ஓக்லாந்து கிறம்மர் பாடசாலை
Appearance
ஓக்லாந்து கிறம்மர் பாடசாலை (Auckland Grammar School) நியூசிலாந்தில் ஓக்லாந்து நகரில் உள்ள ஆண்களுக்கான ஒரு உயர்தரப் பள்ளி ஆகும். 1868 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இப்பாடசாலை நியூசிலாந்தின் முக்கிய பாடசாலைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆண்டு 9 இலிருந்து ஆண்டு 13 வரை வகுப்புகளில் இங்கு மாணவர்கள் கற்கிறார்கள். மாணவர்கள் பாடசாலை விடுதியிலேயே தங்கிப் படிக்கும் வசதியும் உண்டு.
பாடசாலையின் குறிக்கோளான "Per Angusta ad Augusta" (கடினத்தில் இருந்து உச்சம் வரை) என்பதை ஓக்லாந்தின் வேறு சில பள்ளிகளும் தமது குறிக்கோளாகக் கொண்டுள்ளன.[1][2][3]
பலரும் அறிந்த பழைய மாணவர்கள்
[தொகு]- மார்ட்டின் குரோவ் (Martin Crowe) (1962, துடுப்பாட்டக்காரர்)
- றசல் குரோவ் (Russell Crowe) (1964, நடிகர்)
- சேர் எட்மண்ட் ஹில்லறி, (1919, எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் மனிதர்)
வெளி இணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Decile Change 2014 to 2015 for State & State Integrated Schools". Ministry of Education. 29 November 2013. பார்க்கப்பட்ட நாள் 12 February 2015.
- ↑ "Secondary Schools in Auckland, New Zealand". Aucklandforkids.org.nz. Auckland for Kids. 7 July 2020. பார்க்கப்பட்ட நாள் 8 July 2020.
- ↑ "Tim O'Connor". Blakenz.org. Blake. பார்க்கப்பட்ட நாள் 15 November 2021.