சடாகோ சசாகி
சடாகோ சசாகி Sadako Sasaki | |
---|---|
பிறப்பு | இரோசிமா, யப்பான் | சனவரி 7, 1943
இறப்பு | அக்டோபர் 25, 1955 இரோசிமா, யப்பான் | (அகவை 12)
இறப்பிற்கான காரணம் | இரத்தப் புற்றுநோய் |
கல்லறை | புக்குவோக்கா, சப்பான் |
தேசியம் | சப்பானியர் |
பணி | மாணவி |
வலைத்தளம் | |
[1] |
சடாகோ சசாகி (佐々木 禎子 Sasaki Sadako?, 7 சனவரி, 1943 – 25 ஒக்டோபர், 1955) ஒரு சப்பானிய சிறுமி, ஹிரோசிமாவில் 1945, ஆகத்து 6 அன்று அணுகுண்டு வீசப்பட்ட போது அவளிற்கு இரண்டு வயது, அவளது வீடு அணுகுண்டு வீசப்பட்ட மிசசா பாலத்திற்கு அருகிலேயே அமைந்திருந்தது. ஆயிரம் கொக்குகளின் கதைக்காக இறப்பதற்கு முன்பும், போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவிகளின் அடையாளமாக இன்றுவரையும் அவள் அறியப்படுகிறாள்.
மேலோட்டம்
[தொகு]சடாகோ அணுகுண்டு வெடிப்பு நிகழும் போது வீட்டிலேயே இருந்தாள், இவ்வெடிப்பு தரையிலிருந்து 2 கிலோமீட்டரில் நிகழ்ந்தது, அதன் போது யன்னலூடாக வெளியே வீசப்பட்டாள், அவளது தாயார் அவள் இறந்திருக்கலாம் என்று சந்தேகப்பட்டு வெளியே ஓடி வந்து பார்த்தார், ஆனால் அவரது மகள் உயிருடன் இருப்பதை கண்டறிந்தார். 1954 நவம்பரில் அவளது காதுகளின் பின்னால் வீக்கம் உருவானது, 1955 சனவரியில் கால்களில் ஊதாப்புள்ளிகள் உருவாகியது. பின்னர் அது குருதிப்புற்றுநோய் என அறியப்பட்டது (அவளது தாயார் இதை அணுகுண்டு நோய் என்று அழைத்தார்)[1] 1955 பிப்ரவரி 21 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்படாள், அங்கு அதிகபட்சமாக ஓராண்டே உயிர் வாழ்ந்தாள்.
அணுகுண்டு வெடித்து சில ஆண்டுகளிற்கு பின் குருதிப்புற்றுநோய் குறிப்பாக குழந்தைகளிடத்தில் அதிகரிப்பது கண்டறியப்பட்டது. 1950களின் தொடக்கத்தில் இது அணுக்கதிர் வீச்சினாலேயே ஏற்படுகிறது என்பது அறியப்பட்டது.[2]
1955 ஆகஸ்டு 3 ஆம் தேதி சகாடோவின் உயிர்த்தோழியான சிசூகோ கமமோடோ மருத்துவமனைக்கு பார்க்க வந்து ஒரு தங்கநிறமான தாளினை சதுரமாக வெட்டி அதை காகித கொக்காக மடித்தாள், யாரேனும் ஆயிரம் கொக்குகளை மடித்தால் அவரின் வேண்டுதலை கடவுள் நிறைவேற்றுவார் எனும் பண்டைய ஜப்பானிய கதையின் நம்பிக்கையை கூறினாள், இதற்கேற்ப அவளும் 1000 கொக்குகளை மடிக்கத் தொடங்கனாள் இறப்பதற்கு முன்புவரை 644 கொக்குகளை மடித்திருந்தாள், பின் எஞ்சிய கொக்குகள் அவளின் நண்பர்களால் மடிக்கப்பட்டு அவளின் உடலுடன் சேர்த்து புதைக்கப்பட்டது.
அவள் மருத்துவமனையிலிருக்கும் போது கொக்குகளை மடிக்க போதுமானளவு நேரம் கிடைத்தாலும் அங்கு காகித்திற்கான பற்றாக்குறை காணப்பட்டது, இதனால் மருந்துச்சீட்டுக்களையும் மாற்றீடாகப்பயன்படுத்தக்கூடிய வேறுபொருட்களையும் பயன்படுத்தினாள், குணமடைந்த நோயாளிகளின் அறைகளிற்குச்சென்று அங்கு பயன்படுத்திய மருந்துச்சீட்டுக்களை பெற்றமையும் இதில் அடங்கும். சிசூகோ பள்ளியிலிருந்து தாள்களை கொண்டுவந்து கொடுப்பாள், இக்காலப்பகுதியில் அவளது நிலை தொடர்ச்சியாக மோசமாகிக்கொண்டே போனது, ஒக்டோபரின் இடைப்பகுதியளவில் அவளது கால் வீக்கமடைந்ததுடன் ஊதா நிறமாகவும் மாறியது அவளது குடும்பத்தினர் சாப்பிட வற்புறுத்திய போது தேனீருடன் சோற்றை கேட்டு 'இது நன்றாயிருக்கிறது' என்று கூறினாள். இவையே அவள் கடைசியாக கூறிய வார்த்தைகள். அவளது குடும்பத்தினர் அவளைச் சூழ்ந்திருக்க ஒக்டோபர் 25, 1955 காலையில் 12 ஆவது வயதில் உயிரிழந்தாள்.
==நினைவு== நினைவலைய
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sasaki Fujiko. "Come back to me again, Sadako".
- ↑ Radiation Effects Research Foundation (former Atomic Bomb Casualty Commission) "Leukemia risks among atomic-bomb survivors" பரணிடப்பட்டது 2012-03-15 at the வந்தவழி இயந்திரம் Accessed 2011-10-30