உள்ளடக்கத்துக்குச் செல்

சோடியம் பெண்டாபோரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோடியம் பெண்டாபோரேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
இரு சோடியம் டெக்காபோரேட்டு
இனங்காட்டிகள்
12007-92-0 N
12631-71-9
EC number 234-522-7
InChI
  • InChI=1S/B5O8.Na/c6-1-8-3-11-4-9-2(7)10-5(12-3)13-4;/q-1;+1
    Key: OLBJLOUJSZVXOT-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 131634859
  • B(=O)OB1OB2OB(OB(O2)O1)[O-].[Na+]
UNII XQG9Q75WDN?
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

சோடியம் பெண்டாபோரேட்டு (Sodium pentaborate) என்பது சோடியம், போரான் மற்றும் ஆக்சிசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து உருவாகும் ஒரு வேதியியல் சேர்மம் ஆகும். NaB5O8 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் இது விவரிக்கப்படுகிறது. இருசோடியம் டெக்காபோரேட்டு (Na2B10O16) என்ற பெயராலும் இதை அழைக்கலாம். ஒளிபுகும் தன்மை கொண்ட நிறமற்ற இப்படிகத் திண்மம் நீரில் கரையக்கூடியதாகும்.

Na2B10O16·nH2O (n = 4[1], 6, அல்லது 10) போன்ற நீரேற்றுகளாகவே இது பெரும்பாலும் காணப்படுகிறது. சோலுபோர்[2] மற்றும் அக்வாபோர்[3] போன்ற பல்வேறு வணிகப் பெயர்களுடன் உரங்களுடன் ஒரு போரான் நிரப்பியாக விவசாயத்தில் சோடியம் பெண்டாபோரேட்டு பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. M. Briggs (2001): "Boron Oxides, Boric Acid, and Borates". Chapter of the Kirk-Othmer Encyclopedia of Chemical Technology. Wiley.
  2. "Solubor DF". Product page in the 20 Mule Team Borax company website. Accessed on 2022-06-27.
  3. "Aquabor 2 MSR". Product page in the Mineira Santa Rita company website. Accessed on 2022-06-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோடியம்_பெண்டாபோரேட்டு&oldid=3452391" இலிருந்து மீள்விக்கப்பட்டது