இக்தியார்னிஸ்
இக்தியார்னிஸ் புதைப்படிவ காலம்:Late Cretaceous, | |
---|---|
ராக்கி மவுண்டன் டைனோசர் வள மையத்தில் உள்ள எலும்புக்கூடு மாதிரி. | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Ichthyornis |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/IchthyornisI. dispar
|
இருசொற் பெயரீடு | |
Ichthyornis dispar (Marsh, 1872) | |
வேறு பெயர்கள் | |
Angelinornis Kashin 1972 Species synonymy
|
இக்தியார்னிஸ் ("மீன் பறவை" என்று பொருள்படும், இதன் மீன் போன்ற முதுகெலும்புகளால் ) என்பது வட அமெரிக்காவில் பிற்கால கிரீத்தேசியக் காலத்திலிருந்து அழிந்துபோன பல் கடற்பறவையான ஆர்னிதுரானின் போன்ற பேரினமாகும். இவற்றின் புதைபடிவ எச்சங்கள் ஆல்பர்ட்டா, அலபாமா, கன்சாஸ் ( கிரீன்ஹார்ன் சுண்ணக்கல் ), நியூ மெக்ஸிகோ, சஸ்காட்செவன், டெக்சாஸ் ஆகிய பகுதிகளில் கிடைத்த சுண்ணாம்பு கற்களிலிருந்து அறியப்படுகின்றன. அவை சுமார் 95-83.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, காம்பானியன் யுகங்களில் டுரோனியன் காலத்திய அடுக்குகளில் காணப்படுகின்ற.
பறவைகளின் பரிணாமத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் இக்தியார்னிஸ் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பற்கள் கொண்ட வரலாற்றுக்கு முந்தைய முதல் பறவை இதுவாகும். மேலும் சார்லசு டார்வின் பரிணாமக் கோட்பாட்டின் ஆரம்ப ஆண்டுகளில் இதன் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டார்.
விளக்கம்
[தொகு]இப் பறவைகள் நன்றாகப் பறக்கக் கூடியதாக இருந்திருக்கவேண்டும். இதன் தாடையில் பற்கள் தனித்தனிக் குழிகளில் இருந்தன. மேல் மற்றும் கீழ் தாடைகளின் நடுப்பகுதியில் மட்டுமே பற்கள் இருந்தன. தாடை நுனிகளில் பற்கள் இல்லாமல் அலகாக இருந்தது. இப்போதுள்ள பறவைகளுக்கிருப்பது போல இவற்றின் மார்பெலும்பு படகு வடிவுள்ளதாக உள்ளது. அதன் நடுவில் மார்பலும்புப் பகுதி நன்றாக வளர்ந்திருந்தது. சிறகெலும்பும் பறப்பதற்கு ஏற்றவாறு அமைந்திருந்தது. இது இப்போதுள்ள புறாக்களைப்போல இருந்திருக்கலாம்.[1]