உள்ளடக்கத்துக்குச் செல்

சசிகுமார் (ஊடகவியலாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சசிகுமார்
பிறப்புகொடுங்கல்லூர், திருச்சூர், கேரளம்
படித்த கல்வி நிறுவனங்கள்இலயோலாக் கல்லூரி, சென்னை
பணிபத்திரிகையாளர், ஊடக ஆளுமை, திரைப்பட இயக்குனர், நடிகர்
அறியப்படுவதுசென்னை, ஆசிய இதழியல் கல்லூரியின் தலைவர்
வாழ்க்கைத்
துணை
இராதிகா

சசிகுமார் (Sashi Kumar) கேரள மாநிலத்தைச் சேர்ந்த இந்திய ஊடக ஆளுமையாவார். இவர், இலாப நோக்கமற்ற ஊடக வளர்சி அறக்கட்டளையை நிறுவி தலைமை தாங்குகிறார். சென்னையில் மதிப்புமிக்க ஆசிய இதழியல்க் கல்லூரியை அமைத்து நடத்தி வருகிறார். 80களின் நடுப்பகுதியில் தி இந்துவின் முதல் மேற்கு ஆசிய நிருபராகவும் இருந்தார் எழுத்தாளர் என். எஸ். மாதவன் எழுதிய "வன்மரங்கல் வீழும்போல்" (பெரிய மரங்கள் விழும்போது) " என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு இந்தி மொழியில் காயா தரண் என்ற படத்தை இயக்கியுள்ளார். [1] [2] [3] இவர் தற்போது ஆசிய இதழியல் கல்லூரியின் தலைவராக உள்ளார்.

வாழ்க்கை

[தொகு]

கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் கொடுங்கல்லூர் அருகே கருபதன்னாவில் இவர் பிறந்தார். [1] ஒரு செய்தி வாசிப்பாளராகவும் தயாரிப்பாளராகவும் தூர்தர்ஷனில் (டி.டி) தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர், இந்திய தொலைக்காட்சியில் மணி மேட்டர்ஸ், டானா பானா, ஜன் மன்ச் போன்ற பொருளாதாரம், அரசியல் மற்றும் கலாச்சாரம் குறித்த சுயாதீன நிகழ்ச்சிகளை எழுதி வழங்கினார்.

இவர் ஒரு பிரபலமான திரைப்பட இயக்குநருமாவார். எழுத்தாளர் என். எஸ். மாதவனின் "வன்மரங்கல் வீழும்போல்" (பெரிய மரங்கள் விழும்போது) என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு இந்தி மொழியில் காயா தரண் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் இவருக்கு 2004 ஆம் ஆண்டின் சிறந்த அறிமுக திரைப்பட தயாரிப்பாளராக அரவிந்தன் விருதை வென்றது. இவர், இனியும் மரிச்சிட்டில்லத்தா நம்மால், பால்யகாலசகி, லௌட்ஸ்பீக்கர், என்னு நின்டே மொய்தீன், லவ் 24 X 7 ஆகிய மலையாளப் படங்களில் நடித்தார்.

நூலியல்

[தொகு]
  • Unmediated: Essays on Media, Culture and Cinema, Tulika Books, 2014

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சசிகுமார்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சசிகுமார்_(ஊடகவியலாளர்)&oldid=3834182" இலிருந்து மீள்விக்கப்பட்டது