சண்டிகர் பொறியியல் கல்லூரி
வகை | பொறியியல் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 2002 |
தலைவர் | சத்னம் சிங் சாந்து |
பணிப்பாளர் | முனைவர். பிராசாசீசு பட்னாய்க் |
அமைவிடம் | , |
வளாகம் | நகர்ப்புறம் |
சுருக்கம் | சிஜிசி |
சேர்ப்பு | பஞ்சாப் தொழினுட்ப பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://www.cecmohali.org |
சண்டிகர் பொறியியல் கல்லூரி (Chandigarh Engineering College, CEC) சண்டிகரை அடுத்த மொகாலியில் லான்டரன் பகுதியில் உள்ள சண்டிகர் கல்லூரிக் குழுமத்தின் பொறியியல் மற்றும் தொழிநுட்பவியல் கல்லூரி ஆகும். இது தனது பட்டக் கல்வித் திட்டங்களுக்கு பஞ்சாப் தொழினுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ளது [1] சண்டிகர் கல்லூரிக் குழுமத்தின் லான்டரன் வளாகம் திறக்கப்பட்ட பிறகு ஓராண்டிலேயே இக்கல்லூரி 2002இல் நிறுவப்பட்டது. பஞ்சாபில் உள்ள மேலானப் பொறியியல் கல்லூரிகளில் இதுவும் ஒன்றாக விளங்குகின்றது.
கட்டமைப்பு
[தொகு]லான்டரன் வளாகத்தில் உள்ள ஒன்பது கல்லூரிகளில் சண்டிகர் பொறியியல் கல்லூரியும் ஒன்றாகும். இதுவே முதன்மையானக் கல்லூரியாகவும் விளங்குகின்றது. இக்கல்லூரி நான்கு கட்டிடத் தொகுதிகளில் இயங்குகின்றது.
- தொகுதி 1: மின்னணுப் பொறியியல்
- தொகுதி 2: இயந்திரப் பொறியியல்
- தொகுதி 3: கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழினுட்பம்.
- தொகுதி 13: பயன்பாட்டு அறிவியல்.[2]
ஏப்ரல் 26, 2004இல் இப்பொறியியல் கல்லூரிக்கு ISO 9001:2000 தரச்சான்றிதழ் வழங்கப்பட்டது.[3]
பட்டப்படிப்புகள்
[தொகு]இளநிலை தொழினுட்பம் (பிடெக்)
[தொகு]- கணினி அறிவியல் & பொறியியல்
- தகவல் தொழினுட்பம்
- மின்னணுப் பொறியியல் & தொலைத்தொடர்பு பொறியியல்
- இயந்திரப் பொறியியல்
முதுநிலை தொழினுட்பம் (எம்டெக்)
[தொகு]- கணினி அறிவியல் & பொறியியல்
- அமைப்பு மென்பொருள்
- தகவல் தொழினுட்பம்
- தகவல் பாதுகாப்பு
- மின்னணுவியல் & தொலைத்தொடர்பு பொறியியல்
- பேரளவு ஒருங்கிணைச் சுற்று வடிவமைப்பு
- இயந்திரப் பொறியியல்
முதுநிலை பட்டமேற்படிப்புகள்
[தொகு]- வணிக நிர்வாக மேலாண்மை (எம்பிஏ)
- கணினி பயன்பாட்டு மேற்படிப்பு (எம்சிஏ)
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ Punjab Technical University. "Affiliated Colleges". ptu.ac.in. Archived from the original on 9 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 2 November 2014.
- ↑ CGC. "Chandigarh Engineering College-About". www.cgc.edu.in. Archived from the original on 11 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 2 November 2014.
- ↑ "CEC Landran gets ISO 9001 label". expressindia.com. 27 April 2004 இம் மூலத்தில் இருந்து 15 ஏப்ரல் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/5g2YpFHkF?url=http://cities.expressindia.com/fullstory.php?newsid=82898. பார்த்த நாள்: 14 April 2009.