உள்ளடக்கத்துக்குச் செல்

சொற்பொருள் இயல்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சொற்பொருள் இயல்பு (semantic property) என்பது, ஒரு சொல்லின் பொருள் குறிக்கும் கூறுகளைக் கொண்டிருக்கிறது. ஒருவர் ஒரு சொற்றொடரை இன்னொருவருக்குக் கூறும்போது அத் தொடரிலுள்ள ஒவ்வொரு சொல்லும் அதைக் கேட்பவருடைய மூளையில் அச் சொல் தொடர்பான பல தகவல்களாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. இவையே அச் சொல்லின் சொற்பொருள் இயல்புகளாகும்.

எடுத்துக் காட்டாக, சிறுவன் பாடசாலைக்குப் போனான். என்று சொன்னால் தமிழ் மொழியைப் புரிந்து கொள்ளக்கூடியவர்கள் அச் சொற்றொடரிலிருந்து பல தகவல்களைப் பெறுகிறார்கள். சிறுவன் எனும்போது ஆண், இளம் வயதினன் போன்ற தகவல்களையும், பாடசாலை என்பதிலிருந்து பாடம் சொல்லிக்கொடுக்கும் இடம், கட்டிடம் போன்ற தகவல்களையும் புரிந்து கொள்ள முடிகிறது. இவ்வாறு புரிந்து கொள்ளப்படுபவையே அச் சொற்களின் சொற்பொருள் இயல்புகள் எனப்படுகின்றன.

இச் சொற்பொருள் இயல்புகள் சொல்லொன்றின் பொருளின் பகுதிகளாக அமைகின்றன. அப்பா, மகன், நடிகன், எருது, சேவல் போன்ற சொற்களின் பொருள்களின் ஒரு பகுதியாக ஆண் என்னும் சொற்பொருள் இயல்பு உள்ளது. மேலே கூறப்பட்ட சொற்களில் அப்பா, மகன், நடிகன் என்பவற்றில் மனிதன் என்ற சொற்பொருள் இயல்பும் அடங்கியிருப்பதைக் காணலாம்.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சொற்பொருள்_இயல்பு&oldid=2741088" இலிருந்து மீள்விக்கப்பட்டது