சாமுவேல் சுகுவாபே
சாமுவேல் என்றிச் சுகுவாபே Samuel Heinrich Schwabe | |
---|---|
பிறப்பு | தேசாவு | 25 அக்டோபர் 1789
இறப்பு | 11 ஏப்ரல் 1875 | (அகவை 85)
தேசியம் | செருமானியர் |
துறை | வானியல் |
அறியப்படுவது | சூரியக் கரும்புள்ளிகள் |
விருதுகள் | அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் |
சாமுவேல் என்றிச் சுகுவாபே (Samuel Heinrich Schwabe, 25 அக்தோபர் 1789 – 11 ஏப்பிரல் 1875) ஒரு செருமானிய வானியலாளர். இவர் சூரியக் கரும்புள்ளிகளின் ஆய்வுக்காகப் பெயர் பெற்றவர்.
இவர் தேசாவு எனுமிட்த்தில் பிறந்தார். முதலில் இறையியலாளராக இருந்த இவர் பின்னர் வானியலில் கவனம் செலுத்தலானார். இவர் 1826 இல் சூரியக் கரும்புள்ளிகளை நோக்கிடலானார்.இவர் வல்கான் எனும் கருதுகோள்நிலைக் கோள் ஒன்றைச் சூரியனுக்கும் அறிவன் (புதன்) கோளுக்கும் இடையில் கண்டுபிடிக்க முயற்சி எடுத்தார். அது சூரியனுக்கு மிக நெருக்கமாக உள்ளதால் அதை நோக்குதல் அரிதெனக் கருதினார். என்றாலும் அது சூரியனுக்கு முன்னால் கடக்கும்போது கரும்புள்ளியாகத் தோன்றும் என நம்பித் தன் ஆய்வைத் தொடர்ந்தார். இவர் 1826 முதல் 1843 வரை 17 ஆண்டுகள் ஒவ்வொரு நாளும் சூரியனை நோக்கி அதன் கரும்புள்ளிகளைப் பதிவு செய்யலானார். இவர் வல்கானைக் காணாவிடினும் சூரியக் கரும்புள்ளி வட்டிப்பைக் கண்டுபிடித்து "1843 இல் சூரியனின் நோக்கீடுகள் (Solar Observations during 1843)" எனும் ஆய்வுக் கட்டுரையில் தன் முடிவுகளை வெளியிட்டார். அதில் இக்கரும்புள்ளிகள் 10 ஆண்டுகளில் பெரும அளவை அடைகின்றன என முன்மொழிந்தார். இந்த ஆய்வை முதலில் எவரும் கண்டுகொள்ளவில்லை. என்றாலும், அப்போது பெர்ன் வான்காணக இயக்குநராக இருந்த உருடோல்ஃப் வுல்ஃப் , மிகவும் ஆழ்ந்துணரவே சூரியக் கரும்புள்ளிகளின் ஆய்வை முறையாகவும் ஒழுங்காகவும் மேற்கொண்டார். சுகுவாபேயின் நோக்கீடுகள் பின்னர் 1851 இல் அலெக்சாந்தர் வான் அம்போல்டால் தனது அண்டம் (Kosmos) எனும் நூலின் மூன்றாம் தொகுதியில் பயன்படுத்தப்பட்டன. இப்போது சூரியக் கரும்புள்ளிகளின் அலைவுதன்மையும் நேரமும் துல்லியமாக அறியப்பட்டுள்ளன. எனவே வானியலின் ஓர் அரிய கண்டுபிடிப்புக்குச் சுகுவாபே சொந்தக்காரர் ஆனார்.
இவருக்கு 1857 இல் அரசு வானியல் கழகத்தின் பொற்பதக்கம் வழங்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.
வெளி இணைப்புகள்
[தொகு]- Excerpts from Solar Observations During 1843 by Heinrich Schwabe [1].
- Address delivered by the President of the RAS on presenting the Gold Medal of the Society to M. Schwabe [2]
- HAO "S. Heinrich Schwabe (1789-1875)" [3] பரணிடப்பட்டது 2008-07-20 at the வந்தவழி இயந்திரம்
- HAO "S. Heinrich Schwabe (1789-1875)" [4] பரணிடப்பட்டது 2007-08-06 at the வந்தவழி இயந்திரம் with portrait.
- Chris Plicht "Schwabe, Samuel Heinrich (1789 - 1875)" [5] பரணிடப்பட்டது 2012-03-21 at the வந்தவழி இயந்திரம்
- The Sun—History [6]