கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில்
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி தேவி கன்னியாகுமரி அம்மன் கோவில் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
தேவி கன்யா குமாரி | |
---|---|
தேவநாகரி | देवी कन्या कुमारी |
சமசுகிருதம் | தேவி கன்யா குமாரி |
தமிழ் எழுத்து முறை | தேவி கன்யா குமாரி |
எழுத்து முறை | ദേവി കന്യാകുമാരി |
வகை | ஸ்ரீபகவதி (பார்வதி) |
இடம் | இந்தியாவின் தென்கோடி |
மந்திரம் | அம்மே நாராயனா! தேவி நாராயானா! லெக்சுமி நாராயானா! பத்ரி நாராயனா! |
ஆயுதம் | ஜெப மாலை |
துணை | கன்னித் தெய்வம் |
கன்னியாகுமரி பகவதி அம்மன் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில், இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா எனும் முக்கடல்கள் கூடுமிடத்தில், இந்தியாவின் தென்முனையில் அமைந்துள்ளது. சக்தி பீடங்களில் ஒன்று. கோயிலின் உற்சவ மூர்த்தியின் பெயர்கள்; தியாக செளந்தரி, பால சௌந்தரி. புனித தீர்த்தத்தின் பெயர் பாபநாச தீர்த்தம். இது 1000-2000 ஆண்டு பழமையான கோயில் ஆகும்.[1][2]
ஒளிமிக்க கன்னியாகுமரி பகவதி அன்னையின் மூக்குத்தி யோகசக்தியின் வெளிப்பாடு என்பதால் பக்தர்களின் வழிபாட்டுக்கு உரியதாக உள்ளது.[3]
புராண வரலாறு
[தொகு]“கன்னிப் பெண் ஒருத்தியைத் தவிர, வேறு எவராலும் தனக்கு மரணம் நிகழக்கூடாது”; என்ற வரத்தைப் பிரம்ம தேவரிடம் இருந்து பெற்றவன் பாணாசுரன் என்னும் கொடிய அசுரன். அவன் பெற்ற அந்த வரத்தை வைத்துக் கொண்டு தேவர்களையும், முனிவர்களையும் படாதபாடு படுத்தினான்.
தேவர்களும், முனிவர்களும், தங்கள் துன்பங்களை துடைத்தருளும்படி மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். அவரோ, 'பாணாசுரன், கன்னிப்பெண்ணால் தான் தனக்கு மரணம் நிகழ வேண்டும் என்று வரம் பெற்றுள்ளான். ஆகையால் உங்களுக்கு அந்த மகேசனின் அருகில் அமர்ந்துள்ள மகேஸ்வரியால்தான் உதவ முடியும்' என்று வழி கூறினார்.
இதனால் அனைவரும் அன்னை பார்வதியை வேண்டி யாகம் செய்தனர். யாகத்தின் நிறைவில் ரிஷப வாகனத்தில் சிவபெருமானும், பார்வதி தேவியும் காட்சியளித்தனர். அம்மையப்பன் இருவரையும் கண்டதும் ஆனந்தக்கூத்தாடினர் தேவர்களும், ரிஷிமுனிவர்களும். அவர்களைப் பார்த்து, அன்பர்களே! தங்களின் குறையை நான் அறிவேன். உங்கள் துயரங்கள் விலகும் வேளை வந்து விட்டது. எனது தேவியானவள், பரத கண்டத்தின் தென்கோடியில் குமரியில் ஒரு கன்னியாக வடிவெடுத்து, பாணாசுரனை வதம் செய்து உங்களுக்கு வாழ்வளிப்பாள் என்று ஆசி கூறினார் சிவபெருமான். அவ்வாறு கன்னியாக இவ்விடத்தில் பகவதி அன்னையாக அவதரித்த பார்வதி தேவி, பாணாசூரனை அழித்த பின்னர், சிவபெருமானை திருமணம் செய்ய வேண்டி கன்னியாக தவம் செய்யத் துவங்கினார்.
இதனையும் காண்க
[தொகு]- கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோயில்
- விவேகானந்த கேந்திரம்
- காந்தி மண்டபம்
- விவேகானந்தர் பாறை
- விவேகானந்தர் நினைவு மண்டபம்
- திருவள்ளுவர் சிலை
அருகில் உள்ள சுற்றுலா இடங்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://temple.dinamalar.com/en/New_en.php?id=614
- ↑ https://temple.dinamalar.com/New.php?id=614
- ↑ "கன்னியாகுமரி பகவதி அம்மன் மூக்குத்தி". Archived from the original on 2021-09-27. பார்க்கப்பட்ட நாள் 2020-09-13.
வெளி இணைப்புகள்
[தொகு]- கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வரலாறு.
- கன்னியாகுமரி வழித்தட வரைபடம்Route Guide for reaching Temple பரணிடப்பட்டது 2007-12-18 at the வந்தவழி இயந்திரம்