உள்ளடக்கத்துக்குச் செல்

கிரனோபிள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரனோபிள்
இடது மேற்புறத்திலிருந்து: நகரின் அகல்பரப்புக் காட்சி, கிரனோபிள்-பாசுத்தில் கம்பிவட உந்துகள், சான்-ஆந்த்ரெ இடம், யார்டின் தெ வில், ஐசரெ ஆற்றுக்கரைகள்
இடது மேற்புறத்திலிருந்து: நகரின் அகல்பரப்புக் காட்சி, கிரனோபிள்-பாசுத்தில் கம்பிவட உந்துகள், சான்-ஆந்த்ரெ இடம், யார்டின் தெ வில், ஐசரெ ஆற்றுக்கரைகள்
கிரனோபிள்-இன் கொடி
கொடி
கிரனோபிள்-இன் சின்னம்
சின்னம்
கிரனோபிள்-இன் அமைவிடம்
Map
நாடுபிரான்சு
RegionAuvergne-Rhône-Alpes
திணைக்களம்Isère
பெருநகரம்கிரனோபிள்
Intercommunalityகிரனோபிள் ஆல்ப்சு பெருநகரத்தின் குடிப்பகுதி திரட்டு
அரசு
 • நகரமுதல்வர் (2008–2014) மிசெல் டெசுடாட்டு
Area
1
18.44 km2 (7.12 sq mi)
மக்கள்தொகை
 (2008)
1,56,659
 • அடர்த்தி8,500/km2 (22,000/sq mi)
நேர வலயம்ஒசநே+01:00 (ம.ஐ.நே)
 • கோடை (பசேநே)ஒசநே+02:00 (ம.ஐ.கோ.நே)
INSEE/அஞ்சற்குறியீடு
38185 /38000, 38100
ஏற்றம்212–500 m (696–1,640 அடி)
(avg. 398 m or 1,306 அடி)
1 பிரெஞ்சு நிலப்பதிவுத் தரவுகள்: ஆறுகள், குளங்கள், பனியாறுகள் > 1 km2 (0.386 ச. மைல் அல்லது 247 ஏக்கர்கள்), மற்றும் ஆற்றுக் கயவாய்கள் தவிர்த்து.

கிரனோபிள் (Grenoble, பிரெஞ்சு உச்சரிப்பு: ​[ɡʁə.nɔbl]; அருபித: Grenoblo) பிரான்சு நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் பிரான்சிய ஆல்ப்சு அடிவாரத்தில் டிராக் ஆறு ஐசரெ ஆற்றுடன் கூடுமிடத்தில் அமைந்துள்ள ஓர் நகரமாகும். ரோன்-ஆல்ப்சு பிராந்தியத்தில் அமைந்துள்ள கிரனோபிள் ஐசரெ திணைக்களத்தின் தலைநகரமாக விளங்குகிறது. மலைத்தொடருக்கு அண்மையில் இருப்பதாலும் நகரின் அளவைக் கொண்டும் இது "ஆல்ப்சின் தலைநகரம்" என பிரான்சு நாட்டில் அறியப்படுகிறது.

கிரனோபிளின் வரலாறு 2000 ஆண்டுகளுக்கும் மேற்பட்டது. ஒரு சிறிய காலிய சிற்றூராக இருந்த கிரனோபிள் 11வது நூற்றாண்டில் டவுஃபீனின் தலைநகரமாக ஆனபிறகு இதன் மதிப்புக் கூடியது. வரலாற்றில் பெரும்பாலும் இது பிரான்சு இராச்சியத்தின் எல்லையில் அமைந்திருந்த எளிமையான நகராட்சியாகவும் அரண்காவல் கோட்டை நகரமாகவும் விளங்கியது.

மிக விரைவான தொழில் வளர்ச்சியால் இதன் முதன்மை பெருகியது. இங்கு கையுறைத் தயாரிப்புத் தொழில் 18வது,19வது நூற்றாண்டுகளில் முதன்மையாக இருந்தது. பின்னர் 19வது இருபதாவது நூற்றாண்டுகளில் புனல் மின்நிலையங்கள் அமையத் தொடங்கின. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 1968இல் X ஒலிம்பிக் குளிர்கால விளையாட்டுகள் இங்கு நடைபெற்றன. இந்நகரம் தற்போது ஐரோப்பாவின் குறிப்பிடத்தக்க அறிவியல் மையமாக விளங்குகிறது.[1][2]

2008ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி கிரனோபிளின் மக்கள்தொகை 156,659ஆக இருந்தது. அவ்வாண்டில் கிரனோபிள் பெருநகரப் பகுதியின் (பிரெஞ்சு: aire urbaine de Grenoble) மக்கள்தொகை 664,832 ஆகவிருந்தது. நகரக் குடிமக்கள் "கிரனோபிளாய்" (Grenoblois) என்று அழைக்கப்படுகின்றனர்.

நகரக் காட்சிகள்

[தொகு]
லா பாசுத்திலில் இருந்து கிரனோபிளின் மேற்குப்புற காட்சி
வெர்கோர்சு பகுதியிலிருந்து கிரனோபிள்
லா பாசுத்திலில் இருந்து கிரனோபிளின் இரவுநேரக் காட்சி

மேற்சான்றுகள்

[தொகு]
  1. Graff, James (22 August 2004). "Secret Capitals". Time (New York) இம் மூலத்தில் இருந்து 23 ஆகஸ்ட் 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040823192020/http://www.time.com/time/europe/secret/grenoble.html. பார்த்த நாள்: 29 October 2009. 
  2. Pentland, William (9 July 2013). "World's 15 Most Inventive Cities". Forbes (New York). http://www.forbes.com/sites/williampentland/2013/07/09/worlds-15-most-inventive-cities/. பார்த்த நாள்: 16 July 2013. 

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கிரனோபிள்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரனோபிள்&oldid=3707417" இலிருந்து மீள்விக்கப்பட்டது