காஷ்மீரி திரைப்படத்துறை
Appearance
காஷ்மீரி திரைப்படத்துறை (Kashmiri cinema) என்பது இந்திய நாட்டில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் தயாரிக்கப்படும் காஷ்மீரி மொழியில் வெளியாகும் திரைப்படங்களையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய திரைத்துறை ஆகும்.[1] முதல் காஷ்மீர் திரைப்படமான 'மைன்ஸ் ராட்' என்று திரைப்படம் 1964 இல் வெளியானது.[2]
1964 இல் முதல் காஷ்மீர் திரைப்படம் 'ஜெய்கிராம் பால்' இயக்கிய 'மெய்ன்ஸ் ராத்' என்ற திரைப்படம் ஆகும். அதை தொடர்ந்து 1972 ஆம் ஆண்டில் காஷ்மீர் கவிஞர் மஹ்ஜூரின் சுயசரிதை படமான 'ஷாயர்-இ-காஷ்மீர் மஹ்ஜூர்' என்ற படம் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படம் உருது மற்றும் காஷ்மீரி மொழியில் தயாரிக்கப்பட்டது. இந்த படம் சம்மு காசுமீர் மாநிலம் தகவல் துறை மற்றும் இந்திய திரைப்பட தயாரிப்பாளர் பிரபாத் முகர்ஜி ஆகியோரின் கூட்டு உருவாக்கம் ஆகும்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Allen (26 February 2004). "The Kashmiri film industry". ABOUT INDIAN CINEMA. பார்க்கப்பட்ட நாள் 11 August 2015.
- ↑ "Akh Daleel Loolech: a reason for Kashmir to celebrate". Merinews. 19 September 1909. Archived from the original on 15 நவம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 11 August 2015.
- ↑ Altaf, Sana (23 November 2012). "Kashmir's film industry longs for life". DAWN.COM. பார்க்கப்பட்ட நாள் 11 August 2015.