கிழக்காசிய மக்கள் மரபியல் வரலாறு
கிழக்காசிய மக்களின் மரபியல் வரலாறு (genetic history of East Asians) கிழக்காசியப் பகுதிக்குள் அமைந்த மக்கள்தொகைகளின் மரபியல் கட்டமைப்பைச் சுட்டுகிறது.
பண்டைய சியாங்னூ மக்கள்
[தொகு]சியாங்னு மக்கள் துருக்கியர், ஈரானியர், மங்கோலியர், யெனிசீனியர் ஆகிய பல இனக்குழு கலப்புள்ள நாடோடி மக்களின் கூட்டினக்குழுவினர் ஆவர்[1] சீன வரலாற்றுத் தகவல்களின்படி, இந்நாடோடி மக்கள் கிமு மூன்றாம் நூற்றாண்டில் இருந்து கிபி முதல் நூற்றாண்டுவரை கிழக்காசியச் சுதெப்பிப் பகுதியில் வாழ்ந்துவந்துள்ளனர். சீனாவின் இருபத்துநான்கு வரலாற்றுத் தகவலின்படி, கிபி 209 இல் மோது சான்யூ எனும் பெருந்தலைவன் சியாங்னூ அரசமரபைத் தோற்றுவித்துள்ளான்.[2]
பெரும்பான்மையான சியாங்னூ (89%) மரபன் வரிசைகள் ஆசிய ஒருமைப் பண்புக் குழுக்களையும் ஏறத்தாழ 11% சியாங்னூ மரபன் வரிசைகள் ஐரோப்பிய ஒருமைப் பண்புக் குழுக்களையும் சார்ந்துள்ளன.[3]
தந்தைக் கால்வழிகள்
[தொகு]கடந்த பத்தாண்டுகளாக, சீனத் தொல்லியலாளர்கள் சின்சியாங் அகழாய்வு முடிவுகள் குறித்த பல ஆய்வறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். இவை சியாங்னூ உயர் அரசுகுலத்தாரின் மரபியலுட்கூறுகளை அறிவிக்கின்றன. குறிப்பாக ஆமி நகரின் அருகே அமைந்த பார்க்கோல் படுகைக்குக் கிழக்காக அமைந்த சின்சியாங்கில் உள்ள ஐகவுலியாங் கல்லறையின் (சியாங்னூ அரசரின் கோடைக்கால அரண்மனையாகக் கருதப்படும் கவுலியாங் கருங்கல் கல்லறை) கற்றூண்கள் மிகவும் அர்வமூட்டுபவை. இந்தக் கற்றூண்கள் ஒன்றில் அகழ்ந்தெடுக்கப்பட்ட 12 ஆண்களது மரபன் பதக்கூறுகளின் முடிவுகளை வகைப்படுத்தியதில் அவற்றில் 6 பேர் ஒருமைப் பண்புக் குழு Q1a* ( Q1a1-M120 அல்ல, Q1a1b-M25 அல்ல, Q1a2-M3 அல்ல) ஆகவும், 4 பேர் ஒருமைப் பண்புக் குழு Q1b-M378, 2 Q* ( Q1a அல்ல, Q1b அல்ல: உட்கவைகளைத் தீர்மானிக்க முடியவிலை) ஆகவும் தீர்மானிக்கப்பட்டது.[4]
ஓர் ஆய்வுரையில் (இலிகோங்யீ 2012), சின்சியாங்கில் அமைந்த கிமு இரண்டு அல்லது இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஐகவுலியாங் கல்லறையில் இருந்து எடுத்த ஆண்களது ஒய் குறுமவக மரபன் பதக்கூறுகளை கட்டுரை ஆசிரியர் ஆய்வு செய்துள்ளார். இது சியங்னூ அரசர்களின் கோடைக்கால அரண்மனையாகவும் கருதப்படுகிறது. இக்கல்லறை ஆமி நகரின் அருகே அமைந்த பார்க்கோல் படுகைக்குக் கிழக்காக உள்ளது. இந்தக் களத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்ட 12 ஆண்களின் ஒய் குறுமவக மரபன் பதக்கூறுகள் Q-MEH2 (Q1a) அல்லது Q-M378 (Q1b) ஒருமைப் பண்புக் குழுவாக அமைந்துள்ளதாகக் காட்டின. Q-M378 ஆண்களில் கல்லறையில் புதைக்கப்பட்ட ஒருபதி பேர் விருந்தோம்பிகளாகவும் மற்ற பாதிபேர் காவு கொடுக்கப்பட்டவர்களாகவும் கருதப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Xiongnu People". britannica.com. Encyclopædia Britannica. Archived from the original on 11 மார்ச் 2020. பார்க்கப்பட்ட நாள் 25 July 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ di Cosmo 2004: 186
- ↑ "Nuclear and mitochondrial DNA analysis of a 2,000-year-old necropolis in the Egyin Gol Valley of Mongolia". American Journal of Human Genetics 73 (2): 247–60. August 2003. doi:10.1086/377005. பப்மெட்:12858290.
- ↑ Lihongjie, Y-Chromosome Genetic Diversity of the Ancient North Chinese populations, Jilin University-China (2012)