உள்ளடக்கத்துக்குச் செல்

சுவர்ணமச்சை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவர்ணமச்சை, தங்கமீன்மகள்
தாய்லாந்து நொந்தபுரியிலுள்ள கடையொன்றில் காணப்படும் சுவர்ணமச்சை ஆகூழ் ஓவியம்

சுவர்ணமச்சை (தாய் மொழி:สุพรรณมัจฉา சுவன்னமச்சா; கெமர்:សុវណ្ណមច្ឆា சொவன்மச்சா; சங்கதம்:ஸ்வர்ணமத்ஸ்யா "தங்கமீன்மகள்") என்பவள், தாய்லாந்து மற்றும் ஏனைய தென்கிழக்காசியா இராமாயணங்களில் மாத்திரம் வருகின்ற, இராமாயணப் பாத்திரம் ஆகும்.[1] "தசகண்டன்" இராவணனின் மகளான இவள், ஒரு கடற்கன்னியாக வருணிக்கப்படுவதுடன், அனுமனின் காதலியாகவும் கூறப்படுகின்றாள்.[2] சுவர்ணமச்சையின் ஓவியப் படங்களை வீடுகளில் தொங்கவிடுவது, இல்லத்துக்கு ஆகூழைக் (அதிர்ஷ்டம்) கொண்டு வரும் என்பது தாய் மக்களின் நம்பிக்கை.

வரலாறு

[தொகு]
பாங்கொக் ஆலயமொன்றில் அனுமானும் சுவர்ணமச்சையும்

சீதையை இலங்கையிலிருந்து மீட்பதற்காக, அனுமனின் தலைமையில் வானரப்படை, இலங்கைக்குப் பாலம் அமைக்கின்றது. எனினும் பாலம் அமைக்க இடப்படும் கற்கள் காணாமற்போவதைக் கண்டு, வானரங்கள் அனுமனிடம் முறையிடுகின்றன. அவர் சென்று பார்க்கும் போது, கற்கள் கடற்கன்னிகளால் களவாடப்படுவதைக் கண்டறிகிறார். பேரழகியாக விளங்கிய அவர்களின் தலைவியை அவர் பிடிக்க முயலும்போது அவள் தப்பிவிடுகின்றாள். சுவர்ணமச்சை எனும் பெயருடைய அவள், இறுதியில் அனுமனிடம் காதல் வயப்பட்டு மனம் மாறுவதுடன், தான் இராவணன் மகள் என்பதை வெளிப்படுத்தி, அணைகட்டவும் உதவுகின்றாள். அவளுக்கும் அனுமனுக்கும் பின்னாளில் "மச்சானு" எனும் மைந்தனும் பிறக்கிறான்.[3]

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. Satyavrat Sastri (2006). Discovery of Sanskrit Treasures: Epics and Puranas. Yash Publications. p. 77. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-89537-04-3. பார்க்கப்பட்ட நாள் 2012-07-24.
  2. S.N. Desai (2005). Hinduism in Thai Life. Popular Prakashan. p. 135. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7154-189-8. பார்க்கப்பட்ட நாள் 2012-07-24.
  3. Asian Folklore Studies, Volume 44 (1985) pp.273,279

மேலும் பார்க்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவர்ணமச்சை&oldid=4180267" இலிருந்து மீள்விக்கப்பட்டது