சென்காகு தீவு விவகாரம்
சென்காகு தீவுகள் விவகாரம் (Senkaku Islands dispute) என்பது சப்பானியர்கள் சென்காகு என்றும், சீனர்கள் டயாயு என்றும் [1] தாய்வான் மக்கள் டியாயுதய் என்றும்[2] அழைக்கும் கிழக்கு சீன கடலில் உள்ள ஆளில்லாத் தீவுக்குழுமமான சென்காகு தீவுகளின் உரிமை குறித்தான பிணக்கு ஆகும். சப்பானின் ஆட்சியில் இருக்கும் இந்தத் தீவுக் குழுமத்தை சீன மக்கள் குடியரசும் (PRC) [3] சீனக் குடியரசும் (ROC)[4] உரிமை கொண்டாடி வருகின்றன. இத்தீவுகளை ஐக்கிய அமெரிக்கா 1945 முதல் 1972 வரை ஆக்கிரமித்திருந்தது.[5] இத்தீவுகளை அமெரிக்கா சப்பானிடம் ஒப்படைக்கும்போதே இரு சீன நாடுகளும் இத்தீவுகள் மீதான தங்கள் உரிமையை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் முறையிட்டிருந்தன.[6] இத்தீவுகளில் உள்ள எண்ணெய், கனிம மற்றும் மீன்பிடி வளங்களுக்கு ஆளுமை உள்ள நாட்டிற்கு முழு அதிகாரம் கிடைக்கும் .[7] இத்தீவுகளின் உரிமை எந்த நாட்டிற்குரியது என்பதைக் குறித்து அமெரிக்கா அலுவல்முறையான அறிவிப்பை வெளியிடாதபோதும்[8] அமெரிக்காவிற்கும் சப்பானிற்கும் இடையே ஒப்பிட்ட இராணுவ உடன்பாட்டின்படி இத்தீவுகளை காக்க சப்பான் எடுக்கும் எந்த இராணுவ நடவடிக்கைக்கும் அமெரிக்கா துணை நிற்க வேண்டிய கட்டாயம் உள்ளது.[9]
செப்டம்பர் 2012இல் சப்பான் சர்ச்சைக்குரிய இத்தீவுக் குழுமத்தில் மூன்று தீவுகளை தேசியமயமாக்கியுள்ளது. இதனை அடுத்து சீனாவில் சப்பானுக்கெதிராக பெருமளவில் எதிர்ப்பு எழுந்துள்ளது .[10] சீனா,சப்பான் நாடுகளுக்கு இடையில் ஆண்டுக்கு $ 34,500 கோடி அளவுக்கு வணிகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சீனாவில் உள்ள சப்பானின் தயாரிப்பு நிறுவனங்களின் ஆலைகள் மீது மக்கள் திடீர் தாக்குதல் நடத்திச் சூறையாடினர். சப்பானிய நிறுவனம் தயாரிக்கும் தானுந்துகள் பல இடங்களில் அடித்து நொறுக்கப்பட்டன.[11]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ogura, Junko (2010-10-14). "Japanese party urges Google to drop Chinese name for disputed islands". CNN World. CNN (US) இம் மூலத்தில் இருந்து 2012-10-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121004161611/http://articles.cnn.com/2010-10-14/world/japan.google.disputed.islands_1_diaoyu-islands-chinese-fishing-captain-senkaku-islands?_s=PM%3AWORLD.
- ↑ Kristof, Nicholas (Sept. 10, 2010). "Look Out for the Diaoyu Islands". த நியூயார்க் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் Aug. 15, 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ Netherlands Institute for the Law of the Sea (NILOS). (2000). International Organizations and the Law of the Sea, pp. 107-108., p. 107, கூகுள் புத்தகங்களில்
- ↑ Lee, Seokwoo et al. (2002). Territorial disputes among Japan, Taiwan and China concerning the Senkaku Islands, pp. 11-12., p. 11, கூகுள் புத்தகங்களில்
- ↑ By JOHN W. FINNEYSpecial to The New York Times (1971-11-11). "SENATE ENDORSES OKINAWA TREATY - Votes 84 to 6 for Island's Return to Japan - Rioters There Kill a Policeman Senate, in 84 to 6 Vote, Approves the Treaty Returning Okinawa to Japan - Front Page - NYTimes.com". Select.nytimes.com. பார்க்கப்பட்ட நாள் 2012-08-20.
- ↑ http://www.ioc.u-tokyo.ac.jp/~worldjpn/documents/texts/JPCH/19720520.O1C.html
- ↑ "Japanese nationals land on disputed Senkaku islands". Zeenews.india.com. பார்க்கப்பட்ட நாள் 2012-08-20.
- ↑ Philip J. Crowley, Remarks to the Press United States Department of State, 23 September 2010
- ↑ "U.S. says Senkaku Islands fall within scope of Japan-U.S. security treaty". Kyodo News. Archived from the original on 2012-07-15. பார்க்கப்பட்ட நாள் 2012-08-20.
- ↑ "Anti-Japan protesters rally in Beijing". Agence France-Presse இம் மூலத்தில் இருந்து 2012-09-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120916235209/http://www.google.com/hostednews/afp/article/ALeqM5hlNEQu71YWu6gU5grASp4oCCtPMg?docId=CNG.94f2aee15fe6c666bf80f346b88c4ec4.71.
- ↑ "சீனாவில் மக்கள் போராட்டம் ஜப்பான் நிறுவனங்கள் சூறை". தினகரன். 18 செப்டம்பர் 2012. Archived from the original on 2012-09-18. பார்க்கப்பட்ட நாள் 18 செப்டம்பர் 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)
வெளி இணைப்புகள்
[தொகு]- Global Security, Senkaku/Diaoyutai Islands
- Basic View on Senkaku (by the Japanese Ministry of Foreign Affairs)
- Q&A on the Senkaku Islands (by the Japanese Ministry of Foreign Affairs)
- Japan’s Territorial Problem: The Northern Territories, Takeshima, and the Senkaku Islands, commentary by Ambassador Kazuhiko Togo (May 6, 2012)
- Article by Kiyoshi Inoue Professor of History department Kyoto University, and original text and maps in Japanese
- Senkaku @BBC
- "Senkaku/Diaoyutai Islands". Globalsecurity.org.
- Diaoyutai History (in Chinese) பரணிடப்பட்டது 2008-07-05 at the வந்தவழி இயந்திரம்
- Satellite image of Senkaku Islands
- "The Senkaku/Diaoyu Islands Dispute பரணிடப்பட்டது 2010-02-22 at the வந்தவழி இயந்திரம்:", Durham University, 2008. Dzurek, Daniel.
- "INTERNATIONAL LAW'S UNHELPFUL ROLE IN THE SENKAKU ISLANDS:"பரணிடப்பட்டது 2017-02-20 at the வந்தவழி இயந்திரம், பென்சில்வேனியா பல்கலைக்கழகம், 18 October 1996. Ramos-Mrosovsky, Carlos.
- 琉球群岛人民反对美国占领的斗争 "Ryukyu Islands, the struggle of peoples against U.S. occupation," 人民日報 (People's Daily), January 8, 1953. (in Chinese)
- "China's Diaoyu Islands Sovereignty is Undeniable" at People's Daily Online, May 26, 2003.
- "Wrong to dispute Japan’s sovereignty of Senkaku" by Hiroshi Suzuki, Director, Japan Information and Cultural Centre Minister, Embassy of Japan, London., Financial Times>Letters, May 28, 2012.