உள்ளடக்கத்துக்குச் செல்

சோடியம் டியூட்டராக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோடியம் டியூட்டராக்சைடு
Sodium deuteroxide[1]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சோடியம் டியூட்டராக்சைடு
வேறு பெயர்கள்
  • டியூட்டரேற்ற சோடியம் ஐதராக்சைடு
  • Sodium hydroxide-d
இனங்காட்டிகள்
14014-06-3
ChemSpider 9193979
EC number 237-825-2
InChI
  • InChI=1S/Na.H2O/h;1H2/q+1;/p-1/i/hD
    Key: HEMHJVSKTPXQMS-DYCDLGHISA-M
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 23676750
  • [Na+].[O-][2H]
பண்புகள்
NaOD அல்லது NaO2H
வாய்ப்பாட்டு எடை 41.003 கி/மோல்
தோற்றம் வெண் திண்மம்
கரையும்
தீங்குகள்
GHS pictograms The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H290, H314
P260, P264, P280, P301+330+331, P303+361+353, P304+340, P305+351+338, P310, P321, P363, P405, P501
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

சோடியம் டியூட்டராக்சைடு (Sodium deuteroxide) என்பது NaOD என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். டியூட்டரேற்ற சோடியம் ஐதராக்சைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. NaO2H என்ற வாய்பாட்டாலும் இது அடையாளப்படுத்தப்படுகிறது. பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் டியூட்டரியத்திற்கான வாய்பாடாக 2H [2] என பரிந்துரைத்தாலும் பல்வேறு வேதியியலர்களும் NaOD என்ற வாய்பாட்டையே பயன்படுத்துகின்றனர். சோடியம் ஐதராக்சைடு உப்பைப் போலவே சோடியம் டியூட்டராக்சைடும் வெண்மை நிறமான ஓர் உப்பாகும். இவை இரண்டும் ஓரக மூலக்கூறுகள் என்று கருதப்படுகின்றன. இது ஒரு வலிமையான காரமாகவும், மற்ற டியூட்டரேற்ற சேர்மங்களை தயாரிக்க உதவும் டியூட்டரிய மூலமாகவும் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, குளோரால் நீரேற்றுடன் சோடியம் டியூட்டராக்சைடு வினைபுரியும் போது டியூட்டரேற்ற குளோரோஃபார்ம் உருவாகிறது.[3] சோடியம் டியூட்டராக்சைடு ஓர் அயனச் சேர்மமாகும். சோடியம் நேர்மின் அயனியும் டியூட்டராக்சைடு எதிர்மின் அயனியும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sodium deuteroxide". Sigma aldrich. பார்க்கப்பட்ட நாள் 30 April 2021.
  2. "Provisional Recommendations". Nomenclature of Inorganic Chemistry. Chemical Nomenclature and Structure Representation Division. IUPAC. § IR-3.3.2. Archived from the original on 27 October 2006. பார்க்கப்பட்ட நாள் 2024-08-01.
  3. Breuer, F. W. (1935). "Chloroform-d (Deuteriochloroform)". Journal of the American Chemical Society 57 (11): 2236–2237. doi:10.1021/ja01314a058.