இசுக்கொட் விபரப்பட்டியல்
இசுக்கொட் விபரப்பட்டியல் என்பது, ஸ்கொட் பப்ளிஷிங் கம்பனியினால் வெளியிடப்படும் ஒரு தபால்தலை விபரப்பட்டியல் ஆகும். இது உலகம் முழுவதிலும், அஞ்சல் தேவைகளுக்காக வெளியிடப்பட்டவை என இவ் விபரப்பட்டியல் ஆசிரியர்களால் கருதப்படும் தபால்தலைகளைப் பட்டியலிடுகிறது. இது ஓவ்வொரு ஆண்டும் நிகழ்நிலைப்படுத்தி வெளியிடப்படுகின்றது. 2006 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டபடி, இது ஆறு பெரிய தொகுதிகளைக் கொண்டிருந்தது. அத்துடன் இது குறுவட்டு வடிவிலும் வெளியிடப்படுகின்றது. தபால்தலைகளை அடையாளம் காண்பதற்காக இந்த விபரப்பட்டியலில் பயன்படுத்தப்படும் எண்முறை ஐக்கிய அமெரிக்காவின் தபால்தலை சேகரிப்பாளரிடையே பெருமளவில் புழக்கத்தில் உள்ளது.
ஸ்கொட் விபரப்பட்டியலின் முதலாவது பதிப்பு 21 பக்கங்களை மட்டுமே கொண்டிருந்தது. இது 1868 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், நியூ யார்க்கின் தபால்தலை விற்பனையாளரான ஜே. டபிள்யூ. ஸ்கொட் என்பவரால் வெளியிடப்பட்டது. இதன் அட்டையில் குறிப்பிட்டபடி 1840 ஆம் ஆண்டு முதல் விபரப்பட்டியல் வெளியிடப்பட்டது வரையிலான எல்லாத் தபால்தலைகளும் அவற்றின் விலைகளுடன் பட்டியல் இடப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.[1][2][3]
பின் வந்த ஆண்டுகளில், ஸ்கொட் கம்பனி தபால்தலைகள் விற்பனை செய்வதை நிறுத்திவிட்டாலும், விபரப்பட்டியலைத் தொடர்ந்தும் வெளியிட்டு வருகிறது. தபால்தலை சேகரிப்பு வளர்ச்சியடைந்து வந்ததனாலும், சேகரிப்பாளருக்குப் பல புதிய தகவல்கள் தேவைப்பட்டதாலும், இவ்வாறான தகவல்கள் தொடர்ந்து பட்டியலில் சேர்க்கப்பட்டு வந்தது. முன்னைய ஆண்டின் விற்பனை மற்றும் சந்தைப் பகுப்பாய்வின் மூலம் கிடைத்த தகவல்களில் அடிப்படையில் தபால்தலைகளின் விலைகளும் இடம் பெற்றன. 2002 ஆம் ஆண்டில், இவ் விபரப்பட்டியல் 5000 பக்கங்களைக் கொண்டதாக இருந்தது.
ஐக்கிய அமெரிக்காவின் முன்னணித் தபால்தலை விபரப்பட்டியலான இது, எவற்ரைத் தபால்தலை எனக் கொள்வது, எவற்றை அவ்வாறு கொள்ளமுடியாது எனத் தீர்மானிப்பதில் செல்வாக்குச் செலுத்துகின்றது. எடுத்துக்காட்டாக, இன்றைய ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த முன்னாள் நாடுகள் சில 1960 களில் வெளியிட்ட தபால்தலைகள் பல உண்மையிலேயே அஞ்சல் நிலையங்களில் விற்பனை செய்யப்படவில்லை என்பதனால் அவற்றைப் பட்டியலில் சேர்ப்பது இல்லை. இதனால் அமெரிக்க விற்பனையாளர்கள் அத்தபால்தலைகளை விற்பனை செய்வது இல்லை. எனினும் மைக்கேல் விபரப்பட்டியல் இவற்றைப் பட்டியலிட்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Linn's Stamp News Puts Happy Face On Krause-Scott Lawsuit Settlement". Stamps.net. 1999-01-26. Archived from the original on 2012-02-10. பார்க்கப்பட்ட நாள் 2013-10-17. Discussion based on a 1998 Linn's Stamp News article.
{{cite web}}
: CS1 maint: postscript (link) - ↑ Kloetzel, James E. (March 21, 2011). "Hsien-ming Meng, 1926–2011". Linn's Stamp News: p. 73.
- ↑ Scott 2006 classic specialized catalogue: stamps and covers of the world including U.S. 1840–1940 (British Commonwealth to 1952). Sidney, OH: Scott Pub. Co. 2005. pp. 3A. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89487-358-X.