உள்ளடக்கத்துக்குச் செல்

உசிலம்பட்டி

ஆள்கூறுகள்: 9°58′N 77°48′E / 9.97°N 77.8°E / 9.97; 77.8
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உசிலம்பட்டி
உசிலம்பட்டி பசும்பொன் உ. முத்துராமலிங்கம் நினைவு பேருந்து நிலையம்
உசிலம்பட்டி பசும்பொன் உ. முத்துராமலிங்கம் நினைவு பேருந்து நிலையம்
உசிலம்பட்டி
அமைவிடம்: உசிலம்பட்டி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 9°58′N 77°48′E / 9.97°N 77.8°E / 9.97; 77.8
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் மதுரை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மா. சௌ. சங்கீதா, இ. ஆ. ப [3]
நகராட்சித் தலைவர் யு.பி.ஆர்.பஞ்சம்மாள்
சட்டமன்றத் தொகுதி உசிலம்பட்டி
சட்டமன்ற உறுப்பினர்

பி. அய்யப்பன் (அதிமுக)

மக்கள் தொகை 29,599 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


201 மீட்டர்கள் (659 அடி)

குறியீடுகள்

உசிலம்பட்டி (ஆங்கிலம்:Usilampatti), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். உசிலம்பட்டி மதுரை - தேனி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற ஆனையூர் ஐராவதேஸ்வரர் மற்றும் மீனாட்சி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் அதிக பரப்பளவு கொண்ட சட்டமன்ற தொகுதி ஆகும். இந்நகரமானது நான்கு பக்கமும் மேற்கு தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டுள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் அனைத்து மாவட்டங்களை இணைக்கும் மையப் பகுதியில் அமைந்துள்ள நகரம்.

புவியியல்

[தொகு]

மதுரை மாவட்டத்தில், (9°57′54″N 77°47′19″E / 9.9649°N 77.7885°E / 9.9649; 77.7885) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு உசிலம்பட்டி அமைந்துள்ளது.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 201 மீட்டர் (659 அடி) உயரத்தில் இருக்கின்றது.

உசிலம்பட்டி (Madurai)

மக்கள் வகைப்பாடு

[தொகு]

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 35,219 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 17,625 ஆண்கள், 17,594 பெண்கள் ஆவார்கள். உசிலம்பட்டியில் 1000 ஆண்களுக்கு 998 பெண்கள் உள்ளனர். உசிலம்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 86.84% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 91.83%, பெண்களின் கல்வியறிவு 81.89% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09% விட சற்று கூடுதலானதே. உசிலம்பட்டி மக்கள் தொகையில் 3,427 (9.73%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 94.53% ஆக இருக்கின்றனர். அதையடுத்து கிருஸ்துவர்கள் 2.91%, இஸ்லாமியர்கள் 2.33%, என்ற விகிதத்தில் இருக்கின்றனர். உசிலம்பட்டி மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 7.94%, பழங்குடியினர் 0.01% ஆக உள்ளனர். உசிலம்பட்டியில் 9,101 வீடுகள் உள்ளன.[5]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "Usilampatti". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் 30 சனவரி 2007.
  5. Usilampatti Population Census 2011 பார்த்த நாள்: நவம்பர் 26, 2015
"https://ta.wikipedia.org/w/index.php?title=உசிலம்பட்டி&oldid=4135462" இலிருந்து மீள்விக்கப்பட்டது