குருதியுண்ணும் வௌவால்
குருதியுண்ணும் வௌவால் | |
---|---|
பொதுவான குருதியுண்ணும் வௌவால், Desmodus rotundus | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | கைச்சிறகிகள்
Chiroptera |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | Desmodontinae Bonaparte, 1845
|
Genera | |
குருதியுண்ணும் வௌவால் அல்லது வம்பயர் வௌவால் (Vampire bat) எனப்படுபவை குறும் கைச்சிறகிகள் வகையைச் சேர்ந்த ஒரு வகை வௌவால்கள் ஆகும். சாதாரண வௌவால்களைப் போல இவையும் பாலூட்டிகளே.
அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட குருதியுண்ணும் வௌவால்கள் மெக்சிக்கோவிலிருந்து பிரேசில் வரையுள்ள பிரதேசத்திலும் சிலி, ஆர்ஜெண்டீனா ஆகிய நாடுகளிலும் காணப்படுகின்றன.
இன வகைகள்
[தொகு]குருதியுறுஞ்சும் வௌவால் வகையில் மூன்று உபகுலங்கள் காணப்படுகின்றன.
- பொது குருதியுண்ணும் வௌவால்(Desmodus rotundus)
- காலில் மயிர் கொண்ட குருதியுண்ணும் வௌவால்(Diphylla ecaudata)
- வெண்சிறகுள்ள குருதியுண்ணும் வௌவால்(Diaemus youngi).
உடலமைப்பு
[தொகு]நாசி கூம்புருவானது. வெப்பம், குளிர் உணர்வுகளை இனங்காண உதவும் வாங்கி அங்கங்கள் நாசியின் மேல் அமைந்துள்ளன. இவ்வாங்கி அங்கங்களே இரைகளின் குருதிக்கலன்களை இனங்காண உதவுகின்றன.சிறிய புறச்செவிகளும் மேற்றோலுக்குரிய வாலும் காணப்படும். வாயின் முன்புறம் பெரிய வெட்டும் பற்களும் அடுத்து வேட்டைப்பற்களும் உட்புறம் சிறிய பற்களும் காணப்படும்.
இவை இரவில் இரை தேடும் வழக்கம் உடையவை. குறைந்த சக்தி கொண்ட ஒலி அலைகளைப் பயன்படுத்தி இரைகளைக் கண்டறிகின்றன. மூளையில் காணப்படும் ஒலிவாங்கும் அமைப்பு இரையின் சுவாச ஒலியைக் கேட்குமளவு சிறப்படைந்தது. அகச்சிவப்பு கதிர்களை உணரக்கூடிய வகையிலான சிறப்பான உணர்கலம் மூளையில் காணப்படும். இது சில பாம்புகளுக்கு உள்ள விசேட கலங்களுக்குச் சமானமானதாகும்.[1].
உணவு முறை
[தொகு]மனிதன் உட்பட பாலூட்டி விலங்குகளின் குருதியை உண்ணும். வம்பயர் வௌவால் கடிக்கவேண்டிய குருதிக்கலன் உள்ள தானத்தை இனங்கண்டு கடிக்கும். கடிவாயின் ஊடாக அதன் உமிழ் நீரைச் செலுத்தும்.உமிழ் நீரில் குருதி உறைவைத் தடுக்கக் கூடிய டிரக்குயிலின் (Draculin) எனும் பொருள் உள்ளது. குருதியை உறிஞ்சிக் குடிக்காது. கடிவாயின் ஊடாக நக்கியே உண்ணும். திரவ உணவை சமிபாடடையச் செய்யும் நொதியங்களும் காணப்படும். வௌவால்கள் இனத்திலேயே இவ்வகை வௌவால்கள் தான் தாய்க்கு எதாவது நேர்ந்தால் குட்டியை மற்ற வௌவால்கள் கவனித்து கொள்ளும். மற்றுமொரு சிறப்பான குணாதிசியம் என்னவென்றால் இவ்வகை வௌவால்கள் தன் காலனியிலிருகும் பிற வௌவால்கள் உணவு இல்லாமல் தவிக்கும் போது தன் உடம்பிலிருந்து சிறிதளவு குருதியை மற்ற வௌவால்கள் எடுத்து கொள்ள அனுமதிக்கும்.
ஆதாரங்கள்
[தொகு]- ↑ Angela L. Campbell, Rajesh R. Naik, Laura Sowards and Morley O. Stone (2002). "Biological infrared imaging and sensing". Micron 33 (2): 211–225. doi:10.1016/S0968-4328(01)00010-5. பப்மெட்:11567889. http://web.neurobio.arizona.edu/gronenberg/nrsc581/thermo/biologicalinfraredsenses.pdf. பார்த்த நாள்: 2011-02-10.