உள்ளடக்கத்துக்குச் செல்

குஞ்செராப் கணவாய்

ஆள்கூறுகள்: 36°51′00″N 75°25′42″E / 36.85°N 75.4283°E / 36.85; 75.4283
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குஞ்செராப் கணவாய்
குஞ்செராப் கணவாய்
ஏற்றம்4,693 மீ (15,397 அடி)காரகோரம் நெடுஞ்சாலை
அமைவிடம்ஹன்சா பாக்கித்தான் - வடக்கு நிலங்கள் / சிஞ்சியாங், சீனா
மலைத் தொடர்காரகோரம்
ஆள்கூறுகள்36°51′00″N 75°25′42″E / 36.85°N 75.4283°E / 36.85; 75.4283
Map

குஞ்செராப் கணவாய் ( Khunjerab Pass ) என்பது காரகோரம் மலைகளில் 4,693 மீட்டர் உயரமுள்ள (15,397 அடி) மலைப்பாதையாகும். பாக்கித்தானின் வடக்கு எல்லையில் (கில்கித்-பால்டிஸ்தானின் ஹன்சா மற்றும் நகர் மாவட்டங்கள்) மற்றும் சீனாவின் தென்மேற்கு எல்லையில் (சிஞ்சியாங்) ஒரு மூலோபாய நிலையில் இக் கணவாய் உள்ளது. முச்சிலிகா கணவாய் என்பது குஞ்சேரப் கணவாய்க்கு அருகில்  36.97374°N 75.2973°E இல் 5,314-மீட்டர் உயரம் (17,434 அடி) அமைந்துள்ள மற்றொரு மலைப்பாதையாகும்.

சொற்பிறப்பியல்

[தொகு]

இதன் பெயர் உள்ளூர் வாகி மொழியின் இரண்டு வார்த்தைகளிலிருந்து பெறப்பட்டது: "குன்" என்றால் இரத்தம் மற்றும் "செராப்" என்றால் ஊற்று அல்லது அருவியிலிருந்து வரும் சிற்றோடை எனப் பொருள்.

குறிப்பிடத்தக்கமை

[தொகு]
குஞ்செராப் தேசியப் பூங்காவில் காணப்படும் அழிந்துவரும் இனமான், பனிச்சிறுத்தை,

குஞ்செராப் கணவாய் சர்வதேச எல்லைக் கடக்கும் உலகின் மிக உயரமான நடைபாதையும் காரகோரம் நெடுஞ்சாலைலையில் உள்ள மிக உயரமான இடமுமாகும். கணவாயின் குறுக்கே சாலை அமைக்கும் பணி 1982 இல் நிறைவடைந்தது. [1] நீளமான, ஒப்பீட்டளவில் தட்டையான பாதையானது குளிர்காலத்தில் பனியால் மூடப்பட்டிருக்கும் [2] [3] காரணத்தால் பொதுவாக கனரக வாகனங்கள் நவம்பர் 30 முதல் மே 1 வரை மட்டுமே அனுமதிக்கப்படும். பின்னர் அனைத்து வாகனங்களுக்கும் திசம்பர் 30 முதல் ஏப்ரல் 1 வரை சாலை மூடப்படும். புனரமைக்கப்பட்ட காரகோரம் நெடுஞ்சாலை குஞ்செராப் கணவாய் வழியாக செல்கிறது.

சூன் 1, 2006 முதல், கில்கித்திலிருந்து கஷ்கர், சின்சியாங்கிற்கு தினசரி பேருந்து சேவை உள்ளது. [4]

பாக்கித்தானில் உள்ள நகரங்களுக்கு தூரத்தைக் காட்டும் சாலைப் பலகை

உலகின் மிக உயரமான பணம் எடுக்கும் இயந்திரம்

[தொகு]

பாக்கித்தான் குதியில் உலகின் மிக உயரமான பணம் எடுக்கும் இயந்திரம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளாது. இது பாக்கித்தானின் தேசிய வங்கி மூலம் நிர்வகிக்கப்படுகிறது. [5]

2007 ஆம் ஆண்டில், பாக்கித்தானின் நிர்வாகத்தில் உள்ள கில்கித்-பால்டிஸ்தானில் சீனாவை போக்குவரத்துடன் இணைக்க இந்க் கணவாய் வழியாக ஒரு தொடருந்துப் பாதை அமைப்பதை மதிப்பீடு செய்ய ஆலோசகர்கள் [6] பணியமர்த்தப்பட்டனர். நவம்பர் 2009 இல் 750 கிமீ நீளமுள்ள அவேலியன் பகுதியை (466 மைல்) இணைக்கும் ஒரு பாதை அமைப்பதற்கான ஆய்வு தொடங்கியது.[7] இருப்பினும், அதன்பிறகு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

புகைப்படங்கள்

[தொகு]

இதனையும் பார்க்கவும்

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. 刘欣 (2013-05-03). "重寻玄奘之路" [Rediscover the path taken by Xuanzang] (in சீனம்). 东方早报. பார்க்கப்பட்ட நாள் 2017-02-02. 1966年,时任新疆军区副司令员的张希钦在主持修筑中巴公路时,为避敌国空袭,放弃了巴方主张的走宽阔的明铁盖达坂的方案,而取道地势高峻的红其拉甫山口。
  2. "Snowfall at Khunjerab Pass, Gilgit-Baltistan - Travel and Tourism". Archived from the original on 2016-08-07. பார்க்கப்பட்ட நாள் 2016-06-11.
  3. "Khunjerab Pass". www.dangerousroads.org. பார்க்கப்பட்ட நாள் 2016-09-18.
  4. Road widening work has begun on 600 km (370 mi) of the highway.
  5. World's Highest ATM Atlas Obscura (www.atlasobscura.com). Retrieved on 2019-07-26.
  6. Online Asia Times South Asia Feb 24, 2007. "China-Pakistan rail link on horizon." Syed Fazl-e-Haider.
  7. "Maps, Weather, Videos, and Airports for Kashi, China".

மேலும் சில ஆதாரங்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குஞ்செராப்_கணவாய்&oldid=3774204" இலிருந்து மீள்விக்கப்பட்டது