ஓண்டலசுநசு சண்டை
Appearance
ஓண்டலசுநசு சண்டை | |||||||
---|---|---|---|---|---|---|---|
நார்வே போர்த்தொடரின் பகுதி | |||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஐக்கிய இராச்சியம் நோர்வே | ஜெர்மனி | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
பெர்னார்ட் பாகெட் | |||||||
இழப்புகள் | |||||||
? | ? |
ஓண்டலசுநசு சண்டை (Battle of Åndalsnes) என்பது இரண்டாம் உலகப் போரின் போது நார்வேயில் நிகழ்ந்த ஒரு சண்டை. நார்வே போர்த்தொடரின் ஒரு பகுதியான இதில் பிரித்தானியப் படைகள் நார்வேயின் ஓண்டலுசுநசு பகுதியைக் கைப்பற்ற முயன்று தோற்றன.
ஏப்ரல் 9, 1940ல் நார்வே மீதான ஜெர்மானியப் படையெடுப்பு தொடங்கியது. அதே நாளில் நார்வே ஜெர்மனியின் கட்டுப்பாட்டில் வராமல் இருக்க நேச நாட்டுப் படைகளும் நார்வேயில் தரையிறங்கின. இதன் ஒரு பகுதியாக துரோன்ஹெய்ம் நகரைக் கைப்பற்ற பிரித்தானியப் படைகள் ஓண்டலுசுநசு பகுதியில் கடல்வழியாகத் தரையிறங்கின. ஆனால் ஜெர்மானிய எதிர்த்தாக்குதல்களின் காரணமாக அவற்றால் விதிக்கப்பட்ட இலக்குகளை அடைய முடியவில்லை. மே மாத துவக்கத்தில் அவை ஓண்டலுசுநசிலிருந்து பின்வாங்கி விட்டன.