சோடியம் 1,3-டைதயோல்-2-தயோன்-4,5-டைதயோலேட்டு
இனங்காட்டிகள் | |
---|---|
54995-24-3 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
C3Na2S5 | |
வாய்ப்பாட்டு எடை | 242.31 g·mol−1 |
தோற்றம் | மஞ்சள் நிறத் திண்மம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சோடியம் 1,3-டைதயோல்-2-தயோன்-4,5-டைதயோலேட்டு (Sodium 1,3-dithiole-2-thione-4,5-dithiolate) என்பது Na2C3S5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம கந்தகச் சேர்மமாகும். இதை சுருக்கமாக Na2dmit என்று குறிப்பிடுவர். 1,3-டைதயோல்-2-தயோன்-4,5-டைதயோல் என்ற இணை காரத்தின் சோடியம் உப்பு என்று இவ்வுப்பு விவரிக்கப்படுகிறது. டைத்யோலீன் அணைவுச் சேர்மங்கள் மற்றும் டெட்ராதயாபல்வேலென்கள் தயாரிப்பதற்கான முன்னோடிச் சேர்மமாக சோடியம் 1,3-டைதயோல்-2-தயோன்-4,5-டைதயோலேட்டு கருதப்படுகிறது[1].
கார்பன் டை சல்பைடுடன் சோடியம் சேர்த்து ஒடுக்கம் செய்வதால் 1,3-டைதயோல்-2-தயோன்-4,5-டைதயோலேட்டு சேர்மம் சோடியம் டிரைதயோகார்பனேட்டுடன் சேர்ந்து கிடைக்கிறது.
- 4 Na + 4 CS2 → Na2C3S5 + Na2CS3
dmit2- எனப்படும் 1,3-டைதயோல்கள் வரையறுக்கப்படுவதற்கு முன்னர் கார்பன் டை சல்பைடு ஒடுக்கம் டெட்ரா தயோ ஆக்சலேட்டை (Na2C2S4) கொடுக்கும் என கருதப்பட்டது[2].
C3S52- என்ற ஈரெதிர்மின் அயனி சிங்கேட்டு அணைவின் டெட்ராயெத்தில் அமோனியம் உப்பாக தூய்மைப்படுத்தப்பட்டது. இந்த உப்புடன் பென்சாயில் குளோரைடைச் சேர்த்து சூடுபடுத்தினால் பிசு(தயோயெசுத்தர்) அணைவாக மாற்றலாம்:[3][1]
- [N(C2H5)4]2[Zn(C3S5)2] + 4 C6H5COCl → 2 C3S3(SC(O)C6H5)2 + [N(C2H5)4]2[ZnCl4].
தயோயெசுத்தருடன் சோடியம் மெத்தாக்சைடு சேர்த்தால் சோடியம் 1,3-டைதயோல்-2-தயோன்-4,5-டைதயோலேட்டு உருவாகிறது. : C3S3(SC(O)C6H5)2 + 2 NaOCH3 → Na2C3S5 + 2 C6H5CO2Me
Na2dmit சேர்மம் கந்தக-ஆல்கைலேற்றத்திற்கு உட்படுகிறது[5] இதன் கரைசல்கள் சம உருவ 1,2-டைதயோல்டைதயோலேட்டைக் கொடுக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "4,5-Dibenzoyl-1,3-dithiole-1-thione". Org. Synth. 73: 270. 1996. doi:10.15227/orgsyn.073.0270.
- ↑ Dietzsch, W.; Strauch, P.; Hoyer, E. (1992). "Thio-oxalates: Their Ligand Properties and Coordination Chemistry". Coord. Chem. Rev. 121: 43–130. doi:10.1016/0010-8545(92)80065-Y.
- ↑ G. S. Girolami, T. B. Rauchfuss and R. J. Angelici (1999) Synthesis and Technique in Inorganic Chemistry, University Science Books: Mill Valley, CA.பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0935702482
- ↑ W.T.A.Harrison, R.A.Howie, J.L.Wardell, S.M.S.V.Wardell, N.M.Comerlato, L.A.S.Costa, A.C.Silvino, A.I.de Oliveira, R.M.Silva. "Crystal structures of three [bis(1,3-dithiole-2-thione-4,5-dithiolato)zincate]2− salts: [Q]2[Zn(dmit)2] (Q = 1,4-Me2-pyridinium or NEt4) and [PPh4]2[Zn(dmit)2]•DMSO. Comparison of the dianion packing arrangements in [Q]2[Zn(dmit)2]". Polyhedron 19: 821–827. doi:10.1016/S0277-5387(00)00322-3.
- ↑ Niels Svenstrup, Jan Becher (1995). "The Organic Chemistry of 1,3-Dithiole-2-thione-4,5-dithiolate (DMIT)". Synthesis: 215–235. doi:10.1055/s-1995-3910.