எடிபிசியோ கோபன்
கோபன் கட்டிடம் | |
---|---|
Edifício Copan | |
சாவோ பாவுலோ நகரத்தில் எடிபிசியோ கோபன் | |
பொதுவான தகவல்கள் | |
நாடு | பிரேசில் |
ஆள்கூற்று | 23°32′47.82″S 46°38′39.75″W / 23.5466167°S 46.6443750°W |
தற்போதைய குடியிருப்பாளர் | 2,038 |
கட்டுமான ஆரம்பம் | 1952 |
நிறைவுற்றது | 1961 |
கட்டுவித்தவர் | கம்பெனியா பான்-அமெரிகானா தே கோட்சேயிசு எ துரிசுமோ |
உயரம் | 118.44 m (388.6 அடி) |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 42 |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | ஆசுகார் நெய்மர், கார்லோசு ஆல்பர்டோ செர்கேரா லேமோசு |
பிற தகவல்கள் | |
அறைகள் எண்ணிக்கை | 1,160 |
தரிப்பிடம் | 221 |
எடிபிசியோ கோபன் (கோபன் கட்டிடம்) என்பது பிரேசில் நாட்டின் சாவோ பாவுலோ நகரத்தில் உள்ள ஒரு குடியிருப்புக் கட்டிடம். 118.44 மீட்டர் உயரம் உள்ள இந்த கட்டிடம் 38 தளங்களையும் 1160 குடியிருப்புகளையும் கொண்டது. பிரேசிலின் மிக உயர்ந்த கட்டிடங்களில் இதுவும் ஒன்று.
உருவாக்கம்
[தொகு]சாவோ பாவுலோ நகரத்தின் சிறந்த கட்டிடக் கலை நிபுணரான ஆசுகார் நெய்மாரால் வடிவமைக்கப்பட்டது இந்தக் கட்டிடம். முதலில் ஒரு குடியிருப்பு மற்றும் ஒரு தங்கும் விடுதி என திட்டமிடப்பட்ட இந்தக் கட்டிடம் இறுதியில் ஒரு குடியிருப்பு மட்டும் நிறைவு செய்யப்படுகிறது.
1952 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட கட்டுமான பணிகள் பல தடைகளைக் கடந்து 1966 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது.
வசதிகள்
[தொகு]தற்போது இந்தக் கட்டிகத்தில் 1160 குடியிருப்புகள் உள்ளன. 2038 நபர்கள் தங்கியிருக்கும் இந்தக் கட்டிடத்தில் 20 மின் தூக்கிகளும் 221 தரைகீழ் வாகன நிறுத்திமிடங்களும் உள்ளன. தரை தளத்தில் ஒரு தேவாலயம், ஒரு புத்தக நிலையம், ஒரு பயண நிறுவனம் உட்பட 72 நிறுவங்களும் 4 உணவு விடுதிகளும் உள்ளன. இதன் மொத்த பரப்பளவு 10,572.80 சதுர மீட்டர்.
இங்கு தங்கியிருக்கும் மிக அதிக குடியிருப்பு வாசிகளை கணக்கில் கொண்டு பிரேசில் அஞ்சல் துறை இந்தக் கட்டிடத்திற்கு 01046-925 என்ற தனி அஞ்சல் குறியீட்டு எண்ணை அளித்துள்ளது. .
இந்த கட்டிடத்தின் வெளியில் ஒரு பூங்காவும், முதல் தளத்தில் திறந்த வெளிப் பகுதியில் ஒரு பூங்காவும் இருந்தன. தற்போது கட்டிடத்தின் வெளியே உள்ள பூங்கா ஒரு வங்கிக் கட்டிடமாக உள்ளது. முதல் தளம் மூடப்பட்டுள்ளது.
படங்கள்
[தொகு]-
சாவோ பாவுலோ நகரத்தின் மத்தியில் கோபன் கட்டிடம்
-
முகப்பு
-
அவசர் கால வழி
-
உட்புறம்
External links
[தொகு]- Edifício Copan Administration's Web site (போர்த்துக்கேயம்)