உள்ளடக்கத்துக்குச் செல்

காசாக்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காசாக்கரை
قطاع غزة
அமைவிடம்
பெரிய நகர்காசா
ஆட்சி மொழி(கள்)அரபு
அரசாங்கம்அமாசு-தலைமையிலான அரசு
• பிரதமர்
இசுமாயில் அனியே
• அதிபர்
முகம்மது அப்பாசு
ஒழுங்கமைப்பு
• ஒசுலோ தீர்மானங்கள் கைச்சாத்து
செப்டம்பர் 13, 1993
• பாலசுதீன அதிகார சபை பகுதி பொறுப்பு
மே 1994
• பாலசுதீன அதிகார சபை முழுப் பொறுப்பு
செம்டம்பர் 2005
பரப்பு
• மொத்தம்
360 km2 (140 sq mi) (201வது)
மக்கள் தொகை
• 2007 மதிப்பிடு
1,482,405 (149வது1)
• அடர்த்தி
4,118/km2 (10,665.6/sq mi) (6th1)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)மதிப்பீடு
• மொத்தம்
$770 மில்லியன் (160வது1)
• தலைவிகிதம்
600 $ (167வது1)
நாணயம்Israeli new sheqel, எகிப்திய பவுண்டு (de facto) (ILS)
நேர வலயம்ஒ.அ.நே+2
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+3
அழைப்புக்குறி970

காசாக்கரை (Gaza Strip, அரபு மொழி: قطاع غزة‎) என்பது நடுநிலக் கடலின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள ஒரு சுயாட்சி கொண்ட ஒரு நிலக்கீற்றாகும். இதன் எல்லைகளாக தென்மேற்கே (11 கிமீ) எகிப்தும், கிழக்கு மற்றும் வடக்கே (51 km (32 mi)) இசுரேலும் உள்ளன. காசாக் கரை அண்ணளவாக 41 கிலோமீட்டர் (25 மை) நீளமும் 6 கிலோமீட்டர் (4 மை) தொடக்கம் 12 கிலோமீட்டர் (7 மை) அகலமானதுமாகும். மொத்தப் பரப்பளவு 360 ச.கி.மீ (139 ச.மை) ஆகும். இந்த மண்டலத்தின் முக்கிய நகரான காசாவின் பெயரே இம்மண்டலத்துக்கு இடப்பட்டுள்ளது. இங்கு அண்ணளவாக 1.4 மில்லியன் பாலத்தீனர்கள் வசிக்கிறார்கள்.[1]

ஆட்சி

[தொகு]

2007 ஆம் ஆண்டு முதல், காசாக் கரை ஹமாஸ் என்ற அமைப்பினரால் நிருவகிக்கப்பட்டு வருகிறது. 2012 ஆம் ஆண்டு முதல், காசாக் கரை பலத்தீன் நாட்டின் ஒரு பகுதியாக ஐக்கிய நாடுகள் அறிவித்தது. இப்பிரதேசத்தை ரமால்லாவைத் தளமாகக் கொண்டியங்கும் பலத்தீன அரசு தமது பகுதியாகக் கோரி வந்துள்ளது. ஆனாலும், காசா, ரமாலா அரசுகளை இணைக்கும் முயற்சி இன்று வரை தோல்வியிலேயே முடிந்துள்ளது.

1967 முதல் 2005 வரை இசுரேல் காசாக் கரையை ஆக்கிரமித்திருந்தது இப்போதும் காசாக்கரையின் வான்தளத்தையும் காசாவின் கடல் எல்லையையும் காசா-இசுரேல் எல்லைகளையும் கட்டுப்படுத்தி வருகிறது. 1948 முதல் 1967 வரை காசாக்கரையை ஆக்கிரமித்திருந்த எகிப்து காசாக்கரைக்கும் சீனாய் பாலைவனத்துக்குமிடையான எல்லையைக் கட்டுப்படுத்தி வருகிறது. இப்பகுதியில் நடந்துவரும் நிகழ்வுகளினால் இன்னும் ஐந்து ஆண்டுகளில் மனிதர்கள் வாழமுடியாத பகுதியாக காசா மாறிவிடலாம் என்று ஐநா சபையின் ஒரு நிறுவனமான வர்த்தகம் மற்றும் வளர்ச்சி பற்றிய ஐக்கிய நாடுகள் மாநாடு (UNCTAD) தெரிவித்துள்ளது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "CIA World Fact Book – Gaza Strip". Archived from the original on 2014-06-08. பார்க்கப்பட்ட நாள் 2008-04-12.
  2. ஐந்து ஆண்டுகளில் காசா யாரும் வாழ முடியாத இடமாக மாறிவிடலாம்: ஐநா எச்சரிக்கை தி இந்து தமிழ் பார்த்த நாள் 03. செப்டம்பர் 2015

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசாக்கரை&oldid=3850632" இலிருந்து மீள்விக்கப்பட்டது