கம்மல்
Appearance
கம்மல் (ⓘ) என்பது காதுகளில் அணியும் ஆபரணங்களில் ஒன்று. ஆண்களும், பெண்களும் அணிந்துகொண்டலும், பெண்களே அதிகளவில் அணிகின்றனர். இரு காதுகளிலும் ஒரே மாதிரியாக அணிவோரும், ஒரு காதில் மட்டும் அணிவோரும் உள்ளனர்.
கீழ்காதில் துளையிட்டு கம்மல்களை அணிகின்றனர்.. பொதுவாக தங்கம், வெள்ளி, பிளாட்டினம், செம்பு முதலிய உலோகங்களில் செய்தவற்றையே பயன்படுத்துகின்றனர். தற்காலத்தில், பிளாஸ்டிக், கண்ணாடி ஆகியவற்றினால் ஆனவற்றையும் அணிகின்றனர்.
கேரளத்தில் பெண்கள் மேல்காதில் அணியும் கம்மலை மேக்காமோதிரம் (மேல்+காது+மோதிரம்) என அழைக்கின்றனர்.
காதுகுத்து
[தொகு]கேரளத்திலும், தமிழ்நாட்டிலும் இந்துமதத்தின் சில சமுதாயங்கள் காதுகுத்து என்ற பெயரில் குழந்தைகளுக்கு காது குத்தும் சடங்கை நடத்துகின்றனர். [1]