ஐரோப்பியப் பூச்சியியல் ஆய்விதழ்
ஐரோப்பியப் பூச்சியியல் ஆய்விதழ் European Journal of Entomology | |
---|---|
சுருக்கமான பெயர்(கள்) | Eur. J. Entomol. |
துறை | பூச்சியியல் |
மொழி | ஆங்கிலம் |
பொறுப்பாசிரியர்: | பெற் சுவாச்சா |
வெளியீட்டு விவரங்கள் | |
பதிப்பகம் | செக் அறிவியல் கழகம் (செக் குடியரசு) |
வரலாறு | 1904–முதல் |
வெளியீட்டு இடைவெளி: | காலாண்டு இதழ் |
Open access | ஆம் |
License | CC-BY 4.0 |
தாக்க காரணி | 1.182 (2020) |
குறியிடல் | |
ISSN | 1210-5759 (அச்சு) 1802-8829 (இணையம்) |
OCLC | 488234955 |
இணைப்புகள் | |
ஐரோப்பியப் பூச்சியியல் ஆய்விதழ் (European Journal of Entomology) என்பது செக் அறிவியல் கழகத்தினால் வெளியிடப்படும் சக மதிப்பாய்வு செய்யப்படும் திறந்த அணுகல் கொண்ட அறிவியல் ஆய்விதழ் ஆகும். இது வருடத்திற்கு நான்கு முறை வெளியாகும் காலாண்டு இதழாகும். இதில் பலகாலிகள், கெலிசராட்டு உள்ளடக்கிய பூச்சியியல் ஆய்வுகளையும் நிலத்தில் வாழும் ஓடுடைய கணுக்காலிகள் குறித்த ஆய்வுகளையும் வெளியிடுகிறது. இது 1904ஆம் ஆண்டில் செக் பூச்சியியல் சங்கத்தால் ஆக்டா சொசைட்டாடிஸ் என்டோமோலாஜிகே போஹேமியா என்ற தலைப்பில் நிறுவப்பட்டது. பின்னர் ஆக்டா என்டோமோலாஜிகா போஹெமோசுலோவாக்கா எனப் பெயரிடப்பட்டது. ஆய்விதழின் அட்டைப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள பூச்சி பைரோகோரிசு ஆப்டெரசு ஆகும்.[1] ஆய்விதழ் மேற்கோள் அறிக்கைகளின்படி, இந்த ஆய்விதழின் 2020ஆம் ஆண்டிற்கான தாக்கக் காரணி 1.182 ஆகும்.[2] 2016ஆம் ஆண்டில், இந்த ஆய்விதழ் மின்னணு இதழாக மட்டுமே திறந்த அணுகலுடன் வெளியாகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "European Journal of Entomology: About the Journal". பார்க்கப்பட்ட நாள் 2013-04-01.
- ↑ https://www.scijournal.org/impact-factor-of-eur-j-entomol.shtml