காந்தி சேவா சதன்
கதகளி சாதனம், காந்தி சேவா சதன் (Gandhi Seva Sadan) என்பது தென்னிந்தியாவின் வட-மத்திய கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் ஒற்றப்பாலத்திற்கு கிழக்கே 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெருர் கிராமத்தில் பத்து ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு கதகளி பயிற்சிப் பள்ளி ஆகும். இது 1953 ஆம் ஆண்டில் (மறைந்த) காந்தியவாதியும், விடுதலைப் போராட்ட வீரருமான கே. குமரனால் நிறுவப்பட்டது.
பொன் விழாவை கொண்டாடிய சாதன் கதகளி மற்றும் பாரம்பரிய கலை அகாடமியானது பாரம்பரிய குருகுலம் பாணியில் பாரம்பரிய கதகளி நாட்டிய-நாடகபாணி நிகழ்த்துக் கலையை பயிற்சி அளிக்கும் நான்கு பழமையான பள்ளிகளில் ஒன்றாகும். இந்த சாதனைச் சேர்ந்த கதகளி நிபுணர்களில் மிக முக்கியமானவர்கள் அனைவரும் பத்மசிறீ கீழ்பாதம் குமரன் நாயரின் கீழ் பயிற்சி பெற்றவர்களாவர்.
இங்கு நீண்டகால வகுப்புகள், குறுகிய கால வகுப்புகள் போன்றவை உள்ளன. வெளிநாட்டினரும் இங்கு தங்கி பயிற்சி பெற வசதிகள் செய்யபட்டுள்ளன.
பாரதப்புழா ஆற்றின் கரையில் ஒரு பசுமையான, அமைதியான பகுதியில் அமைந்துள்ள சதனம் பள்ளியானது, நடிகர்-நடனக் கலைஞர்கள், இசைக்கலைஞர்கள், தாளக்கலைஞர்கள், ஒப்பணைக் கலைஞர்கள், ஓய்வு அறை உதவியாளர்கள் என இந்தத் துறையில் பாராட்டுகளைப் பெற்ற பல கலைஞர்களை உருவாக்கியுள்ளது. அவர்களில் சதனம் கிருஷ்ணான்குட்டி, பாலகிருஷ்ணன், ராமன்குட்டி, நரிப்பட்டா நாராயணன் நம்பூதிரி, பரியநம்பட்டா திவாகரன், சதனம் கே. அரிகுமரன், பாசி, மணிகாந்தன், ஸ்ரீநாதன், ராகுல், கிரண் போன்ற நடிகர்-நடனக் கலைஞர்களும், சதனம் ஜோதி ராதாகிருஷ்ணன், ராஜகோபாலன், சியாமளன், சிவதாஸ் போன்ற இசைக்கலைஞர்கள், செண்டைக் கலைஞர்களான சதானம் வாசு, மட்டன்னூர் சங்கரங்குட்டி மரார், சதனம் திவாகரன், கோபாலகிருஷ்ணன், ராமகிருஷ்ணன், சிவகுமார், ஸ்ரீகுமார் போன்றோரும், செர்புலசேரி சிவன், சதனம் ஸ்ரீதரன், ராமச்சந்திரன், முருகஜோதி, ராஜன், தேவதாஸ், பரதராஜன் போன்ற மத்தளக் கலைஞர்கள், சதனம் ஸ்ரீனிவாசன் மற்றும் சாஜு போன்ற ஒப்பனை ( சுட்டி ) கலைஞர்கள். குஞ்சன், கோவிந்தன் பொன்ற ஓய்வறைக் கலைஞர்கள் போன்றோர் ஆவர்.
கேரள அரசு சுற்றுலாத் துறையின் உத்தியோகபூர்வ சுற்றுலா தளங்களில் சதனம் பட்டியலிடப்பட்டுள்ளது.[1]
குறிப்புகள்
[தொகு]மேலும் காண்க
[தொகு]கதகளி நிகழ்வுகளை அறிய [https://web.archive.org/web/20200110213152/http://www.kathakalinews.com/ பரணிடப்பட்டது 2020-01-10 at the வந்தவழி இயந்திரம் [கதகளி செய்தி ]]