும் தகைமைகளும்
[தொகு]- 1925, ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் தகைமை முனைவர் பட்டம் பெற்ற முதற்பெண்மணி
- 1935, ஒகுலேத்தோர்ப்பே பல்கலைக்கழகத்தில் தகைமை முனைவர் பட்டம் பெற்றார்
- 1929, தேசியப் பெண்கள் வாக்கினர் குழுவால் ’’ வாழும் பெண்டிர் பன்னிருவருள் மிகச் சிறந்த ஒருவர்’’ எனப் பட்டியலிடப்பட்டவர்.
- 1932, அறிவியல் ஆராய்ச்சியில் பெண்களுக்கு உதவும் கழகத்தில் இருந்து எல்லென் இரிச்சர்ட்சு பரிசைப் பெற்றார்.
- அமெரிக்க வானியற் கழகத்தின் அலுவலராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி
- நிலாவில் உள்ள ஒரு குழிப்பள்ளம் கெனான் குழிப்பள்ளன் எனப்படுகிறது.
- குறுங்கோள் 1120 கெனானியா இவர் பெயரைத் தாங்கியுள்ளது.
- ஆணோ பெண்ணோ வேறு எவரையும் விட பேரளவில் கிட்ட்த்தட்ட, 3,00,000 விண்மீன்களை வகைப்படுத்தியதற்காக ’’வான்தொகைக் கணக்கெடுப்பவர்’’ எனச் செல்லப்பெயரிடப்பட்டுள்ளார்.
- இவரது பெயரில் ஒவ்வோராண்டும் 1934 முதல் ஆன்னி ஜம்ப் கெனான் வானியல் விருது வட அமெரிக்கப் பெண் வானியலாளர் ஒருவருக்கு வழங்கப்படுகிறது.
- இவர் பெயரால் தெலாவேர் பல்கலைக்கழகத்தின் உறைவிட முற்றமொன்று கெனான் முற்றம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
- ஆர்வார்டு பெயரிட்ட வானொளிப்படக் காப்பாளர் இவரே.
- 1931, என்றி டிரேப்பர் பதக்கத்தைப் பெற்றார்.
- அரசு வானியற்கழக ஐரோப்பிய உறுப்பினர்.
- வெல்லெசுலிக் கல்லூரியின் பை பீட்ட கப்பா அமைப்பின் தகைமை உறுப்பினர்.
- 1929, அமெரிக்க அறிவியல் (Scientific American)]] இதழின் முதற்பக்கப் பெண்மணியாகப் பதிவானார்
- மரியா மிச்சல் கழகத்தின் பட்டய உறுப்பினர்
- டொனான்சிந்திலா வான்காணகம் அருகில் உள்ள மெக்சிகோ பியேபுலா டொனான்சிந்திலாவில் உள்ள ஒரு தெரு ’’பெண்மணி ஆன்னி ஜம்ப் கெனான்’’ தெரு என அழைக்கப்படுகிறது. இன்று இது தலைப்பெழுத்துகளால் INAOE எனப்படுகிறது.
- ஜூடி சிகாகோவின் மதிய உணவுக் குழு]] எனும் கலை நிறுவனப் பகுதியாகவுள்ள மரபுமுற்றப்பெண்டிர் பட்டியலில் ஒருவர்..
நூல்தொகை
[தொகு]- Available in an "updated, corrected, and extended machine-readable version" at "Henry Draper Catalogue and Extension (Cannon+ 1918-1924; ADC 1989)". VizieR archives. Strasbourg, France: Centre de données astronomiques de Strasbourg [Strasbourg Astronomical Data Center]. பார்க்கப்பட்ட நாள் 2015-01-08.
{{cite web}}
: External link in
(help)|website=
- Online from Harvard University at "The SAO/NASA Astrophysics Data System".; abstracts link to GIF and பி.டி.எவ் formats.
- Available in an "updated, corrected, and extended machine-readable version" at "Henry Draper Catalogue and Extension (Cannon+ 1918-1924; ADC 1989)". VizieR archives. Strasbourg, France: Centre de données astronomiques de Strasbourg [Strasbourg Astronomical Data Center]. பார்க்கப்பட்ட நாள் 2015-01-08.
- {{cite web |volume=Vol. 93 |url=http://adsabs.harvard.edu/abs/1919AnHar..93....1C |title=The Henry Draper catalogue : 7h and 8h})
- Cannon, Annie Jump (1923). "The spectrum of Nova Aquilae". Annals of the Astronomical Observatory of Harvard College (Cambridge, MA, USA: Harvard College Observatory) v. 81 (3). இணையக் கணினி நூலக மையம்:786374390. http://nrs.harvard.edu/urn-3:FHCL:2561712.
- Cannon, Annie Jump (1916). "Spectra having bright lines". Annals of the Astronomical Observatory of Harvard College (Cambridge, MA, USA: Harvard College Observatory) v. 76 (3). இணையக் கணினி நூலக மையம்:786374401. http://pds.lib.harvard.edu/pds/view/12044514.
- Cannon, Annie Jump (1912). "Comparison of objective prism and slit spectrograms". Annals of the Astronomical Observatory of Harvard College (Cambridge, MA, USA: Harvard College Observatory) v. 56 (8). இணையக் கணினி நூலக மையம்:786374385. http://pds.lib.harvard.edu/pds/view/12044512.
- Cannon, Annie Jump (1912). "The spectra of 745 double stars". Annals of the Astronomical Observatory of Harvard College (Cambridge, MA, USA: Harvard College Observatory) v. 56 (7). இணையக் கணினி நூலக மையம்:786374368. http://pds.lib.harvard.edu/pds/view/12044511.
- Cannon, Annie Jump (1912). "Classification of 1,688 southern stars by means of their spectra". Annals of the Astronomical Observatory of Harvard College (Cambridge, MA, USA: Harvard College Observatory) v. 56 (5). இணையக் கணினி நூலக மையம்:786363259. http://pds.lib.harvard.edu/pds/view/9020350.
- Cannon, Annie Jump (1912). "Classification of 1,477 stars by means of their photographic spectra". Annals of the Astronomical Observatory of Harvard College (Cambridge, MA, USA: Harvard College Observatory) v. 56 (4). இணையக் கணினி நூலக மையம்:786374355. http://pds.lib.harvard.edu/pds/view/12044510.
- Cannon, Annie Jump; Pickering, Edward Charles (1909). "Maxima and minima of variable stars of long period". Annals of the Astronomical Observatory of Harvard College (Cambridge, MA, USA: Harvard College Observatory) v. 55 (pt. 2). இணையக் கணினி நூலக மையம்:786370272. http://pds.lib.harvard.edu/pds/view/11106054.
- Cannon, Annie Jump; Pickering, Edward Charles (1907). "Second catalogue of variable stars". Annals of the Astronomical Observatory of Harvard College (Cambridge, MA, USA: Harvard College Observatory) v. 55 (pt. 1). இணையக் கணினி நூலக மையம்:603459862. http://pds.lib.harvard.edu/pds/view/11106053.
- Cannon, Annie Jump (1903). "A provisional catalogue of variable stars". Annals of the Astronomical Observatory of Harvard College (Cambridge, MA, USA: Harvard College Observatory) v. 48 (3). இணையக் கணினி நூலக மையம்:786370792. http://pds.lib.harvard.edu/pds/view/11184379.
- Cannon, Annie Jump; Pickering, Edward Charles (1901). "Spectra of bright southern stars photographed with the 13-inch Boyden telescope as a part of the Henry Draper Memorial". Annals of the Astronomical Observatory of Harvard College (Cambridge, MA, USA: Harvard College Observatory) v. 28 (pt. 2). இணையக் கணினி நூலக மையம்:786363059. http://pds.lib.harvard.edu/pds/view/9039122.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Reynolds, p. 18
- ↑ Mack, p. 91
- ↑ Jardins, p. 89
- ↑ An Astronomer Who Measured The Stars By Doug West
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 "Annie Cannon". She is an Astronomer. 2014. பார்க்கப்பட்ட நாள் February 18, 2014.
- ↑ 6.0 6.1 Jardins, p. 102
- ↑ 7.0 7.1 7.2 7.3 7.4 Mack, p. 99
- ↑ Hennessey, Logan (23 சூலை 2006). "Annie Jump Cannon (1863-1941) - Early life". Wellesley College. பார்க்கப்பட்ட நாள் 1 ஏப்ரல் 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 9.0 9.1 9.2 Dvorak
- ↑ "Annie Jump Cannon (1863-1941), sitting at desk". Smithsonian Institution Archives. Smithsonian Institution. பார்க்கப்பட்ட நாள் 11 July 2013.
- ↑ 11.0 11.1 Shteynberg, Catherine. "Pickering's Women". Smithsonian Institution Archives. Smithsonian Institution. பார்க்கப்பட்ட நாள் 8 May 2009.
- ↑ Des Jardins, p. 95
- ↑ 13.0 13.1 "Annie Jump Cannon.".. (2004). Encyclopedia.com. அணுகப்பட்டது 1 April 2014. .
- ↑ Greenstein, George. "The ladies of Observatory Hill". The American Scholar 62 (3): 437–446.
தகவல் வாயில்கள்
[தொகு]- Des Jardins, Julie (2010). The Madame Curie Complex--The Hidden History of Women in Science. New York, NY: Feminist Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781558616554.
- Dvorak, John (August 1, 2013). "The Women Who Created Modern Astronomy". Sky and Telescope 126 (2): 28–33.
- Mack, Pamela (1990). "Straying from their orbits: Women in astronomy in America". In G. Kass-Simon, P. Farnes, and D. Nash (ed.). Women of Science: Righting the Record. Bloomington, IN: Indiana University Press. p. 91. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780253208132. பார்க்கப்பட்ட நாள் 1 April 2014.
{{cite book}}
: CS1 maint: multiple names: editors list (link) - Reynolds, Moira Davison (2004). American Women Scientists: 23 Inspiring Biographies, 1900-2000. McFarland. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780786421619.
வெளி இணைப்புகள்
[தொகு]- Annie Jump Cannon audio talk with colleagues from 365DaysOfAstronomy.Org
- Wellesley College Astronomy Department: Annie Jump Cannon from Wellesley College
- Bibliography from the Astronomical Society of the Pacific
- Annie Jump Cannon: Theorist of Star Spectra பரணிடப்பட்டது 2015-09-04 at the வந்தவழி இயந்திரம், from the San Diego Supercomputer Center
- "In the footsteps of Columbus" by Annie Jump Cannon (souvenir photo book handed out at the 1893 Worlds Fair by the Blair Camera Company)
- Google Doodle celebrating Annie Jump Cannon's 151st Birthday