உள்ளடக்கத்துக்குச் செல்

கொங்கணி விக்கிப்பீடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்கிப்பீடியாவின் ஃபேவைகான் கொங்கணி விக்கிப்பீடியா
வலைத்தள வகைஇணைய கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)கொங்கணி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
உள்ளடக்க உரிமம்படைப்பாக்கப் பொதுமங்கள் 3.0 (most text also dual-licensed under GFDL)
Media licensing varies
வெளியீடுஜூலை 2015
உரலிgom.wikipedia.org

கொங்கணி விக்கிப்பீடியா (Konkani Wikipedia) என்பது விக்கிப்பீடியாவின் கொங்கணி மொழிப் பதிப்பாகும். இது விக்கிப்பீடியா அமைப்பால் ஜூலை 2015இல் தோற்றுவிக்கப்பட்டது.[1] 2006 முதல் எடுக்கப்பட்ட முயற்சிகள் 2015இல் நிறைவுக்கு வந்தது.[2] தற்பொழுது இந்த திட்டத்தில் சுமார் 4000 கட்டுரைகள் உள்ளன.

வரலாறு

[தொகு]

கொங்கணி விக்கிப்பீடியா 2006 தொடங்கப்பட்டு ஜூலை 2015இல் பயன்பாட்டிற்கு வந்தது. [2] முன்னதாக செப்டம்பர் 2013இல், கொங்கணி விசுவகோஷ் (கலைக்களஞ்சியம்) 4 தொகுதிகள் மறு உரிமத்தில்[3] படைப்பாக்க பொதுமங்களின் உரிமங்களின் கீழ் வெளியிடப்பட்டன.[4] இந்த கலைக்களஞ்சியங்களின் தகவல்கள் கொங்கணி விக்கிப்பீடியாவில் கட்டுரைகளை எழுதப் பயன்படுத்தப்பட்டன. இதே ஆண்டில் கோவா பல்கலைக்கழகத்தில் விக்கிப்பீடியா தொடர்பான பயிற்சிப் பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டது.[5] ஏப்ரல் 2014இல், விக்கிப்பீடியாவைத் திருத்துவதற்கான இரண்டு அறிமுக அமர்வுகள் கோவாவில் உள்ள ரோஷ்னி நிலைய சமூகப் பள்ளியில் நடத்தப்பட்டன.[6]

ஜூலை 2015இல், விக்கிப்பீடியா 9 ஆண்டுகள் வளர்ச்சிப்பாதையில் கடந்தபின் நேரலைக்கு வந்தது. 2015ல் விக்கிப்பீடியாவின் அலுவல் ரீதியான தொடக்கத்தின் போது 2500 கட்டுரைகள் இருந்தன. இந்த திட்டத்திற்குக் கோவா பல்கலைக்கழகம் மற்றும் நிர்மலா கல்வி நிறுவனம் ஆதரவு அளித்தன. கோவா பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் கொங்கணி துறைத் தலைவருமான மறைந்த மாதவி சர்தேசாய் இந்தத் திட்டத்தைத் தொடங்க முக்கிய பங்கு வகித்தார். கோவா பல்கலைக்கழகத்தின் கொங்கணி துறையின் தற்போதைய துறைத் தலைவர் பிரகாஷ் பரிங்கர் அப்போது கூறியதாவது:[7]கோவா தொடர்பான பல்வேறு பாடங்களில் கட்டுரைகளை எழுதுவதற்கும் அவற்றை விக்கிப்பீடியாவில் பதிவேற்றுவதற்கும் எங்கள் மாணவர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் திட்டங்களை வழங்குவோம். உள்ளூர் உணவு, அதன் கலாச்சாரம், பாரம்பரியம், சுற்றுலா இடங்கள் மற்றும் பலவற்றின் தகவல்கள் இதில் அடங்கும்.ஜனவரி 2016இல், கோவாவின் கிருஷ்ணதாஸ் ஷாமா மத்திய நூலகத்தில் ஒரு நாள் திருத்தம் ஏற்பாடு செய்யப்பட்டது. இணையத்திற்கான மையம் மற்றும் சமூகத்தின் பிரதிநிதி ரஹ்மனுதீன் ஷேக் பங்கேற்பாளர்களுக்கு விக்கிப்பீடியா தொகுத்தமைத்தல் மற்றும் கொள்கைகள் குறித்து பயிற்சி அளித்தார். இந்த ஒரு நாள் நிகழ்வின் போது கிட்டத்தட்ட 100 கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன[8]

இதைத் தொடர்ந்து, கோவாவில் கோவா பயனர் குழுவினரை விக்கிப்பீடியர்களின் ஒரே குடையின் கீழ் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது மொழியைப் பொருட்படுத்தாமல் கோவாவை மையமாகக் கொண்டதாக இருந்தாலும் கொங்கணி விக்கிப்பீடியாவிலும் கவனம் செலுத்தும் திறனையும் கொண்டுள்ளது.[9]

கொங்கணி விக்சனரி

[தொகு]

இதன் இணையான முயற்சியாகக் கொங்கணி விக்சனரி திட்டம்.[9] இது சைபர்ஸ்பேஸில் திறந்த மற்றும் பகிரக்கூடிய கொங்கணி அகராதியை உருவாக்கும் முயற்சியாகும். இதன் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மே 2019 மற்றும் டிசம்பர் 2019இல் மாபூசாவின் தூய சவேரியார் கல்லூரியில் ஒரு விக்சனரி பட்டறை மற்றும் சந்திப்புகள் நடைபெற்றன. இதற்கு மார்ச், 2020இல், விக்கிமீடியா அறக்கட்டளையின் மொழி குழு ஒப்புதல் அளித்தது.[9] கொங்கணி விக்சனரி அதன் புதிதாக உருவாக்கப்பட்ட தளத்திற்கு 21 மே 2020 அன்று சென்றது. இதில் 2300க்கும் மேற்பட்ட உள்ளீடுகள் உள்ளன (நவம்பர் 2020).[9]

மேலும் காண்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. "Konkani Wikipedia goes live". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/goa/Konkani-Wikipedia-goes-live/articleshow/48128933.cms. பார்த்த நாள்: 23 February 2016. 
  2. 2.0 2.1 "Konkani Wikipedia Goes Live After 'Nine Years' of Incubation — The Centre for Internet and Society". cis-india.org. பார்க்கப்பட்ட நாள் 2020-11-29.
  3. "Konkani Wikipedia from Goa University in 6 months". The Times of India. http://timesofindia.indiatimes.com/home/education/news/Konkani-Wikipedia-from-Goa-University-in-6-months/articleshow/23126410.cms. பார்த்த நாள்: 23 February 2016. 
  4. "Konkani Vishwakosh relaunch tomorrow". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/konkani-vishwakosh-relaunch-tomorrow/article5166253.ece. பார்த்த நாள்: 23 February 2016. 
  5. "Konkani Wikipedia climbing up the Indian language ladder". DNA. http://www.dnaindia.com/blogs/post-konkani-wikipedia-climbing-up-the-indian-language-ladder-1885294. பார்த்த நாள்: 23 February 2016. 
  6. "Workshops to teach Wikipedia editing". The Hindi. http://www.thehindu.com/news/cities/Mangalore/workshops-to-teach-wikipedia-editing/article5728643.ece. பார்த்த நாள்: 23 February 2016. 
  7. "Konkani Wikipedia goes live after nine-year delay". Herald Goa. http://www.heraldgoa.in/Goa/Konkani-Wikipedia-goes-live-after-nineyear-delay/91252.html. பார்த்த நாள்: 23 February 2016. 
  8. "100 Konkani Articles Added to Wikipedia in One Day". The Times of India. 15 January 2016. 
  9. 9.0 9.1 9.2 9.3 "Wikipedians of Goa User Group - Meta". meta.wikimedia.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-29.

வெளி இணைப்புகள்

[தொகு]
Wikipedia
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் கொங்கணி விக்கிப்பீடியாப் பதிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொங்கணி_விக்கிப்பீடியா&oldid=3794496" இலிருந்து மீள்விக்கப்பட்டது