உள்ளடக்கத்துக்குச் செல்

எலும்பு மச்சை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எலும்புநல்லி
Bone Marrow
விளக்கங்கள்
அமைப்புநோயெதிர்ப்பு மண்டலம்[1]
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்Medulla ossium
MeSHD001853
TA98A13.1.01.001
TA2388
FMA9608
உடற்கூற்றியல்

எலும்புநல்லி (Bone marrow) அல்லது எலும்பு மச்சை அல்லது எலும்பு மஞ்சை அல்லது எலும்புச் சோற்றிழையம் என்பது பகுதித் திண்மநிலை உயிரியல் இணைப்பிழையம் ஆகும். இது எலும்பின் பஞ்சுப்பகுதிகளிலும் புரையெலும்புப் பகுதிகளிலும் காணப்படுகிறது.[2] இது பெரிதும் பல எலும்புகளின் நடுப்பகுதியில் காணப்படுகிறது; குறிப்பாக முதன்மையாக விலாக்களிலும் முதுகெலும்புகளிலும், நடுவிலாக்களிலும் இடுப்பு எலும்புகளிலும் அமைகிறது.[3] பறவைகளிலும் பாலூட்டிகளிலும் எலும்புநல்லி தன் முதன்மையான குருதியாக்க மையமாகச் செயல்படுகிறது.[4] இதில் குருதிக்கலங்கள், எஅல்லிக் கொழுப்பு இணைப்பிழையங்கள், ஏந்தலுக்கான கருநிலைக்கலங்கள் ஆகியவை உட்கூறுகளாக அமைகின்றன. நிரலாக (சராசரியாக), மாந்த உடலின் பொருண்மையில் 4% அளவுக்கு எலும்புநல்லி அமைகிறது; 65 கிகி எடையுள்ள வளர்மாந்தரில் எலும்புநல்லி 2.6 கிகி எடையளவுக்குத் தோராயமாக அமைகிறது.[5] மாந்த எலும்புநல்லி ஒருநாளைக்கு 500 பில்லியன் குருதிக் கலங்களை உருவாக்குகிறது; இவை குருதி மண்டலச் சுற்றோட்டத்தில் அகணிக்குழியில் உள்ள குருதிக் குழல்புரைகள் வழியாக கலக்கின்றன].[6] நிணநீர்க்கலங்களும் தண்டுவடக் கலங்கள் உட்பட அனைத்துவகைக் குருதிக்கலங்களும், எலும்புநல்லியில் ஆக்கப்படுகின்றன; என்றாலும் நிணநீர்க்கலங்கள் முதிர, பிற நிணநீர் மண்டலத்துக்குள் நகரல் வேண்டும்.

வெள்ளைக் குருதிக்கலப் புற்று உட்பட்ட கடுமையான எலும்புநல்லி நோய்களை ஆற்ற வேண்டும் எலும்புநல்லிக் கலமாற்றங்களுக்கு, தாவது குருதியாக்க முகிழ்கருக் கலமாற்றங்கள் தேவையாகின்றன். கூடுதலாக எலுபுநல்லி முகிழ்கருக் கலங்கள் வெற்றிகரமாக செயல்முனைவான நரம்புக்கலங்களாக் மாற்றப்பட்டுள்ளன;[7] கிண்ண அழற்சி நோய்களை ஆற்றவும் எலும்புநல்லி முகிழ்கருக் கலமாற்ரங்களைப் பயன்படுத்தலாம்.[8]

கட்டமைப்பு

[தொகு]

எலும்புநல்லியின் உட்கூறுகள் இயங்கியல் தன்மையுள்ளது. இது உயிர்க்கலம்சார், உயிர்க்கலம்சாரா உறுப்புகளைக் கொண்டுள்ளது. இது அகவையைச் சார்ந்து மாறுகிறது. அமைப்புக் காரணிகளைச் சார்ந்தும் மாறுகிறது. இது பேச்சு வழக்கில் இதில் உள்ள குருதியாக்கக் கலங்கள், கொழுப்புக் கலங்களைப் பொறுத்து மஞ்சள் சோறு சிவப்புச் சோறு எனப்படுவதுண்டு(இலத்தீன்: medulla ossium rubra, இலத்தீன்: medulla ossium flava). இதுவரை சரியான எலும்புநல்லி இயங்கமைப்பும் ஒழுங்குமுறையும் அறியப்படவில்லை;[6] உட்கூறுகளின் மாற்றம் வழக்கமான பொதுப்பாணிகளில் நிகழ்கிறது.[9] எடுத்துகாட்டாக, புதிதாக பிறந்த குழந்தையின் எலும்பில் சிவப்புநல்லி அமைகிறது; இது அகவை முதிர முதிர மஞ்சள் நல்லியாக மாறுகிறது. வளர்ந்தவரில், சிவப்புநல்லி முதன்மையாக கூபகம், விலா நடுவெலும்பு, மண்டையோடு, விலாவெலும்புகள் முதுகுத்தண்டு, தோள்பட்டையெலும்பு போன்ற அச்சருகு எலும்புகளில் மட்டும் அமைகிறது. மேலும், தொடையெலும்பு, தோள்கட்டெலும்பு போன்ற நீளெலும்புகளின் நுனிகள், எலும்புகளின் வளர்முனைகள் ஆகியவற்றிலும் ஓரளவு மாறிமாறி அமைகின்றன. நாட்பட்ட உயிரகக்குறை (ஆக்சிஜன்குறை) நிலவும் சூழல்களில் மஞ்சள் நல்லி சிவப்பு நல்லியாக மாறி, சிவப்புக் குருதியாக்கக் கல உருவாக்க வீதத்த்தைக் கூட்டுகின்றன.[10]

குருதியாக்க உறுப்புகள்

[தொகு]
குருதியாக்க முன்னிலைக் கலங்கள்: நடுவில் முன்தண்டுவடக்கலங்கள், அதற்கடுத்து இரு இடைத்தண்டுவடக்கலங்கள், எலும்புநல்லிச் சாற்றின் பட்டைக்கலங்கள்.

உயிர்க்கல மட்டத்தில், எலும்புநல்லியின் முதன்மை பணியுறுப்பாக முன்னாக்க உயிர்க்கலங்கள் அமைகின்றன; இவை பின்னர் முதிர்வுற்று குருதிக்கலங்களாகவும் நிணநீர்க் கலங்களாகவும் மாறுகின்றன. எலும்பு நல்லி குருதியாக்க முகிழ்கலங்களையும் கொண்டுள்ளன; இவை பின்னர் குருதிச் சுற்றோட்ட்த்தில் காணும் மூவகைக் குருதிக் கலங்களாகின்றன; இவை, வெள்ளைக் குருதிக்கலங்கள், சிவப்புக் குருதிக்கலங்கள், சிறுதட்டுக் கலங்கள் என்பனவாகும்.[11]

சிவப்பு எலும்புநல்லி கடத்தி இணைப்பிழையங்களின் உட்கூறுகள் [12]
குழு கலவகை சராசரி
பகவு
மேற்கோள்
நெடுக்கம்]]
தண்டுவட ஆக்கக்
கலங்கள்
தண்டுவடமுகைகள் 0.9% 0.2–1.5
முன் தண்டுவடக் கலங்கள் 3.3% 2.1–4.1
நடுநிலைவேட்பு தண்டுவடக் கலங்கள் 12.7% 8.2–15.7
ஈளைவேட்புத் தண்டுவடக் கலங்கள் 0.8% 0.2–1.3
நடுநிலைவேட்பு தண்டுவடக் கலங்கள் 15.9% 9.6–24.6
ஈளைவேட்புத் தண்டுவடக் கலங்கள் 1.2% 0.4–2.2
நடுநிலைவேட்பு பட்டைக் கலங்கள் 12.4% 9.5–15.3
ஈளைவேட்பு பட்டைக் கலங்கள் 0.9% 0.2–2.4
துண்டான நடுநிலைவேட்பிகள் 7.4% 6.0–12.0
துண்டான ஈளைவேட்பிகள் 0.5% 0.0–1.3
அடிநிலைக் குறுணைக் கலங்களும் mast கலங்களும் 0.1% 0.0–0.2
சிவப்புக்கலவாக்கக்
கலங்கள்
முன்னியல்பு முகைகள் 0.6% 0.2–1.3
அடிநிலை இயல்புமுகைகள் 1.4% 0.5–2.4
பலவண்ன இயல்பு முகைகள் 21.6% 17.9–29.2
செவ்வண்ண இயல்புமுகைகள் 2.0% 0.4–4.6
பிற கல
வகைகள்
பெருங்கருவன் கலங்கள் < 0.1% 0.0-0.4
கணிகக் கலங்கள் 1.3% 0.4-3.9
வலையக் கலங்கள் 0.3% 0.0-0.9
நிணநீர்க் கலங்கள் 16.2% 11.1-23.2
ஒற்றைக் கலங்கள் 0.3% 0.0-0.8

கருநிலைக் கலங்கள் (Stroma)

[தொகு]

எலும்புநல்லியின் கருநிலை கலங்களில், அதன் முதன்மையான பணியாகிய குருதியாக்கத்தில் நேரடியாக பங்கேற்காத அனைத்து இணைப்பிழையங்களும் உள்ளன.[6] இக்கருநிலைக்கலங்கள் மறைமுகமாக குருதியாக்கக் கலங்களை வேறுபடுத்தலில் நுண்சூழல் பின்னணியாக பங்கேற்கலாம் . எடுத்துகாட்டாக, இவை குழுவாக்கத் தூண்டல் காரணிகளை உருவாக்கி, அதன்வழியாக குருதியாக்கத்தில் கணிசமான பங்கேற்கலாம். எலும்புநல்லி கருக்கலங்களில் அமையும் கலவகைகள் கீழுள்ளவற்ரை உள்ளடக்கும்:

  • நாரிழை முகைகள் (வலைய இணைப்பிழையங்கள்)
  • பேருண்கலங்கள், இவை சிவப்புக் குருதிக்கலங்களை (சிவப்பணுக்களை) குருதிமணிகளாக்க இரும்புச் சத்தை எடுத்துச் செல்லும்போது உருவாக்குகின்றன.
  • நல்லிக் கொழுப்பு உயிர்க்கலங்கள் (கொழுப்புக்கலங்கள்)
  • என்புமுகைகள் (தொகுத்தல் எலும்பு)
  • என்புண் கலங்கள் (மீளுறிஞ்சு எலும்பு)
  • [[அகணி உயிர்க்க்கலங்கள்,இவை குருதிக்குழல்களை உருவாக்குகின்றன. இவை அகணி முகிழ்கலங்களில் இருந்து உருவாகின்றன; இவையும் எலும்புநல்லியில் உள்ளன.[11]

பணி

[தொகு]

இடைமுகை முகிழ்கலங்கள்

[தொகு]

எலும்புநல்லியின் கருக்கலங்கள் இடைமுகிழ் உயிர்க்கலங்களைக் கொண்டுள்ளன;[11] இவைஎலும்புநல்லி கருக்கலங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. இவை பன்முகத் திறம் வாய்ந்த உயிர்க்கலங்கள் ஆகும். இவை வேறுபட்ட பலவகை உயிர்க்கலங்களாக மாறவல்லவை. இவற்றை உடலிலோ ஆய்வகத்திலோ வேற்பாடுறவைக்கலாம். இவை எலும்புமுகைகளகவோ குருத்தெலும்புகளாகவோ தசை உயிக்கலங்களாகவோ நல்லிக் கொழுப்பு இணைப்பிழையங்களாகவோ பீட்டா வகை கணைய த் திட்டு உயிர்க்கலங்களாகவோ வேறுபடுறலாம்.

எலும்புநல்லி அரண்

[தொகு]

எலும்புநல்லியின் குருதிக்குழல்கள் ஓர் அரணாக உருவாகி, நல்லியில் இருந்து முதிரா குருதிக்கலங்கள் வெளியேறுவதை தடுக்கின்றன. முதிர்வுற்ர குருதிக்கலங்கள் மட்டுமே அக்குவாப்போரின் கிளைக்கோப்போரின் போன்ற மென்படலப் புரதங்களைக் கொண்டுள்ளன. இவை குருதிக்கலங்கள் குருதிக்குழலில் அகணியோடு இணைந்து கடந்து செல்ல தேவைப்படுகின்றன.[13] குருதியாக்க முகிழ்கருக் கலங்கள் எலும்புநல்லி அரணைக் கடக்கவல்லவை; எனவே, இவற்ரைக் குருதியில் இர்ந்துப் பிரித்து அறுவடை செய்யலாம்.

நிணநீர்மண்டலப் பாத்திரம்

[தொகு]

நிணநீர் மண்டலத்தில் சிவப்பு எலும்புநல்லி முதன்மையான உறுப்பாகும்.இது நிணநீரக உறுப்பாக அமைந்து நிணநீர்க்கலங்களை முதிரா குருதியாக்க முற்கலங்களில் இருந்து உருவாக்குகிறது.[14] எலும்புநல்லியும் கணையக் கலங்களும் ம்தன்மை நிணநீர் இணைப்பிழையங்களை உருவாக்குகின்றன. இவை தாம் நிணநீர்க்கலங்களை உருவாக்குன்றன. மேலும், எலும்புநல்லி நிணநீர் மீண்டும் நிணநீர் மண்டல்த்துக்குள் பாயாதவாறு தடுக்கும் கவாடங்களாகவும் பயன்படுகின்றன.

கல இடப்பிரிப்பு

[தொகு]

எலும்புநல்லிக்குள் பலவகைக் கலங்களுக்கான தனியிடங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. எனவே, சிலவகைக் கலங்கள் குறிப்பிட்ட இடங்களிலேயே பிரிந்து திரள்கின்றன. எடுத்துகாட்டாக, சிவப்புக் குருதிக்கலங்களும், பேருண்கலங்களும் இவற்றையொத்த முன்னாக்கக் கலங்கள் குருதிக் குழல்களில் திரள்கின்றன; அதேவேளையில், குறுணைக்கலங்கள் எலும்புநல்லியின் விளிம்புகளில் திரள்கின்றன.[11]

சமூகமும் பண்பாடும்

[தொகு]

மேலும் காண்க, எலும்புநல்லி (உணவு) விலங்குகளின் எலும்புநல்லி உலகெங்கும் பல ஆயிரம் ஆண்டுகளாக உணவில் கலந்து பயன்பட்டு வருகிறது.

நோயாற்றுதல் சிறப்பு

[தொகு]

நோய்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Schmidt, Richard F.; Lang, Florian; Heckmann, Manfred (2010-11-30). "What are the organs of the immune system?" (in en). © IQWiG (Institute for Quality and Efficiency in Health Care): 3/7. https://www.ncbi.nlm.nih.gov/pubmedhealth/PMH0072579/?report=reader#!po=64.2857. 
  2. C., Farhi, Diane (2009). Pathology of bone marrow and blood cells (2nd ed.). Philadelphia: Wolters Kluwer Health/Lippincott William & Wilkins. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780781770934. இணையக் கணினி நூலக மைய எண் 191807944.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  3. Katherine, Abel (2013). Official CPC Certification Study Guide. American Medical Association.
  4. Arikan, Hüseyin; Çiçek, Kerim (2014). "Haematology of amphibians and reptiles: a review". NORTH-WESTERN JOURNAL OF ZOOLOGY 10: 190-209. http://biozoojournals.ro/nwjz/content/v10n1/nwjz_143501_Cicek.pdf. 
  5. Vunjak-Novakovic, G.; Tandon, N.; Godier, A.; Maidhof, R.; Marsano, A.; Martens, T. P.; Radisic, M. (2010). "Challenges in Cardiac Tissue Engineering". Tissue Engineering Part B: Reviews 16 (2): 169–187. doi:10.1089/ten.teb.2009.0352. 
  6. 6.0 6.1 6.2 Birbrair, Alexander; Frenette, Paul S. (2016-03-01). "Niche heterogeneity in the bone marrow" (in en). Annals of the New York Academy of Sciences 1370 (1): 82–96. doi:10.1111/nyas.13016. பன்னாட்டுத் தர தொடர் எண்:1749-6632. பப்மெட்:27015419. பப்மெட் சென்ட்ரல்:4938003. http://onlinelibrary.wiley.com/doi/10.1111/nyas.13016/abstract. 
  7. "Antibody Transforms Stem Cells Directly Into Brain Cells". Science Daily. 22 April 2013. பார்க்கப்பட்ட நாள் 24 April 2013.
  8. "Research Supports Promise of Cell Therapy for Bowel Disease". Wake Forest Baptist Medical Center. 28 February 2013. Archived from the original on 8 ஆகஸ்ட் 2017. பார்க்கப்பட்ட நாள் 5 March 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. Chan, Brian Y.; Gill, Kara G.; Rebsamen, Susan L.; Nguyen, Jie C. (2016-10-01). "MR Imaging of Pediatric Bone Marrow". RadioGraphics 36 (6): 1911–1930. doi:10.1148/rg.2016160056. பன்னாட்டுத் தர தொடர் எண்:0271-5333. http://pubs.rsna.org/doi/10.1148/rg.2016160056. 
  10. Poulton, T B; Murphy, W D; Duerk, J L; Chapek, C C; Feiglin, D H (1993-12-01). "Bone marrow reconversion in adults who are smokers: MR Imaging findings.". American Journal of Roentgenology 161 (6): 1217–1221. doi:10.2214/ajr.161.6.8249729. பன்னாட்டுத் தர தொடர் எண்:0361-803X. பப்மெட்:8249729. http://www.ajronline.org/doi/10.2214/ajr.161.6.8249729. 
  11. 11.0 11.1 11.2 11.3 Raphael Rubin; David S. Strayer (2007). Rubin's Pathology: Clinicopathologic Foundations of Medicine. Lippincott Williams & Wilkins. p. 90. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7817-9516-8. {{cite book}}: Unknown parameter |last-author-amp= ignored (help)
  12. Appendix A:IV in Wintrobe's clinical hematology (9th edition). Philadelphia: Lea & Febiger (1993).
  13. "The Red Cell Membrane: structure and pathologies" (PDF). Australian Centre for Blood Diseases/Monash University. பார்க்கப்பட்ட நாள் 24 January 2015.
  14. The Lymphatic System. Allonhealth.com. Retrieved 5 December 2011.

வெளி இணைப்புகள்

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலும்பு_மச்சை&oldid=3546087" இலிருந்து மீள்விக்கப்பட்டது