உள்ளடக்கத்துக்குச் செல்

கென் சரோ விவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கென் சரோ விவா
பிறப்புஅக்டோபர் 10, 1941
போரி, நைஜீரியா
இறப்பு10 நவம்பர் 1995(1995-11-10) (அகவை 54)
இறப்பிற்கான
காரணம்
தூக்கிலிடப்பட்டார்
இனம்ஓகோனி
பணிஎழுத்தாளர்
அரசியல் இயக்கம்ஓகோனி மக்களின் வாழ்வாதார இயக்கம் (Movement for the Survival of the Ogoni People)
விருதுகள்சரியான வாழ்வு விருது (Right Livelihood Award)
கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது

கென் சரோ விவா (Ken Saro Wiwa அக்டோபர் 10,1941—நவம்பர் 10 1995) நைசீரியா நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர், போராளி ஆவார். 1995 ஆண்டுக்கான சுற்றுச்சூழல் பணிக்காக வழங்கப்படும் கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது இவருக்கு வழங்கப்பட்டது. சுற்றுச் சூழலைக் காப்பாற்றவும் மனித உரிமைகளை மீட்டெடுக்கவும் தம் உயிரைத் துறந்தவர்.

கல்வியும் பணியும்

[தொகு]

உமாவியா என்னும் ஊரில் அரசுக் கல்லூரியிலும் இப்டான் பல்கலைக்கழகத்திலும் பயின்றார். பின்னர் லாகோஸ் பல்கலைக் கழகத்தில் ஆசிரியராக சில காலம் பணி புரிந்தார். புதினங்கள், சிறுகதைகள், கவிதைகள் எனப் பலவற்றை எழுதினார் தொலைக்காட்சித் தொடர்களும் இவரால் உருவாயின.

சுற்றுச்சுழல் கேடும் போராட்டமும்

[தொகு]

1958 இல் 'ராயல் டச் செல்' என்னும் பெரிய நிறுவனம் ஓகோனி பகுதியில் விவசாய நிலங்களை அழித்து கச்சா எண்ணெய் எடுக்கத் தொடங்கியது. அதன் காரணமாக 5.5 இலட்சம் விவசாயிகள், மீனவர்கள் வாழ்வாதாரம் நசுங்கியது. சுற்றுச் சூழல் சீர்கெட்டது. எண்ணெய்க் கசிவாலும் அமில மழையாலும் வளம் கொழித்த நிலங்கள் சத்து இழந்தன. விலங்கினங்களும் மீன்களும் மாண்டன. எனவே அப்பகுதியில் மிகுதியாக வாழும் ஓகோனி பழங்குடி மக்களின் தலைவராக செயல்பட்ட கென் சரோ விவா வலிமை வாய்ந்த பன்னாட்டு நிறுவனமான ராயல் டச் செல்லை எதிர்த்து 1991 ஆம் ஆண்டில் ஓகோனி பழங்குகளின் வாழ்வுரிமை இயக்கம் மூலம் போராட்டத்தில் இறங்கினார். 1993 சனவரித் திங்களில் எண்ணெய் மூலம் பெற்ற வருமானத்தில் பழங்குடி மக்களுக்கும் பங்குதர வற்புருத்தியும், அரசியல் சுயநிர்ணய உரிமை கோரியும் 3 இலக்கம் எண்ணிக்கை கொண்ட ஓகோனி மக்களை திரட்டி அமைதிநடைபயணம் மேற்கொண்டு போராடினார்கள். இதன் விளைவாக 'செல்' நிறுவனம் எண்ணெய் எடுக்கும் பணியை நிறுத்தி வைத்தது. போராட்ட தீவிரத்தின் விளைவாக நைசீரிய இராணுவ அரசு வன் செயல்களில் ஈடுபட்டது. வீடுகள் எரிக்கப் பட்டன. பொருள்கள் கொள்ளை அடிக்கப் பட்டன பெண்கள் துன்புறுத்தப்பட்டனர். இந்நிலையில் 1995 இல் கென் சரோ விவா சிறைப் பிடிக்கப் பட்டார். அவர் மீது கொலைக் குற்றம் சுமத்தப் பட்டு 1995 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் நாளில் தூக்கிலிடப் பட்டார். அவருடன் அவருடைய நண்பர்கள் எட்டு பேரும் தூக்கிலிடப்பட்டனர்.[1]

மேற்கோள்

[தொகு]
  1. "சூழலியல் தியாகிகள்". தி இந்து. 12 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 14 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கென்_சரோ_விவா&oldid=3577033" இலிருந்து மீள்விக்கப்பட்டது