உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியாவிலுள்ள தேசியப் பூங்காக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவின் உள்பகுதி

இந்தியாவின் தேசியப் பூங்காக்கள் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் பிரிவு II-ஐச் சார்ந்த பாதுகாக்கப்பட்ட பகுதி ஆகும். இந்தியாவின் முதல் தேசியப் பூங்கா 1936ல் ஹெய்லி தேசியப் பூங்கா என்ற பெயரில் நிறுவப்பட்டது, தற்பொழுது ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா என்றறியப்படுகிறது. 1970ல் இந்தியாவில் ஐந்து தேசியப் பூங்காக்கள் மட்டுமே இருந்தன. 1972ல் இந்தியா குறைந்துவரும் வனவிலங்குகளின் இனங்களையும் அதன் வாழ்விடங்களையும் பாதுகாப்பதற்கு வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தினையும், புலிகள் பாதுகாப்புத் திட்டத்தினையும் இயற்றியது. 1980ல், மத்திய அரசாங்கம் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தினை மேலும் பலப்படுத்தியது. ஏப்ரல் 2012ல், 112 தேசியப் பூங்காக்கள் உள்ளது.[1] அனைத்து தேசியப் பூங்காக்களூம் 39,919 km2 (15,413 sq mi)  இடத்தினை சூழ்ந்திருக்கிறது, இது இந்தியாவின் மொத்த இடப்பரப்பளவில் 1.21% ஆகும்.

தேசியப் பூங்காக்களின் பட்டியல்

[தொகு]
பெயர் மாநிலம் நிறுவப்பட்டது . பரப்பளவு (in km²) முக்கியத்துவம்
பால்பாக்ராம் தேசியப் பூங்கா மேகாலயா 2013 220 காட்டெருமை, சிவப்பு பாண்டா, யானை மற்றும் எட்டு வகையான பூனை இனங்கள், புலி உட்பட.
பந்தாவ்கர் தேசியப் பூங்கா மத்தியப்பிரதேசம் 1968 446 இந்தியாவில் அதிகளவில் புலிகள் வசிப்பிடமாகும், வெள்ளைப் புலி,
பந்திப்பூர் தேசியப் பூங்கா கர்நாடகா 1974 874.20 புள்ளிமான், சிங்கவால் குரங்கு, இந்திய அணில், கடமா, சிறுத்தை, கடமான், இந்திய யானை, தேன் தலைப்பருந்து, சிகப்பு-தலை கழுகு மற்றைய மிருகங்களும்.
பன்னேருகட்டா தேசியப் பூங்கா கர்நாடகா 1974 106.27 வெள்ளைப் புலி, வங்காளப் புலி, கரடி, மற்றைய மிருகங்களும்
பெத்லா தேசியப் பூங்கா ஜார்கண்ட் 1986 231.67

புலி, சோம்பல் கரடி, மயில், யானை, கடமான்,சுட்டி மான் மற்றைய மிருகங்களும்.

பிதர்கனிகா தேசியப் பூங்கா ஒடிசா 1988 145 சதுப்புநில மற்றும் உவர்நீர் முதலை, வெள்ளை முதலை, இந்திய பாம்பு, கருந்தலை அரிவாள் மூக்கன், காட்டு பன்றி, ரேசஸ் குரங்குகள், புள்ளிமான் மற்றைய மிருகங்களும்
வெளிமான் தேசியப் பூங்கா, வெலாவதார் குஜராத் 1976 34.08
புக்சா புலிகள் காப்பகம் மேற்கு வங்காளம் 1992 760
கேம்பல் பே தேசியப் பூங்கா அந்தமான் நிக்கோபார் தீவுகள் 1992 426.23
சண்டோலி தேசியப் பூங்கா மகாராஷ்டிரம் 2004 317.67
ராஜாஜி தேசியப் பூங்கா உத்தராகண்ட் 1983 820 ஆசிய யானை மற்றும் புலிகள் காப்பகம்
டாச்சிகம் தேசியப் பூங்கா சம்மு காசுமீர் 1981 141 காசுமீர் கலைமான் காணப்படும் ஒரே இடம்[2]
தார்ரா தேசியப் பூங்கா இராச்சசுத்தான் 2004 250
பாலை தேசியப் பூங்கா[3] இராச்சசுத்தான் 1980 3162
திப்ரூ-சைகோவா தேசியப் பூங்கா அசாம் 1999 340
துத்வா தேசியப் பூங்கா உத்திரப்பிரதேசம் 1977 490.29
எரவிகுளம் தேசிய பூங்கா கேரளா 1978 97
கேலேதியா தேசியப் பூங்கா அந்தமான் நிக்கோபார் தீவுகள் 1992 110
கங்கோத்ரி தேசியப் பூங்கா உத்தரகாண்ட் 1989 1552.73
கிர் தேசியப் பூங்கா குஜராத் 1965 258.71 ஆசிய சிங்கம்
கோருமாரா தேசியப் பூங்கா மேற்கு வங்காளம் 1994 79.45
கோவிந்த் பாசு விகார் காட்டுயிர் காப்பகம் உத்தரகாண்ட் 1990 472.08
பெரிய இமாலய தேசியப் பூங்கா இமாச்சலப் பிரதேசம், 1984 754.40 யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்
குகமால் தேசியப் பூங்கா மகாராஷ்டிரா 1987 361.28
கிண்டி தேசியப் பூங்கா தமிழ்நாடு 1976 2.82
மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா தமிழ்நாடு 1980 6.23
ஹெமிஸ் தேசியப் பூங்கா சம்மு காசுமீர் 1981 4400
கரிகீ ஈரநிலம் பஞ்சாப் 1987 86
கசாரிபாக் தேசியப் பூங்கா ஜார்கண்ட் 1954 183.89
இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா தமிழ்நாடு 1989 117.10
இந்திராவதி தேசியப் பூங்கா சட்டீஸ்கர் 1981 1258.37 ஆசிய காட்டெருமை, புலிகள் சரணாலயம், மைனா
ஜல்தாபாரா தேசியப் பூங்கா மேற்கு வங்காளம் 2012 216
ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா உத்தரகாண்ட் 1936 1318.5
காலேசர் தேசியப் பூங்கா ஹரியானா 2003 100.88
கன்ஹா தேசியப் பூங்கா மத்தியப்பிரதேசம் 1955 940
கங்கர் காதி தேசியப் பூங்கா சட்டீஸ்கர் 1982 200
காசு பரமனாந்தா ரெட்டி தேசியப் பூங்கா தெலுங்கானா 1994 1.42
காசிரங்கா தேசியப் பூங்கா அசாம் 1905 471.71 இந்திய காண்டாமிருகம், யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்
கெய்புல் லாம்சோ தேசியப் பூங்கா மணிப்பூர் 1977 40 இதுவே உலகின் ஒரே மிதக்கும் பூங்கா
கேவலாதேவ் தேசியப் பூங்கா இராச்சசுத்தான் 1981 28.73 யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்
கஞ்சன்சுங்கா தேசியப் பூங்கா சிக்கிம் 1977 1784
கிசுதவார் தேசியப் பூங்கா சம்மு காசுமீர் 1981 400
குத்ரேமுக் தேசியப் பூங்கா கர்நாடகா 1987 600.32
மாதவ் தேசியப் பூங்கா மத்தியப்பிரதேசம் 1959 375.22
மகாத்மா காந்தி கடல்சார் தேசியப் பூங்கா அந்தமான் நிக்கோபார் தீவுகள் 1983 281.50
மகாவீர் கரினா வனசுதலி தேசியப் பூங்கா தெலுங்கானா 1994 14.59
மானசு வனவிலங்கு காப்பகம் அசாம் 1990 500 யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்
மாண்ட்லா ஆலை ஃபோசில்ஸ் தேசிய பூங்கா மத்தியப்பிரதேசம் 1983 0.27
கடல்சார் தேசியப் பூங்கா, கட்ச் வளைகுடா குஜராத் 1980 162.89
மதிகெட்டான் சோலை தேசியப் பூங்கா கேரளா 2003 12.82
மத்திய பட்டன் தீவு தேசிய பூங்கா அந்தமான் நிக்கோபார் தீவுகள் 1987 0.64
பகவான் மகாவீரர் காட்டுயிர்ச் சரணாலயம் மற்றும் மொல்லம் தேசியப் பூங்கா கோவா 1978 107
மவுலிங் தேசியப் பூங்கா அருணாச்சல் பிரதேசம் 1986 483
மவுன்ட் அபு வனவிலங்கு உய்வகம் இராச்சசுத்தான் 1960 288.84
மவுன்ட் கரியட் தேசியப் பூங்கா அந்தமான் நிக்கோபார் தீவுகள் 46.62 முக்கியமான பறவை பகுதி, இங்கு கண்டறியப்பட்ட புதிய தவளை இனம் ராணா சார்லஸ்டார்வினி என்றழைக்கப்படுகிறது.
Mrugavani National Park தெலுங்கானா 9.1
முதுமலை தேசியப் பூங்கா தமிழ்நாடு 1940 321.55
முக்கூர்த்தி தேசியப் பூங்கா தமிழ்நாடு 2001 78.46 நீலகிரி வரையாடு
முர்லேன் தேசிய பூங்கா மிசோரம் 200
நம்தாபா தேசியப் பூங்கா அருணாச்சல் பிரதேசம் 1974 1985.24
நமெரி தேசிய பூங்கா அசாம் 1978 137.07
நந்தா தேவி தேசியப் பூங்கா உத்தரகாண்ட் 1982 630.33 யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்
நந்தன்கன்னன் விலங்கியல் பூங்கா ஒடிசா 1960 4.006
நவகாவ் தேசியப் பூங்கா மகாராஷ்டிரா 133.88
நைரோ தேசியப் பூங்கா மேற்கு வங்காளம் 1986 88
நோக்ரெக் உயிர்க்கோளக் காப்பகம் மேகாலயா 47.48 யுனெஸ்கோ உலக உயிர்க்கோளக்_காப்பகம்
வட பட்டன் தீவு தேசிய பூங்கா அந்தமான் நிக்கோபார் தீவுகள் 1979 144
நந்தங்கி தேசிய பூங்கா நாகலாந்து 1993 202.02
ஒராங் தேசியப் பூங்கா அசாம் 1999 78.81
கொடைக்கானல் காட்டுயிர் உய்விடம் தமிழ்நாடு 736.87
பன்னா தேசியப் பூங்கா மத்தியப்பிரதேசம் 1981 542.67
பபிகொண்டா தேசியப் பூங்கா ஆந்திரப்பிரதேசம் 2008 1012.85
பெஞ்ச் தேசியப் பூங்கா மத்தியப்பிரதேசம் 1977 758
பெரியார் தேசியப் பூங்கா கேரளா 1982 305
பாங்புய் நீல மலை தேசியப் பூங்கா மிசோரம் 1992 50
முள் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா இமாச்சலப் பிரதேசம் 1987 807.36
ராசாசி தேசியப் பூங்கா கர்நாடகா 1983 820
நாகர்கோல் தேசியப் பூங்கா கர்நாடகா 1988 643.39
ராணி ஜான்சி கடல்சார் தேசியப் பூங்கா அந்தமான் நிக்கோபார் தீவுகள் 1996 256.14
ரண்தம்போர் தேசியப் பூங்கா இராச்சசுத்தான் 1981 392
சேடில் பீக் தேசியப் பூங்கா அந்தமான் நிக்கோபார் தீவுகள் 1979 32.55
சலீம் அலி தேசியப் பூங்கா சம்மு காசுமீர் 9.07
சஞ்சய் தேசியப் பூங்கா² மத்தியப்பிரதேசம் 1981 466.7
சஞ்சய் காந்தி தேசியப் பூங்கா மகாராஷ்டிரா 1969 104
சரிஸ்கா தேசியப் பூங்கா இராச்சசுத்தான் 1955 866
சாத்புரா தேசியப் பூங்கா மத்தியப்பிரதேசம் 1981 524
அமைதி பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா கேரளா 1980 237
சிரோகி தேசியப் பூங்கா மணிப்பூர் 1982 41.30
சிமிலிபால் உயிர்க்கோளக் காப்பகம் ஒடிசா 1980 845.70 புலி, சிறுத்தை, ஆசிய யானை, Sambar, Barking deer, கடமா, காட்டுப் பூனை, காட்டு பன்றி, மற்றைய மிருகங்கள்.
சிங்கலிலா தேசியப் பூங்கா மேற்கு வங்காளம் 1986 78.60
தெற்கு பட்டன் தீவு தேசிய பூங்கா அந்தமான் நிக்கோபார் தீவுகள் 5 அவில்லியா, டால்பின், நீர் வாழ் பல்லி, நீலத் திமிங்கலம்
சிறீ வெங்கடேசுவரா தேசியப் பூங்கா ஆந்திரப்பிரதேசம் 1989 353
சுல்தான்பூர் தேசியப் பூங்கா ஹரியானா 1989 1.43
சுந்தரவனம்_உயிர்க்கோளக்_காப்பகம் மேற்கு வங்காளம் 1984 1330.12 யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்
தடோபா தேசியப் பூங்கா மகாராஷ்டிரா 1955 625
மலர்ப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா உத்தரகாண்ட் 1982 87.50
வால்மீகி தேசியப் பூங்கா பீகார் 1976 898.45
வன்ஸ்தா தேசியப் பூங்கா குஜராத் 1979 23.99
வனவீகார் தேசியப் பூங்கா மத்தியப்பிரதேசம் 1983 4.45

சான்றுகள்

[தொகு]
  1. "National Parks". wiienvis.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2018-08-11. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  2. Kashmir Stag (Hangul)
  3. பாலைவன தேசியப் பூங்கா