உள்ளடக்கத்துக்குச் செல்

செருமனி தேசிய காற்பந்து அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செருமனி
Shirt badge/Association crest
அடைபெயர்Nationalmannschaft (தேசிய அணி), Nationalelf (தேசிய பதினொருவர்) அல்லது DFB-Elf (டிஎஃப்பி பதினொருவர்); Die Adler (கழுகுகள்);
Die Mannschaft (அணி) என்று பெரும்பாலும் இடாய்ச்சு மொழியல்லாத ஊடகங்களில்
கூட்டமைப்புசெருமன் கால்பந்துச் சங்கம்
(Deutscher Fußball-Bund – டிஎஃப்பி)
கண்ட கூட்டமைப்புஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் (ஐரோப்பா)
தலைமைப் பயிற்சியாளர்ஜோக்கிம் லோ
அணித் தலைவர்பிலிப் லாம்
Most capsலோதர் மத்தாசு (150)
அதிகபட்ச கோல் அடித்தவர்மிரோசுலோவ் குளோசு (71)
பீஃபா குறியீடுGER
பீஃபா தரவரிசை2
அதிகபட்ச பிஃபா தரவரிசை1[1] (திசம்பர் 1992, ஆகத்து 1993, திசம்பர் 1993, பெப்ரவரி 1994 – மார்ச் 1994, சூன் 1994)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை22[1] (மார்ச் 2006)
எலோ தரவரிசை3
அதிகபட்ச எலோ1 (1990–92, 1993–94, 1996–97)
குறைந்தபட்ச எலோ28 (1923)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
 சுவிட்சர்லாந்து 5–3 செருமனி
(பேசெல், சுவிட்சர்லாந்து; 5 ஏப்ரல் 1908)[2]
பெரும் வெற்றி
செருமனி 16–0 உருசியா 
(ஸ்டாக்ஹோம், சுவீடன்; 1 சூலை 1912)[3]
பெரும் தோல்வி
இங்கிலாந்து அமெச்சூர்கள் 9–0 செருமனி
(ஆக்சுபோர்டு, இங்கிலாந்து; 13 மார்ச் 1909)[4][5]
உலகக் கோப்பை
பங்கேற்புகள்17 (முதற்தடவையாக 1934 இல்)
சிறந்த முடிவுவாகையாளர்கள், 1954, 1974, 1990, 2014
ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி
பங்கேற்புகள்11 (முதற்தடவையாக 1972 இல்)
சிறந்த முடிவுவாகையாளர்கள், 1972, 1980, 1996
கூட்டமைப்புகள் கோப்பை
பங்கேற்புகள்2 (முதற்தடவையாக 1999 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி இல்)
சிறந்த முடிவு3வது இடம், 2005

செருமானியத் தேசிய கால்பந்து அணி (இடாய்ச்சு மொழி: Die deutsche Fußballnationalmannschaft) 1908 முதல் பன்னாட்டுப் போட்டிகளில் செருமனி நாட்டின் சார்பாக விளையாடும் காற்பந்தாட்ட அணியாகும்.[2] இதனை 1900இல் நிறுவப்பட்ட செருமன் கால்பந்துச் சங்கம் (Deutscher Fußball-Bund) மேலாண்மை செய்து வருகிறது.[6][7] 1949இல் செருமன் கால்பந்துச் சங்கம் மீண்டும் துவங்கப்பட்டதிலிருந்து 1990இல் செருமானிய மீளிணைவு நிகழும் வரை இது மேற்கு செருமனியைக் குறித்தது. செருமனி கூட்டணி நாடுகளின் ஆட்சியில் இருந்தபோது இரண்டு தனியான தேசிய அணிகளை பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு அங்கீகரித்திருந்தது: சார்லாந்து அணி (1950–1956) மற்றும் ஜெர்மன் சனநாயகக் குடியரசு சார்பான கிழக்கு செருமனி அணி (1952–1990). இவை இரண்டுமே, அவற்றின் சாதனைகள் உட்பட,[8][9] தற்போதைய தேசிய அணியுடன் இணைக்கப்பட்டுள்ளன. 1990இல் ஏற்பட்ட மீளிணைவிற்கு பிறகு அலுவல்முறைப் பெயரும் குறியீடும் "செருமனி FR (FRG)" என்பதிலிருந்து "செருமனி (GER)" என்பதாக மாற்றப்பட்டது.

பன்னாட்டு கால்பந்தாட்டங்களில் செருமானியத் தேசிய அணி மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக விளங்குகிறது; நான்கு உலகக் கோப்பைகளையும் (1954, 1974, 1990, 2014) மூன்று ஐரோப்பிய கோப்பைகளையும் (1972, 1980, 1996) வென்றுள்ளது.[6] தவிரவும் ஐரோப்பியப் போட்டிகளில் மூன்று முறையும் உலகக்கோப்பைகளில் நான்கு முறையும் இரண்டாமிடத்தை எட்டியுள்ளனர்; மேலும் நான்கு முறை மூன்றாமிடத்திற்கு முன்னேறியுள்ளனர் [6] கிழக்கு செருமனி ஒலிம்பிக்கில் 1976இல் தங்கம் வென்றுள்ளது.[10] ஆடவர் மற்றும் மகளிருக்கான இரு உலகக்கோப்பைகளையும் வென்ற ஒரே நாடாக செருமனி விளங்குகின்றது.

2014 உலகக்கோப்பையை வென்றதன் மூலம், அமெரிக்கக் கண்டங்களில் உலகக்கோப்பையை வென்ற முதல் ஐரோப்பிய அணி என்ற பெருமையைப் செருமனி பெற்றுள்ளது[11].உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் அதிக கோல்களை அடித்தவர் செருமனியை சேர்ந்த மிரோசுலோவ் குளோசு ஆவார். இவர் இதுவரை 16 கோல்களை அடித்துள்ளார்.

2014 உலகக்கோப்பையை வென்ற செருமனி தலைவர் பிலிப் லாம், 18 ஜுலை 2014 அன்று, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

மேற்சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "Germany: FIFA/Coca-Cola World Ranking". பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு. Archived from the original on 2018-09-15. பார்க்கப்பட்ட நாள் 12 செப்டம்பர் 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. 2.0 2.1 "All matches of The National Team in 1908". DFB. பார்க்கப்பட்ட நாள் 1 ஆகத்து 2008.
  3. "All matches of The National Team in 1912". DFB. Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 1 ஆகத்து 2008.
  4. "All matches of The National Team in 1909". DFB. பார்க்கப்பட்ட நாள் 1 ஆகத்து 2008.
  5. Note that this match is not considered to be a full international by the English FA, and does not appear in the records of the England team
  6. 6.0 6.1 6.2 "Germany". FIFA. Archived from the original on 2018-11-06. பார்க்கப்பட்ட நாள் 14 சனவரி 2012.
  7. "Germany's strength in numbers". UEFA. பார்க்கப்பட்ட நாள் 14 சனவரி 2012.
  8. "Statistics – Most-capped players". DFB. பார்க்கப்பட்ட நாள் 11 அக்டோபர் 2011.
  9. "Statistics – Top scorers". DFB. பார்க்கப்பட்ட நாள் 11 அக்டோபர் 2011.
  10. "Olympic Football Tournament Montreal 1976". FIFA. Archived from the original on 19 ஜனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 28 December 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  11. http://www.uefa.com/worldcup/news/newsid=2123497.html Germany end South American hoodoo

வெளி இணைப்புகள்

[தொகு]