சயனோசன் குளோரைடு
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
கார்போநைட்ரிடிக்குளோரைடு | |||
முறையான ஐயூபிஏசி பெயர்
குளோரோபார்மோநைட்ரைல் | |||
வேறு பெயர்கள்
| |||
இனங்காட்டிகள் | |||
506-77-4 | |||
Abbreviations | CK | ||
ChemSpider | 10045 | ||
EC number | 208-052-8 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
ம.பா.த | சயனோசன்+குளோரைடு | ||
பப்கெம் | 10477 | ||
வே.ந.வி.ப எண் | GT2275000 | ||
| |||
UN number | 1589 | ||
பண்புகள் | |||
CNCl | |||
வாய்ப்பாட்டு எடை | 61.470 கி மோல்−1 | ||
தோற்றம் | நிறமற்ற வாயு | ||
மணம் | உறைப்பு | ||
அடர்த்தி | 2.7683 மி.கி மி.லி−1 (0 °செ இல், 101.325 கிலோபாசுகல்) | ||
உருகுநிலை | −6.55 °C (20.21 °F; 266.60 K) | ||
கொதிநிலை | 13 °C (55 °F; 286 K) | ||
கரையும் | |||
கரைதிறன் | எத்தனால், ஈதர் ஆகியவற்றில் கரையும் | ||
ஆவியமுக்கம் | 1.987 மெகா பாசுகல் (21.1 °செல்சியசு | ||
வெப்பவேதியியல் | |||
Std enthalpy of formation ΔfH |
137.95 கி.யூ மோல்−1 | ||
நியம மோலார் எந்திரோப்பி S |
236.33 யூ.கெ−1 மோல்−1 | ||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | Highly toxic;[1] forms cyanide in the body[2] | ||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | inchem.org | ||
தீப்பற்றும் வெப்பநிலை | nonflammable [2] | ||
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |||
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
none[2] | ||
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
|
C 0.3 பகுதி/மில்லியன் (0.6 மி.கி/மீ3)[2] | ||
உடனடி அபாயம்
|
N.D.[2] | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
சயனோசன் குளோரைடு (Cyanogen chloride) என்பது NCCl என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நேரியல், மூவணு போலி உப்பீனியான இச்சேர்மம் எளிதாகச் செறிவுட்டப்பட்ட ஒரு நிறமற்ற வாயு ஆகும். இதனுடன் தொடர்புடைய சயனோசன் புரோமைடு பொதுவாக ஆய்வகங்களில் பயன்படுத்தப்படுகிறது. அறை வெப்பநிலையில் திண்ம நிலையில் காணப்படும் சயனோசன் புரோமைடு பரவலாக உயிர் வேதியியல் பகுப்பாய்வுகளிலும் தயாரிப்புகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
அமைப்பு
[தொகு]சயனோசன் குளோரைடு ClCN இணைப்புநிலை கொண்ட ஒரு மூலக்கூறு ஆகும். இவ்விணைப்பில் கார்பனும் குளோரினும் ஒற்றைப் பிணைப்பாலும், கார்பனும் நைட்ரசனும் முப்பிணைப்பாலும் பிணைக்கப்பட்டுள்ளன. தொடர்புடைய NCF, NCBr, NCI போன்ற பிற சயனோசன் ஆலைடுகளைப் போல சயனோசன் குளோரைடும் ஒரு நேரியல் மூலக்கூறு ஆகும்.
தயாரிப்பு
[தொகு]சோடியம் சயனைடுடன் குளோரின் சேர்த்து ஆக்சிசனேற்றம் செய்வதனால் சயனோசன் குளோரைடு உற்பத்தி செய்யப்படுகிறது. ((CN)2) [3] என்ற இடைநிலை சயனோசன் உருவாதல் வழியாக இவ்வினை நிகழ்கிறது.
- NaCN + Cl2 → ClCN + NaCl
வேதிப்பண்புகள்
[தொகு]ஓர் அமிலத்தின் முன்னிலையில் இச்சேர்மம் முப்படியாதல் வினைக்கு உட்பட்டு சயனூரிக் குளோரைடு என்ற பல்லினவளையச் சேர்மமாகிறது.
தண்ணிருடன் சேர்த்து நீராற்பகுப்பு வினைக்கு உட்படுத்தினால் சயனோசன் குளோரைடு மெல்ல நீராற்பகுப்பு அடைந்து, நடுநிலை கார அமிலத்தன்மையில் (pH) சயனேட்டு அயனியையும் குளோரைடு அயனியையும் வெளியிடுகிறது.
- ClCN + H2O → NCO- + Cl- + 2H+
பயன்கள்
[தொகு]சல்போனைல் சயனைடுகள் தயாரிப்பதற்கான ஒரு முன்னோடிச் சேர்மமாக சயனோசன் குளோரைடு இருக்கிறது [4] கரிமத் தொகுப்பு வினைகளில் குளோரோசல்போனைல் ஐசோசயனேட்டு ஒரு பயனுள்ள வினையாக்கியாகச் செயல்படுகிறது.[5].
பாதுகாப்பு
[தொகு]சி.கே என்று சுருக்க முறையில் அடையாளப்படுத்தப்படும் சயனோசன் குளோரைடு உயர் நச்சை விளைவிக்கக்கூடிய ஒரு இரத்த முகவராகும். வேதியியல் போர்முறையில் சயனோசன் குளோரைடை ஆயுதமாகப் பயன்படுத்த ஒருகாலத்தில் பரிசீலிக்கப்பட்டது. கண்கள் அல்லது சுவாச உறுப்புகளில் பட நேர்ந்தால் உடனடியாக காயத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு சேர்மமாக சயனோசன் குளோரைடு உள்ளது. அயர்வு, தொடர்சளி (மூக்கு ஒழுகுதல்), தொண்டை வறட்சி, இருமல், குழப்பம், குமட்டல், வாந்தி, வீக்கம், உணர்விழப்பு, வலிப்பு, பக்கவாதம் மற்றும் மரணம் ஆகிய அறிகுறிகள் சயனோசன் குளோரைடு தொடர்பால் வெளிப்படுகின்றன [1] . வாயு முகமுடிகளில் உள்ள வடிகட்டிகளிலும் ஊடுறுவக் கூடியது என்பதால் சயனோசன் குளோரைடு மிகவும் ஆபத்தனதாகக் கருதப்படுகிறது. பலபடியாகும் தன்மையையும் சிலசமயங்களில் தீவிரமாக வெடிக்கும் இயல்பையும் கருத்திற்கொண்ட அமெரிக்கப் பகுப்பாய்வின்படி சயனோசன் குளோரைடு நிலைப்புத்தன்மையற்றதாகக் கருதப்படுகிறது.[6].
வேதியியல் ஆயுதங்கள் கருத்தரங்கில் சயனோசன் குளோரைடு அட்டவனை மூன்றில் பட்டியலிடப்பட்டுள்ளது. இச்சேர்மத்தின் உற்பத்தி முழுவதும் வேதியியல் ஆயுதங்கள் தடுப்பு அமைப்பிற்கு கண்டிப்பாகத் தெரிவிக்கப்படல் வேண்டும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "CYANOGEN CHLORIDE (CK)". The Emergency Response Safety and Health Database. NIOSH.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0162". National Institute for Occupational Safety and Health (NIOSH).
- ↑ Coleman, G. H.; Leeper, R. W.; Schulze, C. C. (1946). "Cyanogen Chloride". Inorganic Syntheses 2: 90–94. doi:10.1002/9780470132333.ch25.
- ↑ Vrijland, M. S. A. (1977). "Sulfonyl Cyanides: Methanesulfonyl Cyanide". Organic Syntheses 57: 88. http://www.orgsyn.org/orgsyn/pdfs/CV6P0727.pdf.; Collective Volume, vol. 6, p. 727
- ↑ Graf, R. (1966). "Chlorosulfonyl Isocyanate". Organic Syntheses 46: 23. http://www.orgsyn.org/orgsyn/pdfs/CV5P0226.pdf.; Collective Volume, vol. 5, p. 226
- ↑ FM 3-8 Chemical Reference Handbook. US Army. 1967.
புற இணைப்புகள்
[தொகு]- Murphy-Lavoie, H. (2011). "Cyanogen Chloride Poisoning". eMedicine. MedScape.
- "National Pollutant Inventory – Cyanide compounds fact sheet". Australian Government.
- "NIOSH Pocket Guide to Chemical Hazards". Centers for Disease Control and Prevention.