எல். சந்தானம்
எல். சந்தானம் என்பவர் ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக சோழவந்தான் தொகுதியில் 1996 தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1] மேலும் இவர் 2001 தேர்தலில், அனைத்திந்திய பார்வார்டு பிளாக் கட்சி சார்பாக உசிலம்பிட்டியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[2] மீண்டும் 2006 தேர்தலில் சோழவந்தான் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக போட்டியிட்டு திமுக வேட்பாளரான பி. மூர்த்தியிடம் தோல்வி அடைந்தார்.[3][4] அஇஅதிமுக தலைவி ஜெ. ஜெயலலிதா 2001ஆம் ஆண்டு தேர்தலில் தோழமை கட்சியான பார்வர்டு பிளாக்கு கட்சிக்கு உசிலம்பட்டி தொகுதியை ஒதுக்கியிருந்தார்.[5] இவர் தனது பார்வர்டு பிளாக்கு கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக அக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த இவர் 2006 ல் சோழவந்தான் தொகுதியில் மீண்டும் அதிமுக சார்பாக போட்டியிட்டார்.[6] 2006 தேர்தலில் அதிமுக உடன் இணைய தன் கட்சித் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு ஒப்புதல் இல்லாத காரணத்தினால், இவர் 2001-2006 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் தனித்துப் போட்டியிட்ட ஒரே பார்வர்டு பிளாக்கு உறுப்பினர் ஆவார்.[7] சந்தானத்தின் பல்வேறு நடவடிக்கைகளால் அக்கட்சியின் புதிய தலைவர் கார்த்திக் சந்தானத்தை தனது கட்சியிலிருந்து விலக்கிவிட்டார்.[8] அதன் பின்னர் இவர் அதிமுக கட்சியுடன் மேற்கொண்ட ஒப்பந்தப்படி இவருக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.[9] இவருக்கு முதலில் மதுரை மத்தி தொகுதி ஒதுக்கப்பட்டது. ஜெயலலிதா மாநிலம் முழுவதிலும் உள்ள தன் கட்சி உறுப்பினர்களுக்கு திருப்தி தரும் வகையில் தொகுதி ஒதுக்கீடு செய்வதில் ஏற்பட்ட மாற்றங்களால், இவருக்கும் தொகுதி ஒதுக்கீடு செய்வதில் மாற்றம் ஏற்பட்டது.[10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Statistical Report on General Election 1996 for the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 7 October 2010. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
- ↑ "Statistical Report on General Election 2001 for the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-05-09.
- ↑ "Statistical Report on General Election 2006 for the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2018-06-13. பார்க்கப்பட்ட நாள் 2017-05-09.
- ↑ "AIADMK front clinches six out of ten seats". The Hindu. 12 May 2006. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/aiadmk-front-clinches-six-out-of-ten-seats/article3132306.ece. பார்த்த நாள்: 2017-05-09.
- ↑ "AIADMK keeps 'winnable' constituencies". The Hindu. 8 April 2001. http://www.thehindu.com/2001/04/08/stories/04082231.htm. பார்த்த நாள்: 2017-05-09.
- ↑ "Fissures develops in AIFB". The Times of India. PTI. 15 March 2004. http://timesofindia.indiatimes.com/city/Fissures-develops-in-AIFB/articleshow/562148.cms. பார்த்த நாள்: 2017-05-09.
- ↑ Dorairaj, S. (6 February 2006). "Fissures to fore in Forward Bloc". The Hindu இம் மூலத்தில் இருந்து 2006-05-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060528212109/http://www.hindu.com/2006/02/06/stories/2006020611660100.htm.
- ↑ "Suspended AIFB MLA unrelenting; secures Court Stay". OneIndia. 6 March 2006. http://www.oneindia.com/2006/03/04/suspended-aifb-mla-unrelenting-secures-court-stay-1141626487.html. பார்த்த நாள்: 2017-05-09.
- ↑ "Santhanam to contest one seat as AIADMK ally". OneIndia. 14 March 2006. http://www.oneindia.com/2006/03/14/santhanam-to-contest-one-seat-as-aiadmk-ally-1142338370.html. பார்த்த நாள்: 2017-05-09.
- ↑ Subramanian, T. S. (21 April 2006). "Assembly Elections - Promising Start". Frontline 23 (7). http://www.frontline.in/static/html/fl2307/stories/20060421004303200.htm. பார்த்த நாள்: 2017-05-09.