உள்ளடக்கத்துக்குச் செல்

ஏஜ் ஆஃப் எம்பயர்ஸ் II

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏஜ் ஆஃப் எம்பயர்ஸ் II: தி ஏஜ் ஆஃப் கிங்ஸ் என்பது நிகழ்நேர வியூக கணினி விளையாட்டு ஆகும். இந்த விளையாட்டு என்செம்பிள் ஸ்டூடியோஸால் உருவாக்கப்பட்டு மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டது. ஏஜ் ஆஃப் எம்பயர்ஸ் கணினி விளையாட்டின் இரண்டாவது  தொடரான தி ஏஜ் ஆஃப் கிங்ஸ் மைக்ரோசொப்ட் விண்டோஸ் மற்றும் மேகின்டோஷ் ஆகிய இயங்குதளங்களிற்காக 1999 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

ஏஜ் ஆஃப் எம்பயர்ஸ் II: தி ஏஜ் ஆஃப் கிங்ஸ்
ஆக்குனர் என்செம்பல் ஸ்டூடியோ
வெளியீட்டாளர் மைக்ரோசாப்ட்(வின், மேக்)
கொனாமி (PS2)
வடிவமைப்பாளர் புரூஸ் செல்லி[1]
நிரலாளர் அஞ்சலோ லாடன்
ஓவியர்
  • பிரட் க்ரோ
  • ஸ்கொட் வின்சன்ட்
இசையமைப்பாளர் ஸ்டெபன் ரிப்பி
தொடர் ஏஜ் ஆஃப் எம்பயர்ஸ்
கணிமை தளங்கள் மைக்ரோசப்ட் விண்டோசு, மேக் ஓஎஸ், ப்ளே ஸ்டேசன் 2
பாணி நிகழ்நேர வியூகம்


விளையாடும் முறை

[தொகு]

ஏஜ் ஆஃப் எம்பயர்ஸ் II  வரலாற்று நிகழ்நேர வியூக விளையாட்டு ஆகும். இதில் விளையாடுபவர் நகரங்களை உருவாக்குதல், வளங்களை சேகரித்தல் மற்றும் எதிரிகளை தோற்கடிக்க படைகளை உருவாக்குதல் என்பவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.  போட்டி நகரங்களையும், பேரரசுகளையும் கைப்பற்ற வேண்டும். புதிய யுகத்திற்கும் முன்னேறும் போது புதிய அலகுகள், கட்டமைப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை திறக்கலாம். கட்டிடங்களை வளங்களை (பொதுவாக உணவு மற்றும் தங்கம்) கட்டியெழுப்ப வேண்டும்.[2]

விளையாட்டு நான்கு வகையான வளங்களை வழங்குகிறது. கிராமவாசிகள் என்று அழைக்கப்படும் பொதுமக்கள் அலகுகள் வளங்களை சேகரிக்கப் பயன்படுத்தப்படுகின்றனர். அவர்களை கொண்டு உணவு, விறகு, தங்கம் மற்றும் கல் ஆகிய நான்கு வகை வளங்களை சேகரிக்கலாம். அவ்வளங்களை படையினரை பயிற்றுவிப்பதற்கும், கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கும், ஆராய்ச்சி தொழில்நுட்பங்களுக்கும் பயன்படுத்தலாம். விலங்குகளை வேட்டையாடுவது, பழங்களை சேகரிப்பது, கரையோர மீன்பிடித்தல் மற்றும் படகுகளில் இருந்து மீன்பிடித்தல் ஆகியவற்றால் உணவு பெறப்படுகிறது. மரங்களை வெட்டுவதன் மூலம் விறகு சேகரிக்கப்படுகிறது. தங்க சுரங்கங்கள், வர்த்தகம் அல்லது நினைவுச்சின்னங்களை சேகரித்தல் ஆகியவற்றிலிருந்து தங்கம் பெறப்படுகிறது. மேலும் கல் சுரங்கங்களில் இருந்து கல் சேகரிக்கப்படுகிறது. கிராமவாசிகளுக்கு சோதனைச் சாவடிகள், சேமிப்பகங்களில் சேகரிக்கப்பட்ட வளங்களை சேமிக்க முடியும்.[3]

வெளியீடு

[தொகு]

1999 ஆம் ஆண்டில் அக்டோபர் இல் தி ஏஜ் ஆஃப் கிங்ஸின் செயற்காட்சி வெளியிடப்பட்டது.[4] இவ்விளையாட்டை இரண்டு விதமாக விளையாடலாம். வரைபடத்தில் ஆடும் ஆட்டம் மற்றம் தொடர்ச்சியான விளையாட்டு (campaign). செயற்காட்சி இதற்கான எடுத்துகாட்டுகளை கொண்டிருந்தது.[5] விளையாட்டின் முழுமையற்ற பதிப்புகள் சட்டவிரோத தளங்களால் கசிந்ததால் என்செம்பிள் ஸ்டுடியோ ஏமாற்றமடைந்தது. இவை சட்டவிரோதமாக பசிபிக் வலயத்தை சூழவுள்ள நாடுகளில் விற்கப்பட்டன. தென் கொரியாவில் உள்ள மைக்ரோசாஃப்ட் அலுவலகங்களுக்கு வெளியேயும் விற்கப்பட்டன.[6]

வரவேற்பு

[தொகு]

இந்த விளையாட்டு வெளியான மூன்று மாதங்களின் பின் தி ஏஜ் ஆஃப் கிங்ஸின் இரண்டு மில்லியன் பிரதிகள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தினால் பிற நாடுகளுக்கு அனுப்பப்பட்டது. இந்த விளையாட்டு அமெரிக்கா, சப்பான், ஐக்கிய இராச்சியம், ஜெர்மனி, பிரான்சு, ஆத்திரேலியா மற்றும் தென் கொரியாவில் விற்பனை பட்டியலில் முதலிடத்தை பெற்றது.[7] அடுத்த இரண்டரை ஆண்டுகளிலும் விற்பனை பட்டியல்களில் முதல் 20 இற்குள் இடம்பிடித்தது.[8] இது 1999 ஆண்டில் அதிக விற்பனையான நான்காவது விளையாட்டு ஆகும்.[9] 1999 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த விளையாட்டின் விற்பனை அமெரிக்காவில் மட்டும் 469,376 ஆகவும், 20.2 மில்லியன் டாலர் வருவாயையும் ஈட்டியது.[10][11]

1999 ஆம் ஆண்டில் கேம்ஸ்பாட்டின் ஆண்டின் வியூக விளையாட்டாக வெற்றி பெற்றது. [12]மேலும் ஆண்டின் சிறந்த விளையாட்டாக பரிந்துரைக்கப்பட்டது.[13] இந்த கணினி விளையாட்டுக்கு பிசி கேமர் மற்றும் கம்ப்யூட்டர் கேமிங் வேர்ல்ட் எடிட்டர் சாய்ஸ் விருதுகளை வழங்கின.[14] தி ஏஜ் ஆஃப் கிங்ஸ் 2000 ஆம் ஆண்டு அகாடமி ஒப் இன்டராக்டிவ் ஆர்ட்ஸ் அன்ட சயன்ஸ் விருதுகளில் ஆண்டின் வியூக விளையாட்டு மற்றும் ஆண்டின் கணினி விளையாட்டுக்கான விருதுகளை பெற்றது. மேலும் ஆண்டின் சிறந்த விளையாட்டு, சிறந்த அனிமேஷன், சிறந்த விளையாட்டு வடிவமைப்பு ஆகியவற்றுக்காகவும் பரிந்துரைக்கப்பட்டது. [15]ஐ.ஜி.என் 2005 ஆம் ஆண்டில் எல்லா நேரத்திலும் 53 வது சிறந்த விளையாட்டாகவும், 2007 ஆம் ஆண்டில் 10 வது சிறந்த கணினி விளையாட்டாக தரவரிசைப்படுத்தியது.[16][17]

குறிப்புகள்

[தொகு]
  1. "57. Bruce Shelley". ign.com. Archived from the original on March 7, 2017. பார்க்கப்பட்ட நாள் April 4, 2017.
  2. Age of Empires II: The Age of Kings Manual. Microsoft Corporation.
  3. "Overview of resources Gamespot". web.archive.org. Archived from the original on 2009-03-10. பார்க்கப்பட்ட நாள் 2019-10-21.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  4. Age of Empires II: The Age of Kings - IGN (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2019-10-21
  5. "Microsoft Age of Empires II: Age of Kings". web.archive.org. 2008-10-07. Archived from the original on 2008-10-07. பார்க்கப்பட்ட நாள் 2019-10-21.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  6. "Gamasutra - The Art & Business of Making Games". www.gamasutra.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-21.
  7. ""Age of Empires II: The Age of Kings" Crowned No. 1 On Holiday Sales Charts Around the World". Stories (in அமெரிக்க ஆங்கிலம்). 2000-01-27. பார்க்கப்பட்ட நாள் 2019-10-21.
  8. ""Chapter 19: Age of Empires II: Good, Semi-Historical Fun"".
  9. "1999's Best-Selling Games - News at GameSpot". web.archive.org. 2009-04-03. Archived from the original on 2009-04-03. பார்க்கப்பட்ட நாள் 2019-10-21.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  10. Staff (April 2000). "Eyewitness; Shake Your Money-Maker". PC Gamer US. 7 (4): 32.
  11. ""PC Data Top Selling PC Games for 1999"". Archived from the original on 2000-08-17.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  12. "GameSpot - /features/1999/p3_09a.html". web.archive.org. 2008-12-28. Archived from the original on 2008-12-28. பார்க்கப்பட்ட நாள் 2019-10-21.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  13. "GameSpot - /features/1999/p4_01.html". web.archive.org. 2009-01-10. Archived from the original on 2009-01-10. பார்க்கப்பட்ட நாள் 2019-10-21.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  14. ""Age of Empires II: The Age of Kings" Crowned No. 1 On Holiday Sales Charts Around the World". Stories (in அமெரிக்க ஆங்கிலம்). 2000-01-27. பார்க்கப்பட்ட நாள் 2019-10-21.
  15. "The Academy of Interactive Arts & Sciences :: Awards". web.archive.org. 2008-06-08. Archived from the original on 2008-06-08. பார்க்கப்பட்ட நாள் 2019-10-21.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  16. "IGN's Top 100 Games". web.archive.org. 2008-09-30. Archived from the original on 2013-06-22. பார்க்கப்பட்ட நாள் 2019-10-21.
  17. The 25 Best PC Games to Play Right Now - IGN (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2019-10-21[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏஜ்_ஆஃப்_எம்பயர்ஸ்_II&oldid=3586408" இலிருந்து மீள்விக்கப்பட்டது