சாம்பா
Appearance
சாம்பா என்பது ஒரு பிரேசில் நாட்டு நடனமும் இசை வகையும் ஆகும். இது ஆப்பிரிக்க, ஐரோப்பிய மூலங்களை அடிப்படையாகக் கொண்டு உருவானது. பிரேசிலின் தலையாய பண்பாட்டு வெளிப்பாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் இது, பிரேசிலின் தேசிய அடையாளத்துக்கான சின்னமாகவும் விளங்குகிறது.
பாகிய, சாம்பா டி ரோடா எனும் சாம்பா வகை 2005 ஆம் ஆண்டில் யுனெசுக்கோ மனிதத்தின் மரபுகளுள் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. இட்துவே இன்று ரியோ டி செனெய்ரோவில் ஆடப்பட்டு வரும் கரியோக்கா என்னும் சாம்பா வகையின் அடிப்படையாகும்.