உள்ளடக்கத்துக்குச் செல்

உமாதேவி நாகராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரேவண்ணா உமாதேவி நாகராஜ்
2018இல் இரேவண்ணா உமாதேவி நாகராஜ்
பிறப்பு11 பெப்ரவரி 1965 (1965-02-11) (அகவை 59)
இந்தியா

இரேவண்ணா உமாதேவி நாகராஜ் (Revanna Umadevi Nagaraj) (பிறப்பு 11 பிப்ரவரி 1965), ஆங்கில கோல்மேசை ஆட்டம் (பில்லியர்ட்ஸ்) மற்றும் மேடைக் கோற்பந்தாட்டத்தில் ஒரு இந்திய தொழில்முறை வீரர் ஆவார். [1] இவர் உலக மகளிர் கோல்மேசை ஆட்டத்தில் வாகையாளராகவும் (2012) ஆறு முறை இந்திய தேசிய கோல்மேசை ஆட்டத்தில் வாகையாளாருமாவார். இவர் இலண்டன் 2012 வாகையாளர் போட்டியின்போது உலக தரவரிசையில் 13வது இடத்திலிருக்கும் இவா பால்மியசை தோற்கடித்து உலக வாகையாளரானார்.

வாழ்க்கை

[தொகு]

உமாதேவி 1965 இல் பிறந்தார். உமாதேவி தனது வாழ்க்கையின் நடுவே, கோல்மேசை ஆட்டத்தில் தனது திறமையை உணர்ந்தார். பெங்களூரில் தட்டச்சராகப் பணிபுரிந்தபோது, கர்நாடக அரசு செயலகச் சங்கத்திற்குச் சென்று மேசைப்பந்தாட்டத்தை விளையாடினார். ஒரு நாள், பயிற்சிக்காக நீண்ட நேரம் காத்திருந்தபோது, அடுத்துள்ள கோல்மேசை ஆட்டதிற்கு செல்ல முடிவு செய்து, படிப்படியாக விளையாட்டை நேசிக்க ஆரம்பித்தார். அதற்குப் பின், முக்கிய கோல்மேசை ஆட்ட வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களான அரவிந்த் சவுர், எஸ். ஜெய்ராஜ், எம்.ஜி ஜெயராம் ஆகியோரிடம் பயிற்சி பெற்றார். 2012 ஆம் ஆண்டில், உமாதேவி உலக கோல்மேசை ஆட்ட வாகையாளர் பட்டத்தையும், 8 பந்துகள் பிரிவில் தேசிய வாகையாளர் பட்டத்தையும் வென்றார்.

விருதுகள்

[தொகு]

2009 ஆம் ஆண்டு கர்நாடக அரசால் கோல்மேசை ஆட்டத்திற்கான இவரது பங்களிப்பிற்காக ஏகலைவா விருது வழங்கப்பட்டது. கோல்மேசை ஆட்ட வாகையாளர் பட்டத்தையும், 8 பந்துகள் பிரிவில் தேசிய வாகையாளர் பட்டத்தையும் வென்றார். இந்தியாவில் 2017 ஆம் ஆண்டின் 30 சிறந்த பெண் சாதனையாளர்களின் பட்டியலில் இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இருந்து நாரி சக்தி விருது பெற்றார். [2]

சான்றுகள்

[தொகு]
  1. "R. Umadevi". www.cuesportsindia.com. Archived from the original on 27 June 2014. பார்க்கப்பட்ட நாள் 2018-05-03.
  2. "How Umadevi Transformed Herself From A Shy Typist To A Billiards World Champion" (in en-US). The Better India. 2014-06-03. https://www.thebetterindia.com/10945/umadevi-woman-billiards-player-world-champion/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உமாதேவி_நாகராஜ்&oldid=3620828" இலிருந்து மீள்விக்கப்பட்டது