சுவின்ஹோ உள்ளான்
சுவின்ஹோ உள்ளான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | இசுகோலோபாசிடே
|
பேரினம்: | கல்லினாகோ
|
இனம்: | G. megala
|
இருசொற் பெயரீடு | |
Gallinago megala R. Swinhoe, 1861 |
சுவின்ஹோ உள்ளான், ( Swinhoe's snipe ), காட்டு உள்ளான் அல்லது சீன உள்ளான் என்றும் அழைக்கப்படுவது, நடுத்தர அளவிலான ( 27–29) செ.மீ. நீளம், 38-44 செ.மீ. இறக்கை அகலம், 120 கிராம் எடை), நெடுந்தொலைவு, வலசை போகும் பறவை ஆகும்.
1861 ஆம் ஆண்டில் இந்த இனத்தை முதன்முதலில் விவரித்த பிரித்தானிய இயற்கை ஆர்வலர் ராபர்ட் ஸ்வின்ஹோவின் நினைவாக இதற்கு பெயர் இடப்பட்டது.
விளக்கம்
[தொகு]இது பழக்க வழக்கம், இனப்பெருக்கம் ஆகிய எல்லாவற்றிலும் கூரியவால் உள்ளானைப் பெரிதும் ஒத்து இருக்கும். சற்று அளவில் பெரியதாகக் காணப்படும் இதன் வால் இறகுகள் கூரியவால் உள்ளானைப் போலன்றி வேறுபட அமைந்திருப்பதால் இதைக் கொண்டுதான் அடையாளம் காணவேண்டும்.[2] தென் கொரியாவில் இந்த இனம் பொதுவாக சோ சூக்யுங் என்று குறிப்பிடப்படுகிறது.
பரவல்
[தொகு]இவை முதன்மையாக நடு மற்றும் தெற்கு சைபீரியா மற்றும் மங்கோலியாவில் இனப்பெருக்கம் செய்கிறன்றன. இனப்பெருக்கம் செய்யாத பருவத்தில் ஒட்டுமொத்த பறவைகளும் வலசை போகின்றன. இப்பறவைகள் முக்கியமாக கிழக்கு மற்றும் தெற்கு இந்தியா, இலங்கை, தென்கிழக்கு சீனா, தென்கிழக்காசியா, நியூ கினி போன்ற இடங்களில் காலத்தைக் கழிக்கின்றன. இவை கிழக்கு சீனாவிலும் எப்போதாவது யப்பானிலும் இடம்பெயர்ந்து வந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆத்திரேலியாவில் இப்பறவை காணப்பட்ட பதிவுகளில் முக்கியமாக வடக்குப் பிரதேசத்தின் டாப் எண்ட் மற்றும் வடமேற்கு மேற்கு ஆஸ்திரேலியா போன்ற பகுதிகள் ஆகும்.
வாழ்விடம்
[தொகு]இவற்றின் இனப்பெருக்க வாழ்விடமாக புல்வெளிகள் உள்ளன. இனப்பெருக்கம் செய்யாத வாழ்விடமாக நெல் வயல்கள் மற்றும் கழிவுநீர் பண்ணைகள் உட்பட பல்வேறு வகையான ஆழமற்ற நன்னீர் சதுப்பு நிலங்கள் ஆகும். சேற்று நிலம், ஆழமற்ற தண்ணீர் போன்றவற்றிலும் அருகிலுள்ள தாவரங்களிலும் உணவு தேடும்.
உணவு
[தொகு]இது முதன்மையாக மண்புழுக்கள், மெல்லுடலிகள், பூச்சிகள் உட்பட சிறிய முதுகெலும்பிலி உயிர்களை உணவாகக் கொள்கிறது.
பாதுகாப்பு
[தொகு]பரவலான வாழிட எல்லை மற்றும் பறவைகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க சரிவு போன்றவற்றவைக்கான சான்றுகள் இல்லாததால், இந்த இனம் தீவாய்ப்புக் கவலைக் குறைந்த இனமாக மதிப்பிடப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Gallinago megala". IUCN Red List of Threatened Species 2016: e.T22693090A93383287. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22693090A93383287.en. https://www.iucnredlist.org/species/22693090/93383287. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. p. 164.