இந்தோர் அரசு
இந்தோர் அரசு इंदौर रियासत | ||||||
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா | ||||||
| ||||||
| ||||||
குவாலியர் அரசு மற்றும் போபால் இராச்சியங்களுடன் இந்தூர் அரசின் வரைபடம் | ||||||
வரலாறு | ||||||
• | பிரித்தானிய இந்தியப் பேரரசின் கீழ் | 1818 | ||||
• | இந்திய விடுதலை | 15 சூன் 1948 1948 | ||||
பரப்பு | ||||||
• | 1931 | 24,605 km2 (9,500 sq mi) | ||||
Population | ||||||
• | 1931 | 13,25,089 | ||||
மக்கள்தொகை அடர்த்தி | 53.9 /km2 (139.5 /sq mi) | |||||
தற்காலத்தில் அங்கம் | மத்தியப் பிரதேசம், இந்தியா | |||||
இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. |
இந்தோர் அரசு அல்லது ஹோல்கர் அரசு (Indore State or Holkar State),[1]பிரித்தானிய இந்தியாவுக்கு கட்டுப்பட்ட மராத்திய ஓல்கர் வம்சத்தவர்கள் கி பி 1818 முதல் இந்தூர் அரசை ஆண்ட மன்னர் அரசாகும்.
தற்கால மத்தியப் பிரதேசத்தில் அமைந்த இந்தூர் அரசு, 1931-இல் மொத்தப் பரப்பளவு 24,605 சதுர கிலோ மீட்டரும், 3,368 கிராமங்களும்[2], 1,325,089 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. இந்தூர் அரசின் முதல் தலைநகராக மஹேஷ்வர் நகரம் விளங்கியது. பின்னர் இந்தூருக்கு மாற்றப்பட்டது. பிற முக்கிய நகரங்கள் கார்கோன், பர்வாஹா மற்றும் பான்புரா ஆகும்.
இந்தூர் நகரம் மத்திய இந்தியாவின் முக்கிய வணிக மையமாகவும், படைகளின் பாசறையாகவும் விளங்கியது.
வரலாறு
[தொகு]ஓல்கர் வம்சத்தின் நிறுவனரும், மராத்தியப் படைத்தலைவரும் ஆன மல்ஹர் ராவ் ஓல்கருக்கு, மராத்தியப் பேரரசின் பேஷ்வா வழங்கிய இந்தூர் மற்றும் 28 சிறு நிலப்பரப்புகளைக் கொண்டு, 29 சூலை 1732-இல் இந்தூர் அரசை நிறுவினார். இவரது மருமகள் அகில்யாபாய் ஓல்கர் ஆவார். மூன்றாம் ஆங்கிலேய மராட்டியப் போரில் மராத்திய ஓல்கர் தோல்வி கண்ட பின்னர், பிரித்தானிய இந்தியாவுடன் மராத்திய இந்தூர் அரசு 6 சனவரி 1818-இல் செய்து கொண்ட உடன்படிக்கையின் படி, பிரித்தானிய இந்திய அரசின் பாதுக்காப்பிற்குட்பட்ட, சுதேச சமஸ்தானமாக விளங்கியது. இந்தூர் அரசின் தலைநகர் மஹேஷ்வர் நகரத்திலிருந்து இந்தூர் நகரத்திற்கு 3 நவம்பர் 1818-இல் மாற்றப்பட்டது.
இந்திய விடுதலைக்கு பின்னர்
[தொகு]1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்தூர் அரசு சுதேச சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைக்கும் உடன்படிக்கையில், இந்தூர் அரசின் இறுதி மன்னர் யஷ்வந்த்ராவ் ஓல்கர் 1 சனவரி 1950-இல் கையொப்பமிட்டார்.
இந்தூர் அரசின் ஆட்சியாளர்கள்
[தொகு]பிரித்தானிய இந்தியாவின் அரச நிர்வாகம், இந்தூர் மன்னர்களுக்கு 19 பீரங்கி குண்டுகள் முழங்கி மரியாதை செய்தனர்.[3]
பெயர் | பிறப்பு | இறப்பு | ஆட்சிக் காலம் |
---|---|---|---|
மல்ஹர் ராவ் ஓல்கர் | 1694 | 1766 | 1731 – 20 மே 1766 |
இரண்டாம் மாலே ராவ் ஓல்கர் | 1745 | 1767 | 20 மே 1766 – 5 ஏப்ரல் 1767 |
அகில்யாபாய் ஓல்கர் | 1725 | 1795 | ஏப்ரல் 1767 – 13 ஆகஸ்டு 1795 |
முதலாம் துகோசி ராவ் ஓல்கர் | 1723 | 1797 | 13 ஆகஸ்டு 1795 – 29 சனவரி 1797 |
காசி ராவ் ஓல்கர் | ? | 1808 | 29 சனவரி 1797 – சனவரி 1799 |
காந்தே ராவ் ஓல்கர் | 1798 | 1806 | சனவரி 1799 – 1806 |
யஷ்வந்த் ராவ் ஓல்கர் | 1776 | 1811 | 1806 – 27 அக்டோபர் 1811 |
மூன்றாம் மல்ஹர் ராவ் ஓல்கர் | 1801 | 1833 | நவம்பர் 1811 – 27 அக்டோபர் 1833 |
துளசி பாய் (பெண்), (காப்பாளர்) | ? | 1817 | நவம்பர் 1811 – 20 டிசம்பர் 1817 |
மார்த்தாண்ட ராவ் ஓல்கர் | 1830 | 1849 | 27 அக்டோபர் 1833 – 2 பிப்ரவரி 1834 |
ஹரி ராவ் ஓல்கர் | 1795 | 1843 | 2 பிப்ரவரி 1834 – 24 அக்டோபர் 1843 |
இரண்டாம் காந்தே ராவ் ஓல்கர் | 1828 | 1844 | 24 அக்டோபர் 1843 – 17 பிப்ரவரி 1844 |
மகாராணி மஜ்ஜி | ? | 1849 | 24 அக்டோபர் 1843 – 17 பிப்ரவரி 1844 |
இரண்டாம் துக்கோஜி ராவ் ஓல்கர் | 1835 | 1886 | 27 சூன் 1844 – 17 சூன் 1886 |
மகாராணி மஜ்ஜி | ? | 1849 | 27 சூன் 1844 – செப்டம்பர் 1849 |
சிவாஜி ராவ் ஓல்கர் | 1859 | 1908 | 17 சூன் 1886 – 31 சனவரி 1903 |
மூன்றாம் துக்கோஜி ராவ் ஓல்கர் | 1890 | 1978 | 31 சனவரி 1903 – 26 பிப்ரவரி 1926 |
இரண்டாம் யஷ்வந்த் ராவ் ஓல்கர் | 1908 | 1961 | 26 பிப்ரவரி 1926 – 15 ஆகஸ்டு 1947 |
உஷா தேவி ஓல்கர் | 1961 | தற்போது வரை |
இதனையும் காண்க
[தொகு]- இந்தூர் முகமை
- மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)
- ஓல்கர் வம்சம்
- இந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்
- மராத்திய அரச குலங்கள் மற்றும் அரசுகள் பட்டியல்
- இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பு
- போபால் இராச்சியம்
- குவாலியர் அரசு
படக்காட்சிகள்
[தொகு]-
மஹேஷ்வர் கோட்டை
-
மஹேஷ்வர் கோட்டை
-
நர்மதை ஆற்றின் கரையில் அகல்யாபாய் படித்துறை, மஹேஷ்வர்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Princely States of India
- ↑ Great Britain India Office. The Imperial Gazetteer of India. Oxford: Clarendon Press, 1908.
- ↑ "Indore Princely State (19 gun salute)". Archived from the original on 2018-06-06. பார்க்கப்பட்ட நாள் 2016-12-13.
வெளி இணைப்புகள்
[தொகு]- The Fabulous Cars of the Holkars of Indore
- Santa Ana's Richest Resident, The Maharajah of Indore பரணிடப்பட்டது 2017-11-12 at the வந்தவழி இயந்திரம்
- Royal Family of Indore