இருபென்சோதயாசெபின்கள்
Appearance
இருபென்சோதயாசெபின்கள் (Dibenzothiazepines) என்பவை இரண்டு பென்சீன் வளையங்கள் கொண்ட தயாசெபின் வழிப்பெறுதிகளாகும். [1] கியுட்டியாபின், தியாநெப்டின், மெட்டியாபின் உள்ளிட்ட உளவியல்சார் மருந்துகள் இவற்றிற்கான சில எடுத்துக்காட்டுகளாகும். ஓர் அமில வினையூக்கியின் முன்னிலையில் 2-அமினோ-2'-கார்பாக்சி-இருபீனைல்சல்பைடு சேர்மத்தை நீரிழப்பு-ஒடுக்க வினைக்கு உட்படுத்தி இருபென்சோதயாசெபின்கள் தயாரிக்கப்படுகின்றன. டைபென்சோதயாசெபின்கள் என்றும் அழைக்கப்படும் இம்மருந்துகள் பற்றிய தற்போதைய ஆய்வுகள் மருந்தியல் மற்றும் இவை குறித்த தரவுகள் மேம்பாட்டில் கவனம் செலுத்துகின்றன.