உள்ளடக்கத்துக்குச் செல்

சோடியம் சயனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோடியம் சயனேட்டு
Sodium cyanate
இனங்காட்டிகள்
917-61-3 Y
ChEBI CHEBI:1159669
ChemSpider 12922
EC number 213-030-6
InChI
  • InChI=1S/CHNO.Na/c2-1-3;/h3H;/q;+1/p-1
    Key: ZVCDLGYNFYZZOK-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த C009281
பப்கெம் 517096
  • C(#N)[O-].[Na+]
பண்புகள்
NaOCN
வாய்ப்பாட்டு எடை 65.01 கி/மோல்
தோற்றம் வெண் படிகத் திண்மம்
மணம் நெடியற்றது
அடர்த்தி 1.893 கி/செ.மீ3
உருகுநிலை 550 °C (1,022 °F; 823 K)
11.6 கி/100 மி.லி (25 °செ)
கரைதிறன் எத்தனால்: 0.22 கி/100 மி.லி (0 °செ)
டைமெத்தில்பார்மமைடு: 0.05 கி/100 மி.லி (25 °செ)
அமோனியா, பென்சீன் கரைப்பான்களில் சிறிதளவு கரையும்
டை எத்தில் ஈதர் இல் கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு உடல் மைய்ய சாய்சதுரம்
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−400 கிலோ யூல்/மோல்
நியம மோலார்
எந்திரோப்பி So298
119.2 யூல்/மோல் கெல்வின்
வெப்பக் கொண்மை, C 86.6 யூல்/மோல் கெல்வின்
தீங்குகள்
Lethal dose or concentration (LD, LC):
1500 மி.கி/கி.கி (எலி, வாய்வழி)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

சோடியம் சயனேட்டு (Sodium cyanate) என்பது NaOCN என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சயனேட்டு உப்பான இது ஒரு கார்பனால் ஆன சேர்மமாகும் இதுவொரு நெடி ஏதுமில்லாத வெண்மை நிற படிகத் திண்மமாகும். அறை வெப்பநிலையில் உடல் மைய்ய செஞ்சாய்சதுர படிகக் கட்டமைப்பை சோடியம் சயனேட்டு படிகம் ஏற்றுக் கொண்டுள்ளது [1]. தண்ணீர், எத்தனால், டைமெத்தில் பார்மமைடு போன்ற கரைப்பான்களில் சோடியம் சயனேட்டு கரைகிறது. அமோனியாவில் சிறிதளவு கரைகிறது ஆனால் டை எத்தில் ஈதரில் சோடியம் சயனேட்டு கரையாது. 550 பாகை செல்சியசு வெப்பநிலையில் சோடியம் சயனேட்டு கொதிக்கிறது.

தயாரிப்பு

[தொகு]

யூரியா மற்றும் சோடியம் கார்பனேட்டு சேமங்களை சேர்த்து வினை புரியச் செய்து சோடியம் சயனேட்டு தயாரிக்கப்படுகிறது. சோடியம் சயனைடு சேர்மத்தை ஆக்சிசனேற்றம் செய்து சோடியம் சயனேட்டு தயாரிப்பது ஒரு மாற்று வழிமுறையாகும். உருகிய சோடியம் சயனைடு வழியாக ஆக்சிசனை செலுத்தி இந்த ஆக்சிசனேற்ற வினையை மேற்கொள்ளலாம்

2NaCN + O2 → 2 NaOCN

கொழுப்பு ஆல்ககால் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் ஒரு தயாரிப்பு செயல்முறையை சிறிதளவு மாற்றியமைத்து சோடியம் சயனேட்டு தயாரிப்பது சோடியம் சயனேட்டு தொகுப்புக்கான மிக சமீபத்திய தயாரிப்பு முறைகளில் ஒன்று ஆகும். இதற்காக அந்த வினையில் தண்ணீரின் வினையைத் தணிப்பதற்குப் பதிலாக அமோனியா வினை கலவையுடன் சேர்க்கப்படுகிறது.. இதனால் சோடியம் சயனேட்டு முதலில் உருவாகி ஒரு வீழ்படிவாக கரைசலில் இருந்து பிரிகிறது. . வினையில் உருவாகும் இவ்வீழ்படிவு 95-97 சதவீதம் தூய்மையானதாகும். எஞ்சிய சதவீதத்தில் பைகார்பனேட்டின் தடயங்கள் சிறிதளவு உள்ளன. இந்த திண்மப் பொருள் பின்னர் நீரால் கழுவப்பட்டு தேவையான அதிக தூய்மையைக் கொண்ட சோடியம் சயனேட்டு தயாரிக்கப்படுகிறது [2].

வேதியியல் பயன்கள்

[தொகு]

சோடியம் சயனேட்டு ஒரு சிறந்த மின்னணு மிகுபொருளாகும். இந்த மின்னணு மிகுபொருளின் சிறப்புப் பண்புகள் சமச்சீரற்ற ஆக்சாசோலிடோன் உற்பத்தி போன்ற சில உற்பத்தி முறை வினைகளில் முப்பரிமாணச் சிறப்பு கட்டுமானத்திற்கு முக்கிய பங்களிப்பாளராக அமைகின்றன. சோடியம் சயனேட்டு களைக்கொல்லிகளாகப் பயன்படுத்தப்படுகிறது, நைட்ரசனின் உள்ளடக்கம் இருப்பதால் இது உரமாகவும் செயல்படுகிறது. பூச்சிக் கொல்லிகள் தயாரிப்பிலும் சோடியம் சயனேட்டு பயன்படுத்தப்படுகிறது. அமீன்கள் போன்ற கரிமச் சேர்மங்களுடன் சோடியம் சயனேட்டு வினைபுரிந்து பல பயனுள்ள யூரியா வழிப்பெறுதிகள் தயாரிக்க பயன்படுகிறது.

மருத்துவப் பயன்கள்

[தொகு]

சோடியம் சயனேட்டு சேர்மமானது சமச்சீரற்ற யூரியா வழித்தோன்றல்களை உற்பத்தி செய்வதில் ஒரு பயனுள்ள வினையாக்கியாக செயல்படுகிறது. , யூரியா வழிப்பெறுதிகள் பெரும்பாலும் அரைல் ஐசோசயனேட்டு இடைநிலைகளில் உயிரியல் செயல்பாடுகளைக் கொண்டுள்ளன [3]. இத்தகைய இடைநிலைகள் மற்றும் சோடியம் சயனேட்டு ஆகியவை உடலில் புற்றுநோய்க்கான விளைவுகளை சமநிலைப்படுத்துவதற்கான ஒரு வழி முறையாக மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன [4]. அரிவாள் வடிவச் செல் இரத்த சோகை உள்ளவர்களுக்கு இச்செயல்முறை பயன் உள்ளதாக உதவலாம் [5]. மற்றும் மனிதர்களின் உடல் பருமனுக்கு உதவி செய்யும் மெலானின் நிறமிக்கான சில ஏற்பிகளை இச்செயல்முறை தடுக்கிறது [3]. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சோடியம் சயனைடுடன் தயாரிக்கப்படும் வேதியியல் இடைநிலைகள் மருத்துவ ஆய்வுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், அரிவாள் செல் இரத்த சோகை மற்றும் புற்றுநோய்க்கு எதிரான ஆராய்ச்சி போன்ற நிகழ்வுகளில் சோடியம் சயனேட்டு மருத்துவ உலகின் கவனத்தை ஈர்க்கிறது. .

மேற்கோள்கள்

[தொகு]
  1. Waddington, T.C. "Journal of the Chemical Society (Resumed)." 499. Lattice Parameters and Infrared Spectra of Some Inorganic Cyanates - (RSC Publishing). N.p., n.d. Web. 09 Nov. 2014.
  2. Kamlet, Jonas "Patent US2563044 A - Concurrent manufacture of sodium cyanate and fatty alcohols." Google Books. N.p., n.d. Web. 09 Nov. 2014.
  3. 3.0 3.1 Vinogradova, Ekaterina V.; Fors, Brett P.; Buchwald, Stephen L. (11 July 2012). "Palladium-Catalyzed Cross-Coupling of Aryl Chlorides and Triflates with Sodium Cyanate: A Practical Synthesis of Unsymmetrical Ureas". Journal of the American Chemical Society 134 (27): 11132–11135. doi:10.1021/ja305212v. 
  4. Inhibition of Carcinogen-induced Neoplasia by Sodium Cyanate, tert-Butyl Isocyanate, and Benzyl Isothiocyanate Administered Subsequent to Carcinogen Exposure. Lee W. Wattenberg. Cancer Res. August 1981 41:2991-2994
  5. STUDIES WITH INTRAVENOUS SODIUM CYANATE IN PATIENTS WITH SICKLE CELL ANEMIA. Charles M. Peterson, Yang S. Lu, John T. Herbert, Anthony Cerami, and Peter N. Gillette. Journal of Pharmacological Experimental Therapy June. 1974 189:577-584; published online June 1, 1974,
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோடியம்_சயனேட்டு&oldid=2871074" இலிருந்து மீள்விக்கப்பட்டது