உள்ளடக்கத்துக்குச் செல்

சாம்சோனைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாம்சோனைட்டு
Samsonite
செருமனியின் ஆர்சு மலைகள் பகுதியிலுள்ள வெள்ளிச் சுரங்கத்தில் கிடைத்த சாம்சோனைட்டு
பொதுவானாவை
வகைசல்போவுப்பு கனிமம்
வேதி வாய்பாடுAg4MnSb2S6
இனங்காணல்
நிறம்கருப்பு
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு
மோவின் அளவுகோல் வலிமை2 12
மிளிர்வுஉலோகத்தன்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது
ஒப்படர்த்தி5.461 (calculated)
மேற்கோள்கள்[1][2][3]

சாம்சோனைட்டு (Samsonite) என்பது Ag4MnSb2S6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். மாங்கனீசு ஆண்டிமனி சல்போவுப்புக் கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. ஒரு பொதுவான மெல்லிய கதிர்வீச்சுடன் ஒற்றைச்சரிவச்சுப் பட்டக அமைப்பில் இது படிகமாகிறது. உலோகக் கருப்பு முதல் எஃகு கருப்பு வரை பிளவு இல்லாமல் நொறுங்கும் தன்மையுடன் சங்குருவத்தில் காணப்படுகிறது. மெல்லிய துணுக்குகளில் பிரதிபலிக்கப்பட்ட ஒளியில் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில் தோன்றும். சிவப்பு நிற கோடுகளையும் கொண்டிருக்கும். மென்மையான இக்கனிமம் மோவின் கடினத்தன்மை அளவுகோலில் 2.5 என்ற அளவையும் ஒப்படர்த்தி 5.51 என்ற அளவையும் பெற்றுள்ளது.

செருமனி நாட்டின் ஆர்சு மலைகள் பகுதியிலுள்ள சாம்சன் வெள்ளிச் சுரங்கத்தில் கண்டறியப்பட்ட காரணத்தால் 1910 ஆம் ஆண்டில் இது முதன்முதலில் சாம்சோனைட்டு என்று பெயரிடப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  • Palache, C., H. Berman, and C. Frondel (1944) Dana's system of mineralogy, (7th edition), v. I, pp. 393–395
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்சோனைட்டு&oldid=4137735" இலிருந்து மீள்விக்கப்பட்டது