சாட்விக் குறியீடு
சாட்விக் குறியீடு (Chadwick sign) என்பது இரத்த நாளங்களில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் பெண்களின் கருப்பை வாய், பிறப்புறுப்பு, பிறப்புறுப்பு இதழ்கள் ஆகியவற்றில் தோன்றும் நீல நிற மாற்றம் ஆகும். பெண்கள் கருத்தரித்த 6 முதல் 8 வாரங்களுக்கு முன்பிருந்தே இம்மாற்றத்தைக் காண முடியும். [1] இத்தகைய நிறமாற்றம் தோன்றினால் அந்நிலையை கர்ப்பத்தின் ஆரம்ப அறிகுறி எனக்கருதலாம்.
இந்த வண்ண மாற்றங்கள் 1796 முதல் 1872ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் வாழ்ந்த பிரெஞ்சு மருத்துவர் எட்டியென் யோசப் யாக்குமின் என்பவரால் 1836 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டன. [2] அமெரிக்கப் பெண் நோயியல் மருத்துவ வல்லுநர் யேம்சு ரீடு சாட்விக் நினைவாக இந்நிலைக்கு சாட்விக் குறியீடு எனப்பெயர் சூட்டப்பட்டது. ஏனெனில் 1886 ஆம் ஆண்டில் அமெரிக்க மகளிர் மருத்துவ சங்கத்தின் முன்பாக இவர் நிறமாற்றம் தொடர்பான தனது ஆராய்ச்சிக் கட்டுரையை வாசித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் மற்றும் அடுத்த ஆண்டிலேயே அதை வெளியிடவும் செய்தார். இக்கட்டுரையில் இத்தகைய நிறமாற்றம் தொடர்பான தகவல்களை முதன்முதலில் கண்டுபிடித்தவர் யாக்குமின் என்று இவர் பதிவும் செய்துள்ளார்.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Note: In some it can be seen earlier. pregnancytoday.com பரணிடப்பட்டது சூலை 22, 2009 at the வந்தவழி இயந்திரம்
- ↑ 2.0 2.1 Gleichert, James E. (1971). "Étienne Joseph Jacquemin, Discoverer of 'Chadwick's Sign'". Journal of the History of Medicine and Allied Sciences 26 (1): 75–80. doi:10.1093/jhmas/XXVI.1.75. பப்மெட்:4925842. https://archive.org/details/sim_journal-of-the-history-of-medicine-and-allied-sciences_1971-01_26_1/page/75.
- ↑ Chadwick, James Reed (1887). "The value of the bluish discoloration of the vaginal entrance as a sign of pregnancy". Transactions of the American Gynecological Society (11): 399–418.