சோடியம் டைகுரோமேட்டு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சோடியம் டைகுரோமேட்டு
| |
வேறு பெயர்கள்
குரோமிக் அமிலத்தின் டைசோடியம் உப்பு
| |
இனங்காட்டிகள் | |
10588-01-9 7789-12-0 (இரு நீரேற்று) | |
ChEBI | CHEBI:39483 |
ChemSpider | 23723 |
EC number | 234-190-3 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 25408 |
வே.ந.வி.ப எண் | HX7750000 HX7750000 (dihydrate) |
| |
UNII | C9G6VY6ZZ4 |
UN number | 3288 |
பண்புகள் | |
Na2Cr2O7 | |
வாய்ப்பாட்டு எடை | 261.97 கி/மோல் (நீரிலி) 298.00 கி/மோல் (இரு நீரேற்று) |
தோற்றம் | அடர் ஆரஞ்சு |
மணம் | நெடியற்றது |
அடர்த்தி | 2.52 கி/செ.மீ3 |
உருகுநிலை | 356.7 °C (674.1 °F; 629.8 K) |
கொதிநிலை | 400 °C (752 °F; 673 K) சிதைவடையும் |
25° செல்சியசில் 73 கி/100 மி.லி | |
பிற கரைப்பான்கள்-இல் கரைதிறன் | மெத்தனால், எத்தனால் போன்றவற்றில் கரையும் |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.661 (இரு நீரேற்று) |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | ICSC 1369 |
ஈயூ வகைப்பாடு | ஆக்சிசனேற்றி (O) புற்று ஊக்கி வகை. 2]] சடுதி மாற்றி வகை. 2]] இனப்பெருக்கம் வகை. 2 மிக நச்சு (T+) தீங்கானது (Xn) அரிக்கும் (C) சுற்று சூழலுக்கு அபாயம் (N) |
R-சொற்றொடர்கள் | R45, R46, R60, R61, R8, R21, R25, R26, R34, R42/43, R48/23, R50/53, |
S-சொற்றொடர்கள் | S53, S45, S60, S61 |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
50 மி.கி/கி.கி |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | சோடியம் குரோமேட்டு சோடியம் மாலிப்டேட்டு சோடியம் டங்சுடேட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | பொட்டாசியம் டைகுரோமேட்டு அமோனியம் டைகுரோமேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சோடியம் டைகுரோமேட்டு (Sodium dichromate) என்பது Na2Cr2O7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும், வழக்கமாக இச்சேர்மம் ஒரு இருநீரேற்றாகவே (Na2Cr2O7•2H2O) கையாளப்படுகிறது. கிட்டத்தட்ட அனைத்து குரோமியம் தாதுக்களும் முதலில் சோடியம் டைக்ரோமேட்டாக மாற்றப்பட்டு பின்னர் இதன் மூலம் செயலாக்கப்படுகிறது. குரோமியத்தை அடிப்படையாகக் கொண்ட அனைத்து சேர்மங்களும் வேதிப் பொருட்களும் இந்த உப்பிலிருந்து தயாரிக்கப்படுகின்றன[1]. வினைத்திறன் மற்றும் தோற்றத்தைப் பொறுத்தவரையில் சோடியம் டைகுரோமேட்டும் பொட்டாசியம் டைகுரோமேட்டும் மிகவும் ஒரே மாதிரியான பண்புகளை பெற்று இருக்கின்றன. இருப்பினும் சோடியம் உப்பு பொட்டாசியம் உப்பை விட இருபது மடங்கு அதிகமாக நீரில் கரையக்கூடியப் பண்பை பெற்றுள்ளது. சோடியம் டைகுரோமேட்டின் கரைதிறன் பூச்சியம் பாகை செல்சியசு வெப்பநிலையில் லிட்டருக்கு 49 கிராம்களாகும். இதன் சமான எடையும் குறைவானதாகும் என்பதால் சோடியம் டைகுரோமேட்டு பெரும்பாலும் விரும்பத்தக்கதாக உள்ளது[2].
தயாரிப்பு
[தொகு]குரோமியம்(III) ஆக்சைடுகளை கொண்ட தாதுக்களிலிருந்து சோடியம் டைகுரோமேட்டு பேரளவில் உருவாக்கப்படுகிறது. தாது ஒரு காரத்துடன் இணைக்கப்பட்டு வினையில் ஈடுபடுத்தப்படுகிறது. ஆக்சிசனுக்கு ஆதாரணமான காற்றின் முன்னிலையில் 1000 ° செல்சியசு வெப்பநிலைக்கு பொதுவாக சோடியம் கார்பனேட்டு காரம் சேர்க்கப்பட்ட வினைக்கலவை, காற்றின் முன்னிலையில் சுமார் 1000 °C வெப்பநிலைக்கு சூடுபடுத்தப்படுகிறது.
வினையின் இந்த படிநிலை குரோமியத்தை கரைத்து சூடான நீரில் பிரித்தெடுக்க அனுமதிக்கிறது. இந்த கட்டத்தில், அலுமினியம் மற்றும் இரும்பு கலவைகள் போன்ற தாதுவின் பிற உட்கூறுகள் சரியாக கரையக்கூடியவையல்ல. விளைபொருளுடன் கந்தக அமிலம் அல்லது கார்பன் டை ஆக்சைடுடன் சேர்த்து அமிலமயமாக்கல் மூலம் டைகுரோமேட்டு பிரித்தெடுக்கப்படுகிறது.
வினையின் இறுதியில் படிகமாகல் மூலம் ஓர் இருநீரேற்றாக டைகுரோமேட்டு தனித்துக் கிடைக்கும். இவ்வழியில் பல மில்லியன் கிலோகிராம் சோடியம் டைகுரோமேட்டு ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படுகிறது.
குறிப்பாக துகள்பொடி போன்ற குரோமியம்(VI) நச்சுத்தன்மையுடையது என்பதால் அத்தகைய தொழிற்சாலைகள் கடுமையான விதிமுறைகளுக்கு உட்படுகின்றன. எடுத்துக்காட்டாக, அத்தகைய சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து வெளியேறும் எந்தவொரு குரோமியம்(VI) பொருளும் ஒரு ஒடுக்கும் முகவருடன் சேர்க்கப்பட்டு சூடாக்கி குரோமியம்(III) பொருளாக திருப்பி அனுப்பப்படுகின்றன. இது சுற்றுச்சூழலுக்கு ஒரு குறைவான அச்சுறுத்தலாகும்.[1] 19.5 °செல்சியசு வெப்பநிலைக்கு கீழ் பத்துநீரேற்று (CAS# 13517-17-4 ) என்ற வரம்பு முதல் அறுநீரேற்று, நான்கு நீரேற்று, இரு நீரேற்று போன்ற இந்த உப்பின் பல்வேறு நீரேற்றுகள் அறியப்படுகின்றன.
62°செல்சியசுக்கு மேற்பட்ட வெப்பநிலையில் இவ்வுப்புகள் தன்னிச்சையாக நீரை இழந்து நீரிலி உப்புகளாக மாறுகின்றன.. 30 முதல் 35 பாகை செல்சியசு வெப்பநிலையில் இது படிகமாகிறது.
வினைகள்
[தொகு]குரோமேட்டுகளும் டைகுரோமேட்டுகளும் ஆக்சிசனேற்றும் முகவர்களாகும். தோல் பதப்படுத்தும் செயல்முறையில் சோடியம் டைகுரோமேட்டு முதலில் கந்தக டை ஆக்சைடு சேர்த்து ஒடுக்கப்படுகிறது
கரிமத் தொகுப்பு வினைகளில் சோடியம் டைகுரோமேட்டு பென்சைலிக் மற்றும் அல்லைலிக் C-H பிணைப்புகளை கார்பனைல் வழிப்பெறுதிகளாக ஆக்சிசனேற்றுகிறது. உதாரணமாக 2,4,6 டிரைநைட்ரோதொலுயீன் அதனுடன் தொடர்புடைய கார்பாக்சிலிக் அமிலமாக ஆக்சிசனேற்றப்படுகிறது. இவ்வாறே 2,3-டைமெத்தில்நாப்தலீனும் சோடியம் டைகுரோமேட்டால் 2,3-நாப்தலீன் டைகார்பாக்சிலிக் அமிலமாக ஆக்சிசனேற்றப்படுகிறது
இரண்டாம் நிலை ஆல்ககால்கள் அவற்றுடன் தொடர்புடைய கீட்டோன்களாக ஆக்சிசனேற்றப்படுகின்றன. உதாரணாமாக மெத்தனால் மெந்தோன் ஆக ஆக்சிசனேற்றம் அடைவதை கூறலாம்.
- 3 R2CHOH + Cr2O72− + 2 H+ → 3 R2C=O + Cr2O3 + 4 H2O
பொட்டாசியம் உப்புடன் தொடர்புடைய சோடியம் டைகுரோமேட்டின் முக்கிய நன்மை என்னவெனில் இது நீரிலும் அசிட்டிக் அமிலம் போன்ற முனைவுக் கரைப்பான்களில் நன்கு கரைகிறது என்பதேயாகும். புளோரினை புளோரினோனாக மாற்றும் வினையிலும் சோடியம் டைகுரோமேட்டு பயன்படுகிறது.
பாதுகாப்பு
[தொகு]மற்ற அனைத்து ஆறினைதிற குரோமியம் சேர்மங்கள் போல சோடியம் டைகுரோமேட்டும் ஒரு தீங்கு விளைவிக்கும் பொருளாகக் கருதப்படுகிறது. இதனால் புற்றுநோய் உண்டாக்கும் ஆபத்தும் இருப்பதாக அறியப்படுகிறது .[3].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Gerd Anger, Jost Halstenberg, Klaus Hochgeschwender, Christoph Scherhag, Ulrich Korallus, Herbert Knopf, Peter Schmidt, Manfred Ohlinger, "Chromium Compounds" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, 2005. எஆசு:10.1002/14356007.a07_067
- ↑ Freeman, F. "Sodium Dichromate" in Encyclopedia of Reagents for Organic Synthesis (Ed: L. Paquette) 2004, J. Wiley & Sons, New York. எஆசு:10.1002/047084289.
- ↑ ILO 1369 - Sodium Dichromate