கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
தொடர் | இந்திய முதன்மைக் குழுப் போட்டிகள் | |
---|---|---|
தனிப்பட்ட தகவல்கள் | ||
தலைவர் | சிரேயாஸ் ஐயர் | |
பயிற்றுநர் | பிரண்டன் மெக்கல்லம்[1] | |
உரிமையாளர் | ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட், மெஹ்தா குழுமம் | |
அணித் தகவல் | ||
நகரம் | கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா | |
நிறங்கள் | ||
உருவாக்கம் | 2008 | |
உள்ளக அரங்கம் | ஈடன் கார்டன்ஸ் | |
கொள்ளளவு | 68,000 | |
அதிகாரபூர்வ இணையதளம்: | kkr.in | |
|
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders சுருக்கமாக KKR எனவும் அழைக்கப்படுகிறது) என்பது இந்திய முதன்மைக் குழுப் போட்டிகளில் கொல்கத்தா நகரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில்முறைத் துடுப்பாட்ட அணியாகும். இதன் உரிமையாளர்களாக பாலிவுட் நடிகர் ஷாருக் கான், நடிகை ஜூஹி சாவ்லா மற்றும் அவரது கணவர் ஜெய் மெஹ்தா ஆகியோர் உள்ளனர். இதன் உள்ளக அரங்கமாக ஈடன் கார்டன்ஸ் உள்ளது.[2]
இந்த அணி 2011 இல் முதல் முறையாக ஐபிஎல் தகுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது. 2012 இல் சென்னை சூப்பர் கிங்ஸை இறுதிப் போட்டியில் தோற்கடித்து ஐபிஎல் வாகையாளர் ஆனது. 2014 இல் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை தோற்கடித்து மீண்டும் வாகையாளர் ஆனது. [3]
கொல்கத்தா அணிக்காக அதிக ஓட்டங்களை எடுத்தவராக கவுதம் கம்பீரும்[4] அதிக மட்டையாளர்களை வீழ்த்தியவராக சுனில் நரைனும் உள்ளனர்.[5] இதன் அலுவல்முறை நிறங்களாக ஊதாவும் பொன்னிறமும் உள்ளன.
வரலாறு
[தொகு]2007ஆம் ஆண்டு இந்திய முதன்மைக் குழுப் போட்டிகள் என்ற இருபது20 போட்டித் தொடரை இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் உருவாக்கியது. ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறும் இத்தொடரில் இந்தியாவின் 8 நகரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 8 அணிகள் பங்குபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த 8 அணிகளுக்கான ஏலம் 20 பிப்ரவரி 2008இல் நடைபெற்றது. அதில் கொல்கத்தா அணியை பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து நடிகை ஜூகி சாவ்லாவும் அவரது கணவர் ஜெய் மெஹ்தாவும் 75.09 மில்லியன் டாலர்கள் என்ற விலைக்கு ஏலத்தில் எடுத்தனர். இது அப்போதைய இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக 2.98 பில்லியனுக்கு இணையானதாகும்.[6] இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவரும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவருமான சௌரவ் கங்குலி கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரராக அறிவிக்கப்பட்டார். 1980களில் புகழ்பெற்ற நைட் ரைடர்ஸ் என்ற அமெரிக்கத் தொடரின் பெயரைத் தழுவி இந்த அணிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் என்று பெயரிடப்பட்டடது.[7]
சூன் 2015 இல், அணியின் உரிமையாளர் குழு கரீபியன் பிரீமியர் லீக்கின் டிரினிடாட் மற்றும் டொபாகோ ரெட் ஸ்டீலில் ஒரு பங்குகளை வாங்கியது, [ [8] [9] மேலும் 2016 இல் அதற்கு டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் என மறுபெயரிடப்பட்டது. திசம்பர் 2020 இல், அணி வரவிருக்கும் அமெரிக்க டி20 லீக் மேஜர் லீக் கிரிக்கெட்டிலும் முதலீடு செய்தது. [10]
ஐபிஎல் செயல்திறன்
[தொகு]2008
[தொகு]ஐபிஎல்லின் முதல் பருவத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெக்கான் சார்ஜர்சு அணிகளுக்கு எதிரான முதல் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்று நல்ல தொடக்கத்தைத் தந்தனர். தொடக்க ஆட்டக்காரர் ப்ரெண்டன் மெக்குலம் முதல் போட்டியில் 158 ஓட்டங்கள் எடுத்தார். ப இ20 போட்டியில் ஒரு மட்டையாளரால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஓட்டமாகப் பதிவுசெய்யப்பட்டது.[11] பின்னர் பஞ்சாப் அணிக்கு எதிராக கிறிஸ் கெயில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 175 ஓட்டங்கள் எடுத்து இந்தச் சாதனையினை முறியடித்தார்.
அடையாள உடை
[தொகு]இந்த அணியின் சின்னமானது ஒரு கருப்பான பின்னணியில் ஒளிவீசும் தங்கநிற போர்வீரர் தலைக்கவசத்துடன் அணியின் பெயரான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் என தங்க நிறத்தில் எழுதப்பட்டு இருந்தது. கோர்போ, லோர்போ, ஜீட்போ ரே (நாம் முயற்சிப்போம், அதற்காக போட்டியிடுவோம், வெற்றி பெறுவோம்) என்ற அணியின் முக்கிய கருவானது விஷால்-ஷேகர் இரட்டையர்களால் உருவாக்கப்பட்டது.[12] நைட் ரைடர் ஆல்பமானது உஷா உதுப் மற்றும் பப்பை லஹ்ரி உள்ளிட்ட பல்வேறு பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் மூலமாகவும் உருவாக்கப்பட்டது.[13] இந்த அணியின் முழக்கமாக ஆல் த கிங்'ஸ் மென் என இருந்தது.[12] இந்த அணியின் அதிகாரப்பூர்வ உடையின் நிறம் கருப்பு மற்றும் பொன்நிறம் ஆகும். கருப்பு நிறம் மா காளியின் வீரத்தையும், பொன்நிறம் வெற்றியின் ஆன்ம வடிவத்தையும் குறிக்கிறது.[13] பாலிவுட் ஆடை வடிவமைப்பாளர் மனீஷ் மல்ஹோத்ராவால் வீரர்களுக்கான உடை உருவாக்கப்பட்டது.[12]
உள்ளக அரங்கம்
[தொகு]இதன் உள்ளக அரங்கம் ஈடன் கார்டன்ஸ் ஆகும்.அரங்கத்தின் இரு முனைகளும் ஹை கோர்ட் எண்ட் மற்றும் கிளப் ஹவுஸ் எண்ட் என்று அழைக்கப்படுகின்றன. வங்காளத் துடுப்பாட்ட்ச் சங்கத்திற்குச் சொந்தமான இது, இந்தியாவின் மிகப்பெரிய துடுப்பாட்ட அரஙகமாக இருந்தது, இதில் 90,000க்கும் அதிகமான இருக்கை வசதிகளைக் கொண்டிருந்தது. [14] 2011 ஆம் ஆண்டில், 2011 துடுப்பாட்ட உலகக் கிண்ணத்திற்காக பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை நிர்ணயித்த தரநிலைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அரங்கம் புதுப்பிக்கப்பட்டதால்அதன் இருக்கை அளவானது 68,000 ஆகக் குறைந்தது.[15]
பருவங்கள்
[தொகு]பருவம் | தரவரிசை | இறுதி நிலை |
---|---|---|
2008 | 8 இல் 6வது | குழு நிலை |
2009 | 8 இல் 8வது | குழு நிலை |
2010 | 8 இல் 6வது | குழு நிலை |
2011 | 10ல் 4வது | தகுதிச் சுற்று |
2012 | 9 இல் 2வது | வாகையாளர் |
2013 | 9 இல் 7வது | குழு நிலை |
2014 | 8 இல் 2வது | வாகையாளர் |
2015 | 8 இல் 5வது | குழு நிலை |
2016 | 8 இல் 4வது | பிளேஆஃப்கள் |
2017 | 8 இல் 3வது | பிளேஆஃப்கள் |
2018 | 8 இல் 3வது | பிளேஆஃப்கள் |
2019 | 8 இல் 5வது | குழு நிலை |
2020 | 8 இல் 5வது | குழு நிலை |
2021 | 8 இல் 4வது | இரண்டாம் இடம் |
2022 | 10ல் 7வது | குழு நிலை |
2023 | 10ல் 7வது | குழு நிலை |
புள்ளிவிவரங்கள்
[தொகு]ஒட்டுமொத்த நிலை
[தொகு]ஆண்டு | விளையாடியது | வெற்றி | தோல்வி | சமன் | முடிவில்லை | வெற்றி% | நிலை |
---|---|---|---|---|---|---|---|
2008 | 14 | 6 | 7 | 0 | 1 | 46.16 | 6/8 |
2009 | 14 | 3 | 10 | 0 | 1 | 23.07 | 8/8 |
2010 | 14 | 7 | 7 | 0 | 0 | 50.00 | 6/8 |
2011 | 15 | 8 | 7 | 0 | 0 | 53.33 | 4/10 |
2012 | 18 | 12 | 5 | 0 | 1 | 70.58 | 1/9 |
2013 | 16 | 6 | 10 | 0 | 0 | 37.50 | 7/9 |
2014 | 16 | 11 | 5 | 0 | 0 | 68.75 | 1/8 |
2015 | 14 | 7 | 6 | 0 | 1 | 53.84 | 5/8 |
2016 | 15 | 8 | 7 | 0 | 0 | 53.33 | 4/8 |
2017 | 16 | 9 | 7 | 0 | 0 | 56.25 | 3/8 |
2018 | 16 | 9 | 7 | 0 | 0 | 56.25 | 3/8 |
2019 | 14 | 6 | 8 | 0 | 0 | 42.86 | 5/8 |
2020 | 14 | 7 | 7 | 0 | 0 | 50.00 | 5/8 |
2021 | 17 | 9 | 8 | 0 | 0 | 52.94 | 2/8 |
2022 | 14 | 6 | 8 | 0 | 0 | 42.85 | 7/10 |
2023 | 14 | 6 | 8 | 0 | 0 | 42.85 | 7/10 |
மொத்தம் | 241 | 120 | 117 | 0 | 4 | 50.63 |
எதிரணி | காலம் | போட்டி | வெற்றி | தோல்வி | சமநிலை | வெற்றி% | |
---|---|---|---|---|---|---|---|
சென்னை சூப்பர் கிங்ஸ் | 2008–2015; 2018-தற்போது | 28 | 10 | 18 | 35.71 | ||
டெல்லி கேபிடல்ஸ் | 2008–தற்போது | 31 | 16 | 15 | 0 | 51.61 | |
கிங்ஸ் லெவன் பஞ்சாப் | 2008–தற்போது | 32 | 21 | 11 | 0 | 65.62 | |
மும்பை இந்தியன்ஸ் | 2008–தற்போது | 32 | 9 | 23 | 0 | 28.12 | |
ராஜஸ்தான் ராயல்ஸ் | 2008–2015; 2018-தற்போது | 27 | 14 | 13 | 0 | 51.85 | |
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் | 2008–தற்போது | 32 | 18 | 14 | 0 | 56.25 | |
சன்ரைசர்ஸ் ஐதராபாத் | 2013–தற்போது | 25 | 16 | 9 | 0 | 64.00 | |
ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு | 2016–2017 | 4 | 4 | 0 | 0 | 100.00 | |
குஜராத் லயன்ஸ் | 2016–2017 | 3 | 1 | 2 | 0 | 33.33 | |
டெக்கான் சார்ஜர்ஸ் | 2008–2012 | 9 | 7 | 2 | 0 | 77.78 | |
கொச்சி டஸ்கர்ஸ் கேரளா | 2011 | 2 | 0 | 2 | 0 | 0.00 | |
புனே வாரியர்ஸ் இந்தியா | 2011–2013 | 5 | 4 | 1 | 0 | 80.00 |
மூலம்= ESPNCricinfo
நிர்வாகம்
[தொகு]பதவி | பெயர் |
---|---|
தலைமை செயற்குழு
மற்றும் நிர்வாக இயக்குனர் |
வெங்கி மைசூர் |
குழு மேலாளர் | வெய்ன் பென்ட்லி |
தலைமை பயிற்சியாளர் | சந்திரகாந்த் பண்டிட் |
உதவிப் பயிற்சியாளர் | அபிசேக் நாயர் |
உதவிப் பயிற்சியாளர் | ஜேம்ஸ் போஸ்டர் |
பந்துவீச்சுப் பயிற்சியாளர் | பாரத் அருண் |
களத்தடுப்புப் பயிற்சியாளர் | ரயான் டென் டோசேட் |
குழு மருத்துவர் | டாக்டர் ஸ்ரீகாந்த் நாராயணசுவாமி |
வலிமை மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளர் | கிறிஸ் டொனால்ட்சன் |
வழிகாட்டி | கௌதம் கம்பீர் |
- உரிமையாளர்கள் - ஷாருக்கான், ஜூகி சாவ்லா & ஜெய் மெக்தா (ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிட்டடு.)
- CEO — ஜாய் பட்டாசார்யா[16]
குறிப்புகள்
[தொகு]- ↑ "Brendon McCullum named KKR head coach". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. 15 August 2019. https://www.espncricinfo.com/story/_/id/27391339/brendon-mccullum-named-kkr-head-coach.
- ↑ "Eden Gardens". www.iplt20.com. Archived from the original on 20 June 2017. பார்க்கப்பட்ட நாள் 14 September 2018.
- ↑ "Kolkata Knight Riders win IPL 5, beat Chennai Super Kings". 29 March 2012. Archived from the original on 2 June 2012. பார்க்கப்பட்ட நாள் 13 October 2012.
- ↑ "Kolkata Knight Riders / Records / Twenty20 matches / Most runs". Stats. ESPNcricinfo.com. Archived from the original on 23 August 2013. பார்க்கப்பட்ட நாள் 30 May 2012.
- ↑ "Kolkata Knight Riders / Records / Twenty20 matches / Most wickets". Archived from the original on 17 April 2013. பார்க்கப்பட்ட நாள் 30 May 2012.
- ↑ "Shah Rukh Khan's Kolkata IPL team to be called Night Riders or Knight Riders". ESPNcricinfo. 9 February 2008 இம் மூலத்தில் இருந்து 23 November 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20121123184920/http://articles.economictimes.indiatimes.com/2008-02-09/news/27694633_1_indian-premier-league-cricket-ground-ipl.
- ↑ Roy, S.K. & Chakraborti, R (23 September 2013). "Chapter 6: Getting There". In Mutum, Dilip (ed.). Marketing Cases from Emerging Markets. Springer Science and Business Media. p. 70. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783642368615.
- ↑ "Superstar Shah Rukh Khan's CPL franchise is now Trinbago Knight Riders". Zee News. 10 February 2016. Archived from the original on 15 March 2016. பார்க்கப்பட்ட நாள் 11 February 2016.
- ↑ "KKR owners buy stake in CPL franchise T&T Red Steel". ESPNcricinfo. 10 June 2015. Archived from the original on 6 May 2021. பார்க்கப்பட்ட நாள் 14 September 2018.
- ↑ "Knight Riders Group buys stake in USA T20 franchise project Major League Cricket". 30 November 2020 இம் மூலத்தில் இருந்து 11 December 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201211152154/https://www.espncricinfo.com/story/knight-riders-group-buys-stake-in-usa-t20-franchise-project-major-league-cricket-1240512.
- ↑ "McCullum's record 158 leads rout". Cricinfo.com. பார்க்கப்பட்ட நாள் 2008-05-23.
- ↑ 12.0 12.1 12.2 "King Khan launches Kolkata Knight Riders". Yahoo. 2008-03-11. பார்க்கப்பட்ட நாள் 2008-03-11.
- ↑ 13.0 13.1 "Kolkata Knightriders launched amidst gloom". Hindustan Times. 2008-03-11. Archived from the original on 2008-03-14. பார்க்கப்பட்ட நாள் 2008-03-11.
- ↑ Eden Gardens | India | Cricket Grounds | ESPNcricinfo பரணிடப்பட்டது 27 பெப்பிரவரி 2009 at the வந்தவழி இயந்திரம். Content-ind. ESPNcricinfo.com. Retrieved 4 September 2011.
- ↑ "Kolkata's Eden Gardens stadium gets a new look for Cricket World Cup 2011". World Interior Design Network. Archived from the original on 16 June 2010. பார்க்கப்பட்ட நாள் 10 June 2010.
- ↑ "Shoaib sued by PCB and sacked by IPL". The Guardian. 2008-04-03. http://sport.guardian.co.uk/cricket/story/0,,2270678,00.html. பார்த்த நாள்: 2008-04-10.